“சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!” – தனுஷ், கனிமொழி தற்கொலை குறித்து கமல் ட்வீட்..!


இன்று நீட் தேர்வை சரியாக எழுதவில்லையோ என அரியலூரை சேர்ந்த மாணவி கனிமொழி மன உளைச்சலில் இருந்த நிலையில், தற்கொலை செய்துகொண்டடுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்த ஜெயலக்ஷ்மி-கருணாநிதி தம்பதியினரின் 2வது மகள் கனிமொழி. இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தார்.

அதன்பிறகு, நாமக்கல்லில் உள்ள கிரீன் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துள்ளார். 12ம் வகுப்பு தேர்வில் 600க்கு 562.28 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.

இதையடுத்து மருத்துவ கல்லூரியில் சேர விரும்பிய கனிமொழி கடந்த 12ஆம் தேதி தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வை எழுதி உள்ளார். ஆனால், அந்த தேர்வை சரியாக எழுதவில்லை என கனிமொழி மன உளைச்சல் இருந்ததாக கூறப்படுகிறது.

Also Read  கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியீடு…!

இதையடுத்து நேற்று கனிமொழியின் பெற்றோர் இருவரும் உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று உள்ளனர். இரவு 8 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இப்போது மாணவியின் உடல் அவரது சொந்த ஊரான சாத்தம்பாடிக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Also Read  "சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு விசாரணை 8 வாரத்திற்குள் நிறைவடையும்" - சிபிசிஐடி

இதேபோல் முன்னதாக சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூழையூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் என்னும் விவசாயியின் மகன் தனுஷ் (19) நீட் தேர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் வினியோகமாகிக் கொண்டிருக்க இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு. சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!” என வேதனையோடு பதிவிட்டுள்ளார்.

Also Read  "தெறி", "மாரி" திரைப்படங்களின் மூத்த நடிகர் மரணம்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

PSBB பள்ளி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

sathya suganthi

நிபா வைரஸ்: தமிழகத்தில் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!

Lekha Shree

மத்திய அமைச்சராக பதவியேற்றார் எல்.முருகன்…!

Lekha Shree

மதுரை அருகே தீயணைப்புப்பணியாளர் இருவர் பலி

Tamil Mint

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நவம்பர் வரை இலவச அரிசி

Tamil Mint

செட்டிநாடு குழுமம் ரூ.700 கோடி வரிஏய்ப்பு: வருமான வரித்துறை

Tamil Mint

வரும் 9ந் தேதி சென்னையில் திமுக பொதுக்குழு கூடுகிறது

Tamil Mint

ஆர்யா பண மோசடி வழக்கில் திடீர் திருப்பம் : இரண்டு பேர் அதிரடி கைது

suma lekha

அக்டோபரில் தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல்… தேதிகள் அறிவிப்பு..!

Lekha Shree

மேற்கு வங்க தேர்தலுக்கு பிறகு நாடு தழுவிய ஊரடங்கு – காங்கிரஸ் தலைவர் சொன்ன அதிர்ச்சி தகவல்…!

Devaraj

நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் நில அதிர்வு!

Lekha Shree

சொகுசு காருக்கான நுழைவு வரியை முழுமையாக செலுத்திய விஜய்!

suma lekha