விவசாயிகள் போராட்டத்தில் பயங்கரவாதிகள் பங்கெடுப்பு: நடிகை கங்கனா ரணாவத்


விவசாயிகள் போராட்டத்தில் பயங்கரவாதிகளும் பங்கெடுக்க தொடங்கியுள்ளதாக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லியில், விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் சமீபத்தில் இப்போராட்டத்தில் பங்கேற்ற 80 வயதுள்ள ஒரு மூதாட்டியின் புகைப்படத்தை பகிர்ந்து, பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், “போராட்டத்திற்கு மூதாட்டியை 100 ரூபாய் கொடுத்து அழைத்து வந்துள்ளனர்” என பதிவிட்டிருந்தார். பிறகு இக்கருத்து சர்ச்சையான நிலையில் அந்த டுவிட்டர் பதிவை நீக்கினார் கங்கனா. 

தற்போது விவசாயிகள் போராட்டம் குறித்து மற்றுமொரு கருத்தை தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Also Read  TikTok Ban | டிக்டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்கு மத்திய அரசு தடை

டிசம்பர் 19 ஆம் தேதி, “நாட்டு மக்களிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். ஒட்டுமொத்த விவசாயப் போராட்டமும் அரசியல் கட்சிகளால் தூண்டி விடப்பட்டுள்ளதில் எந்த சந்தேகமும் இல்லை. பயங்கரவாதிகளும் அதில் பங்கெடுக்க தொடங்கியுள்ளனர். நான் படித்தது, வளர்ந்தது எல்லாமே பஞ்சாப் மாநிலத்தில்தான். அங்கிருக்கும் 99 சதவீத மக்கள் காலிஸ்தானை விரும்பவில்லை. அவர்கள் நாட்டை நேசிக்கிறார்கள். நாட்டைப் பிரிக்க அவர்கள் விரும்பவில்லை.

பயங்கரவாதிகளுக்கும், அந்நிய நாட்டு சக்திகளுக்கும் முன்னால் நாம் பலவீனமானவர்களாகி விட்டோமா? ஒவ்வொரு நாளும் நான் என்னுடைய நோக்கங்களுக்கு விளக்கம் சொல்ல வேண்டியிருக்கிறது. இத்தனைக்கும் நான் ஒரு தேசப்பற்றாளர். ஆனால், திலிஜித் தோசான்ஜ் மற்றும் பிரியங்கா சோப்ரா போன்றோர் செய்து கொண்டிருப்பது என்ன? ஏன் அவர்களை யாரும் கேள்வி கேட்பதில்லை? நாட்டுக்காக நான் செய்வது அரசியல் என்றால் அவர்கள் செய்வது என்ன? தயவுசெய்து அவர்களிடம் கேளுங்கள்” என தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பேசிய காணொளியை பதிவிட்டுள்ளார்.

Also Read  "இப்படிக்கூட பண்ணலாமா!" - வைரலாகும் 'Fanta ஆம்லெட்' வீடியோ… அலறும் நெட்டிசன்கள்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆபாச பட வழக்கு – ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு ஜாமின்…!

Lekha Shree

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் சானு! – பிரதமர் மோடி பாராட்டு!

Lekha Shree

குறை பிரசவத்தில் பிறந்த யானைக்குட்டி – தாய்ப்பால் இன்றி புட்டி பால் குடித்து வளரும் சுட்டி…!

Devaraj

கொரோனா பரிசோதனை வேண்டாம்! – வனப்பகுதிக்குள் ஒளிந்து கொண்ட மக்கள்

Shanmugapriya

ஜனவரி 31-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் – மத்திய சுகாதாரத்துறை

Tamil Mint

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை-அயோத்திக்கு வர வேண்டாம் என வேண்டுகோள்

Tamil Mint

நடப்பாண்டின் முதல் சூரிய கிரகணம் – சிறப்பு என்ன தெரியுமா?

sathya suganthi

இனி 2 டோஸ் தடுப்பூசி போட்டால் தான் அனுமதி: பஞ்சாப் அதிரடி அறிவிப்பு..!

mani maran

பெண்களுக்கு சிறப்பு சலுகை அளித்த ஸ்விகி: குவியும் பாராட்டு

suma lekha

“குளு, குளு PPE Kit” – தாய் பாசத்தால் இளைஞர் உருவாக்கிய கருவி…!

sathya suganthi

மாஸ்க் போடாததால் கை, காலில் ஆணியடித்த போலீஸ் – உ.பி.யில் அரங்கேறிய கொடூரம்

sathya suganthi

தலைநகரில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்..கேள்விக்குறியாகும் பெண்கள் பாதுகாப்பு..!

suma lekha