a

“குற்றமிழைத்தவர்கள் எச்சாதியினராயினும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்” – கமல்ஹாசன்


சென்னை கே.கே நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தற்போது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சம்பவத்திற்கு திரைப்பிரபலங்கள் உட்பட பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணைக்கு பின்னர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நடந்த 3 நாட்களுக்கு பின்னர் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “ஆசிரியரே மாணவிகளிடம் அத்துமீறிய பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. முன்னரே புகார் அளித்தும் பள்ளி இவ்விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை எனும் குற்றச்சாட்டு நமது கல்வி நிறுவனங்களின் மீதான நம்பிக்கையை குலைக்கிறது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். வழக்கு விசாரணைக்கு பள்ளி நிர்வாகமும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.

Also Read  புதுச்சேரியில் அடுத்தடுத்து பாஜக கூட்டணி ஆட்சிதான் - அமித்ஷா திட்டவட்டம்!

இந்த விவகாரம் வெடித்ததை அடுத்து வேறு சில பள்ளிகளில் நிகழ்ந்த, நிகழும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழக அரசு உடனடியாக பிரத்யேக விசாரணைக் குழுவினை அமைத்து இந்த குற்றச்சாட்டுகளை போர்க்கால அவசரத்தில் விசாரிக்க வேண்டும்.

இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனாக குழந்தைகளின் பாதுகாப்பை பற்றிய எனது பதட்டமே 27 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ‘மகாநதி’. இன்றும் அந்தப் பதட்டம் குறைந்தபாடில்லை. கண்ணை இமை காப்பது போல நாம் நம் கண்மணிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம்.

Also Read  கிஷோர் கே.சாமி கைது - ட்விட்டரில் முற்றும் வார்த்தை போர்!

ஆன்லைன் வகுப்பு போன்ற இணைய வசதிகளை நம் பிள்ளைகள் கையாளும்போது பெற்றோரும் மிகுந்த கவனத்துடன் சரிபார்க்க வேண்டும். பிள்ளைகள் சொல்லும் பிரச்சினைகளுக்கு காது கொடுக்க வேண்டும். அவர்களது அச்சத்தை போக்கி அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும்.

இந்தப் பிரச்சனையை குறுகிய கால அரசியல் ஆதாயத்திற்காக சாதிப்பிரச்சினையாக திருப்பும் முயற்சி பல தரப்பிலும் நிகழ்வதை காண்கிறேன். குற்றத்தை பேசாமல் குற்றத்தின் தீவிரத்தை பேசாமல் பிரச்சனையை மடைமாற்றினால் அது பெரும்பாலும் குற்றவாளிகளுக்கு சாதகமாகவே முடிந்து விடும் அபாயம் இருக்கிறது. குற்றமிழைத்தவர்கள் எச்சாதியினர் ஆயினும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஓர் அறிவு சமூகமாக நாம் அனைவருமே போராடி நீதியை நிலைநாட்ட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

Also Read  “ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே அராஜகத்தை தொடங்கிய திமுக..” டிடிவி தினகரன் விமர்சனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னைக்கு வருபவர்களுக்கு செக், மாநகராட்சி நடவடிக்கை

Tamil Mint

விஜயகாந்துக்கு வழக்கமான பரிசோதனை – தேமுதிக விளக்கம்

sathya suganthi

டிஎன்பிஎஸ்சி மற்றும் ஜேஇஇ தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியீடு

Tamil Mint

அதிமுக 160 இடங்களில் வெல்ல வேண்டும்: நிர்வாகிகளுக்கு எடப்பாடி கட்டளையா?

Devaraj

விஜயகாந்த்துக்காக பிரேமலதா சிறப்பு பிரார்த்தனை

Tamil Mint

“இந்தியா 2 மடங்கு முன்னேறியிருக்கிறது” – ப.சிதம்பரம் கடும் விமர்சனம்!

Shanmugapriya

கவர்னர் பன்வாரிலால் -மருத்துவமனையில் அனுமதி

Tamil Mint

உலகளவில் 2.80 கோடி பேருக்கு கொரோனா

Tamil Mint

மழை எச்சரிக்கை: கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை

Tamil Mint

“ஆன்லைன் வகுப்புகள் ரெக்கார்ட் செய்யப்பட வேண்டும்” – முதலமைச்சர் அதிரடி!

Lekha Shree

‘ராமதாஸுக்கு வன்னியர்களின் குத்தைக்காரர் என நினைப்பு’… வெளுத்து வாங்கிய வேல்முருகன்…!

malar

கோவில்பட்டியில் கரிசல் இலக்கிய ஆய்வு மையம் அமைக்க எழுத்தாளர்கள் கோரிக்கை.

Tamil Mint