எந்த ஒரு நடிகருக்கும் எளிதில் கிடைக்காத ஒரு கதாபாத்திரம் எனக்கு கிடைத்தது: கங்கனா ரனாவத் நெகிழ்ச்சி


மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கும் படம் தலைவி. இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

Also Read  விஷாலின் சக்ரா படத்தை வெளியிட தடை... உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

கொரோனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. தற்போது படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐதராபாத்தில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாகத் தொடங்கி இன்று முடிக்கப்பட்டுள்ளது.

“இன்று நாங்கள் வெற்றிகரமாக எங்கள் கனவுத் திரைப்படமான ‘தலைவி’யின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளோம். எந்த ஒரு நடிகருக்கும் எளிதில் கிடைக்காத ஒரு கதாபாத்திரம், எனக்கு கிடைத்தது. நான் அதை மிகவும் நேசித்தேன். 

ஆனால் திடீரென அதற்கு விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. கலவையான உணர்ச்சிகள் மேலிடுகின்றன. வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் இந்த வாய்ப்பு. ‘தலைவி’ படக்குழுவினருக்கு நன்றி” என கங்கனா ரனாவத் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Also Read  கோவை தெற்கில் கமல் தோல்வி - தன் பாணியில் ட்வீட் போட்ட பார்த்திபன்!

‘தலைவி’ படப்பிடிப்பு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து  தற்பொழுது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது படக்குழு.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கோலிவுட் கொண்டாட்டம் – இன்றைக்கு பிறந்தநாள் காணும் பிரபலங்கள்…!

Lekha Shree

‘ஆயிரத்தில் ஒருவன்’ பட பட்ஜெட் விவகாரம்: செல்வராகவன் டீவீட்டால் சர்ச்சை..!

Lekha Shree

‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

‘கோ’ படத்தில் நடிகர் சிம்பு நடித்த காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்…!

Lekha Shree

இணையத்தை கலக்கும் யோகி பாபுவின் மண்டேலா ட்ரைலர்…

HariHara Suthan

குக் வித் கோமாளி பவித்ராவுடன் வந்த நபர் யார்? காதலரா என கேட்கும் ரசிகர்கள்…

HariHara Suthan

திரைக்கு வரும் கர்ணனுக்கு யு/ஏ சான்றிதழ்… எதிர்பார்ப்பை அதிகரிக்கும் புதிய அறிவிப்புகள்….

VIGNESH PERUMAL

‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் புகழ் கோமகன் கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree

“சூரரைப் போற்று படத்தில் சூர்யா சிறப்பாக நடித்துள்ளார்” – ரஹானே புகழாரம்

Tamil Mint

திரிஷாவை திட்டி தீர்க்கும் மீரா மிதுன்: என்ன காரணம்?

Tamil Mint

குதிரை மேல உட்கார்ந்து தான பார்த்துருக்கீங்க – இணையத்தை கலக்கும் கர்ணன் தனுஷின் வேறலெவல் போஸ்டர்!

Devaraj

ஆபாச பட வழக்கு – ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு ஜாமின்…!

Lekha Shree