“வேலியே பயிரை மேயும் அவலம்!” – கோவை மாணவி தற்கொலை குறித்து கமல் வேதனை..!


கோவையில் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 12ம் வகுப்பு மாணவி வழக்கு குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர், கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார்.

கோவை ஆர். எஸ். புரத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள்பக்கமாக கதவை தாழ்ப்பாள் போட்டு கொண்டு ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்த பெற்றோர் நீண்ட நேரம் கதவை தட்டிப்பார்த்துள்ளனர். கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அவர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, மகள் தூக்கில் தொங்கியதை கண்டு அலறியுள்ளனர்.

இது குறித்து உக்கடம் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து விசாரணையில் பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர், மாணவிக்கு பாலியல் தொல்லை தந்து வந்தது தெரியவந்தது.

Also Read  கொரோனா அப்டேட் - தமிழகத்தில் ஒரே நாளில் 10,448 பேர் பாதிப்பு…!

இதுகுறித்து வீட்டிலும் மாணவி சொல்லி அழுதுள்ளார். இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். ஆனால், இந்த விஷயம் வெளியே தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்பதால் மூடி மறைத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மாணவியின் செல்போனுக்கு அடிக்கடி மெசேஜ் அனுப்பி வந்திருக்கிறார் அந்த ஆசிரியர். மாணவியை ஸ்கூல் ஆடிட்டோரியத்திற்கு வரவழைத்த மிதுன் சக்கரவர்த்தி, மேல் ஆடையை கழற்றி பாலியல் தொல்லையும் அளித்துள்ளதாக தற்கொலை செய்து கொண்ட மாணவியின் நண்பர்கள் தெரிவித்தனர்.

Also Read  காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் எதிர்கட்சிகள் வெற்றி பெற வாய்ப்பு!

தற்கொலைக்கு முன்பு அம்மாணவி “யாரையும் விடக்கூடாது” என எழுதியுள்ள கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று ஆசிரியர் மிதுன் சக்கவர்த்தியை போலீசார் போக்ஸோவில் கைது செய்துள்ளனர். இவர் அப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார்.

போலீசார் பாலியல் தொல்லை, தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்து மிதுன் சக்கரவர்த்தியை சிறையில் அடைத்துள்ளனர்.

Also Read  தமிழகத்தில் புதிதாக 1,152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

இந்த வழக்கு குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாலியல் தொல்லையால் கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அவரது மரணத்திற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும். வேலியே பயிரை மேயும் அவலத்திற்குத் தமிழகம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்” என தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கும்பகோணம் அருகே ஆலங்கட்டி மழை – உற்சாகமடைந்த மக்கள்…!

sathya suganthi

எளிமையாக நடந்து சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்த முதலமைச்சர்…!

Devaraj

ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரம்: அதிமுகவினர் வெளிநடப்பு… சாலையில் அமர்ந்து போராட்டம் ..!

Lekha Shree

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? – முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை!

Lekha Shree

தமிழகத்தில் ஜனவரி 2-ம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது

Tamil Mint

தமிழகத்தில் ஒரே நாளில் 1,562 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு.!

suma lekha

தமிழகத்தில் 3 ஆயிரம் டன் மருத்துவக் கழிவுகள் அழிப்பு: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்!

Tamil Mint

போலீஸுக்கே சிறையா…! சினிமா பாணியில் காவல்துறை அதிகாரி கைது…

VIGNESH PERUMAL

நுழைவுச் சீட்டில் ஆண் புகைப்படம்.. தேர்வு எழுத முடியாமல் தவித்த மாணவி.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Lekha Shree

அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் நோயாளிகள் அவதி!

Lekha Shree

கொரோனா தொற்றால் மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி…! சீமந்தத்தால் நேர்ந்த விபரீதம்…!

sathya suganthi

கோவை: அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்; மின்மயானங்களில் குவியும் சடலங்கள்!

Lekha Shree