“ஜெயிப்பது நிஜம்” – வெளியானது ‘விக்ரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் நடிக்க உள்ள படம் ‘விக்ரம்’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

கமல், பகத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய மூவரும் இருக்கும் மஸான பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் பணியாற்றவுள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் அவ்வப்போது வந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில் ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் நாயகன் நரேன், விஜய் சேதுபதி, பகத் பாசில் இந்த படத்தில் இணைந்துள்ளனர். மேலும், விஜய் சேதுபதியும், பகத் பாசிலும் இப்படத்தில் கமலுக்கு வில்லன்களாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  தவறான பேஷியல் - ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்ட நடிகை ரைசா!

இப்படத்தில் மொத்தம் 4 வில்லன்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

கமல்ஹாசனுடன் லோகேஷ் கனகராஜ் முதல்முறையாக இணைந்துள்ள படம் இது என்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மேலோங்கியுள்ளது.

மேலும், மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து லோகேஷ் இயக்கும் படம் இது என்பதால் சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

முன்னதாக ‘விக்ரம்’ படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை அடுத்து ரசிகர்கள் இதுகுறித்த ஹேஷ்டேகுகளை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Also Read  சின்னத்திரையை அடுத்து வெள்ளித்திரையிலும் புகழ்-சிவாங்கி காம்போ…! வெளியான 'செம' அப்டேட்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரசிகர்களுக்காக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர் வெளியிட்ட உருக்கமான பதிவு…!

Lekha Shree

“ஒரு மென்மையான நேர்மையான மனிதர் காலமாகிவிட்டார்!” – நடிகர் தனுஷ் இரங்கல்

Lekha Shree

‘குக்கு வித் கோமாளி’ அஸ்வினுக்கு ‘தளபதி’ விஜய் தரப்பில் இருந்து கிடைத்த உதவி!

Lekha Shree

சாலையோர மக்களுக்கு உதவும் ராஷி கண்ணா…!

Lekha Shree

‘ஓ மணப்பெண்ணே’ படத்தின் 2வது பாடல்… வெளியான சூப்பர் அப்டேட்..!

Lekha Shree

பாகுபலி ஹீரோ பிரபாஸுக்கு விரைவில் ‘டும் டும் டும்’… மணப்பெண் யார் தெரியுமா?

Tamil Mint

மீரா மிதுனுக்கு சூர்யா தரமான பதிலடி

Tamil Mint

“ரஜினி மற்றும் விஜய்க்கு என்னிடம் கதைகள் உள்ளன” – மனம் திறந்த கவுதம் மேனன்

Shanmugapriya

‘BEAST’ டைட்டிலில் ஒளிந்திருக்கும் விஜய்யின் வயது? – எப்படி தெரியுமா?

Lekha Shree

தளபதியின் 65 ஆவது படத்தை இயக்குகிறார் நெல்சன் திலீப்குமார்

Tamil Mint

பிரமாண்ட வசூல் சாதனை செய்த காங் vs காட்சில்லா..எவ்வளவு வசூல் தெரியுமா??

HariHara Suthan

“அன்றோ சொன்ன ரஜினி” – இணையத்தில் ட்ரெண்ட் ஆன ஹாஷ்டேக்…!

Devaraj