a

வார்னருக்கு செக் வைத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்! வெளியில் உட்கார வைக்கப்படுவாரா – புதிய கேப்டன் யார்?


நடப்பு ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி கடுமையாக திணறி வருகிறது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது.

5 போட்டிகளில் படு மோசமான தோல்வியைத் தழுவி புள்ளி பட்டியலில் கடைசி இடம் வகிக்கிறது. முதல் சில ஆட்டங்களில் நியூசிலாந்து நட்சத்திரம் கேன் வில்லியம்சன் வெளியில் உட்கார வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தொடக்க ஆட்டங்களில் ஐதராபாத்தில் தோல்விக்கு மோசமான அணி தேர்வே காரணம் என டேவிட் வார்னர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 171 ரன்கள் அடித்து இருந்தாலும் ரன்களை வாரி வழங்கி வெற்றியை நழுவ விட்டது ஐதராபாத் அணி.

இதனால் கடும் நெருக்கடிக்குள்ளான கேப்டன் டேவிட் வார்னர் போட்டிக்குப் பின்னர் மனம் நொந்து பேசினார். டேவிட் வார்னருக்கு பதிலாக கேன் வில்லியம்சனை கேப்டனாக நியமிக்க வேண்டும் என விரேந்தர் ஷேவாக் உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

Also Read  ஆக்சிஜன் வாங்க நிதி அளித்த பேட் கம்மின்ஸ்: வாழ்த்தும் நெட்டிசன்கள்!

இந்நிலையில் நாளை நடைபெற உள்ள ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து இனி வரும் போட்டிகள் வரை ஐதராபாத் அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் செயல்படுவார் என அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

டேவிட் வார்னர் இது நாள் வரை அணியை நல்ல முறையில் வழி நடத்தினார் என்றும் எதிர்வரும் நாட்களில் அவர் களத்திற்கு உள்ளே இருந்தும் வெளியே இருந்தும் அணிக்கு சிறந்த முறையில் அணிக்கு பங்களிப்பு செய்வார் என்றும் ஐதராபாத் அணி அறிவித்துள்ளது.

Also Read  ஐபில் தொடரில் அதிவேக சதம் - தெறிக்க விட்ட வீரர்களின் பட்டியல்

களத்திற்கு வெளியே இருந்தும் அவர் பங்களிப்பு செய்வார் என ஐதராபாத் அணி சுட்டிக் காட்டியிருப்பது அவர் வெளியில் உட்கார வைக்கப்படுவாரா என ரசிகர்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது.

2016ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை டேவிட் வார்னர் தலைமையில் வென்றது குறிப்பிடத்தக்கது. கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணி எப்படி செயல்படப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also Read  ஐபிஎல் 2021: முதல் 3 இடங்களுக்கு நிலவும் கடும் போட்டி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

என்னை யாரும் குறை சொல்லக்கூடாது – எம்.எஸ். தோனி ஓபன் டாக்!

Jaya Thilagan

ஐபிஎல் 2021: ராஜஸ்தான் அணிக்கு முதல் வெற்றி!

Lekha Shree

டிஸ்சார்ஜ் ஆனார் முத்தையா முரளிதரன்!

Devaraj

ஐபிஎல் 2021: மும்பை அணிக்கு தொடரும் சோதனை!

Lekha Shree

வெற்றியை தூக்கி கொடுத்த கொல்கத்தா – மன்னிப்பு கோரிய ஷாருக்கான்!

Lekha Shree

சென்னையில் பயிற்சியைத் தொடங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி!

HariHara Suthan

PM cares மீது நம்பகத்தன்மை இல்லை! – கொரோனா நிதியை வேறுவிதமாக இந்தியாவுக்கு அனுப்பிய பேட் கம்மின்ஸ்!

Lekha Shree

புது மாப்பிள்ளை பும்ராவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…! இது தான் காரணமா?

Devaraj

ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் நடராஜன்!

Jaya Thilagan

சென்னையில் பயிற்சியை தொடங்கும் சிஎஸ்கே! விரைவில் ‘தல’ தரிசனம்!

Jaya Thilagan

சதத்தால் சாதனை படைத்த சஞ்சு சாம்சன்!

Devaraj

தோனிக்கு 12 லட்சம் அபராதம் – சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு அடுத்த சோதனை!

Jaya Thilagan