“தலைவரும் நானே… பொதுச்செயலாளரும் நானே” – கமல்ஹாசன் அறிவிப்பு..!


மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் பொறுப்புடன் கூடுதலாக பொதுச்செயலாளர் பொறுப்பையும் ஏற்பதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

மேலும், மக்கள் நீதி மையத்தின் ஆலோசகர்களாக பழ.கருப்பையா மற்றும் பொன்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் துணைத்தலைவராக மவுரியாவும் நிர்வாகக் குழு உறுப்பினராக நடிகை ஸ்ரீப்ரியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் நீதி மையம் கட்சியை வலுப்படுத்த தேவையான மாற்றங்களைச் செய்வேன் என கடந்த மே 24ம் தேதி வீடியோ வாயிலாக கட்சி உறுப்பினர்களிடம் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

இன்று நடந்த இணையவழி கலந்துரையாடலில் கமல்ஹாசன் உரையாற்றினார். அப்போது, “கட்சி உறுப்பினர்களும் நிர்வாகிகளும் தங்களது உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

Also Read  “பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்க வாய்ப்பே இல்லை!” - அமைச்சர் பாண்டியராஜன்

மண், மொழி, மக்கள் காக்க களம் கண்ட நமது கட்சியை வலுப்படுத்தவும் நமது கொள்கைகளை செயல்திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் சில புதிய நியமனங்களை செய்திருக்கிறேன்.

அதன்படி கட்சியின் தலைவர் எனும் பொறுப்புடன் கூடுதலாக கட்சியின் பொதுச்செயலாளர் எனும் பொறுப்பினையும் ஏற்று பணியாற்றியிருக்கிறேன்.

Also Read  தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு?

புதிதாக ஒரு அரசியல் ஆலோசகர்கள், 2 துணைத் தலைவர்கள், மூன்று மாநில செயலாளர்கள், நிர்வாகக் குழுவில் மேலும் ஒரு உறுப்பினர், நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சில அறிவிப்புகள் இனிவரும் நாட்களில் வெளியாகும்” என கூறினார்.

Also Read  போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை - தமிழக அரசு அறிவிப்பு

அதன்படி புது நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசியல் ஆலோசகராக பழ. கருப்பையா மற்றும் பொன்ராஜ், துணைத்தலைவராக மௌரியா, துணைத்தலைவர் (களப்பணி மற்றும் செயல்படுத்துதல்) தங்கவேலு, மாநில செயலாளர் (தகவல் தொழில்நுட்பம் மற்றும் செய்தி தொடர்பு) செந்தில் ஆறுமுகம், மாநில செயலாளர் (கட்டமைப்பு) இளங்கோ, மாநில செயலாளர் (தலைமை நிலையம்) சரத்பாபு, நிர்வாக குழு உறுப்பினர் ஸ்ரீபிரியா, நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மம்தா பானர்ஜியை யாரும் தாக்கவில்லை – தேர்தல் பார்வையாளர்கள் அதிரடி ரிப்போர்ட்

Devaraj

மேற்கு வங்காளம்: கவர்னரை பதவி நீக்கம் செய்ய கோரி ஜனாதிபதிக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடிதம்!!

Tamil Mint

ஓல்டு ஈஸ் கோல்டு, பழைய முறைக்கு மாறிய பள்ளிக் கல்வித் துறை

Tamil Mint

முதலமைச்சர் கொரோன நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.280.20 கோடி வந்துள்ளது – மு.க.ஸ்டாலின்

sathya suganthi

நீட் ஆய்வு குழுவுக்கு அனிதாவின் தந்தை எழுதிய கடிதம்!

sathya suganthi

ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய மாற்றம்

Tamil Mint

தமிழகம்: சரிந்து வரும் கொரோனா பாதிப்பு…!

Lekha Shree

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பொழியும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

ஊட்டி, கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்! தொடர் விடுமுறையால் களைகட்டிய சுற்றுலா தலங்கள்!

Tamil Mint

“மிஸ்டர் மன் கி பாத் பிரதமரே” மோடிக்கு சவால் விட்ட மம்தா பானர்ஜி…!

sathya suganthi

விஷ்ணு விஷாலுக்கு மீண்டும் டும் டும் டும்

Tamil Mint

“ஊடகங்களை மிரட்டும் வகையில் நான் பேசவில்லை” – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

Lekha Shree