“சர்வாதிகாரம் தான் தீர்வு!” – வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்து கங்கனா காட்டம்..!


வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக நேற்று பிரதமர் மோடி அறிவித்ததற்கு ஆதரவாக பலர் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

சிலர், இது அரசியல் ஆதாயத்திற்காக கூறப்பட்டுள்ளது என கருத்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது, “வேளாண் சட்டங்களை ஒரு தரப்பு விவசாயிகளுக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை. எனவே, மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம்” என தெரிவித்தார்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Also Read  விஜய் பற்றி ஒற்றை வார்த்தையில் புகழ்ந்த ஷாருக்கான்…!

பல அரசியல் கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் இந்த அறிவிப்புக்கு ஆதரவாக கம்மெண்ட் செய்தனர். ஆனால், எதிர்க்கட்சிகள் மற்றும் சிலர் “இது எதிர்வரும் தேர்தலுக்காக ஆடப்படும் நாடகம்” என கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், சர்ச்சைகளுக்கு பெயர்போன பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது சோகமானது… வெட்கக்கேடானது மற்றும் முற்றிலும் நியாயமற்றது.

Also Read  அதிமுக குடுமி பாஜக கையில்…! வானதி சீனிவாசன் அதிரடி பேட்டி

தெருவில் உள்ளவர்கள் சட்டங்களை இயற்ற தொடங்கிவிட்டார்கள். பாராளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அல்ல. இதுவும் ஒரு ஜிகாதி தேசம் தான். அதனை விரும்பிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

மேலும், அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இந்திரா காந்தியின் 104-வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், “தேசத்தின் மனசாட்சி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது லத்தி தான் ஒரே தீர்வு… சர்வாதிகாரம் தான் ஒரே தீர்மானம்… பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேடம்” என குறிப்பிட்டுள்ளார்.

Also Read  ஒரே மாதத்தில் 8 கிலோ எடையை குறைத்த பிக்பாஸ் பிரபலம்! வைரலாகும் போட்டோ!

இந்த பதிவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரூ.60 லட்சம் இன்சூரன்ஸ் பணத்துக்காக மனைவியை கொன்று நாடகமாடிய கணவர் கைது! போலீஸில் சிக்கியது எப்படி?

Tamil Mint

பெட்ரோல் டீசல் விலை எப்போது குறையும் ? – சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

sathya suganthi

ஸ்ட்ரைக்குக்கு இல்லை விடுப்பு: தமிழக அரசு கண்டிப்பு

Tamil Mint

தியேட்டரில் வெளியாகும் ‘பிக்பாஸ்’ லாஸ்லியாவின் ‘Friendship’ திரைப்படம்…!

Lekha Shree

“மேற்கு வங்க மக்களின் கனவுகள் உதைபடுவதை நான் அனுமதிக்க மாட்டேன்” – பிரதமர் மோடி

Shanmugapriya

இந்தியாவில் 6 மாதத்தில் கொரோனா 3வது அலை – மத்திய அரசின் வல்லுநர் குழு தகவல்!

Lekha Shree

இன்று மாலை வெளியாகும் ‘வலிமை’ Glimpse? வெளியான ‘மாஸ்’ தகவல்..!

Lekha Shree

சிம்புவின் ‘வேட்டை மன்னன்’ படத்துடன் தொடர்புடையதா விஜய்யின் ‘பீஸ்ட்’?

Lekha Shree

இந்திய மக்களுக்காக மோடி பிரதமராக இருக்கிறாரா அல்லது சில குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்காகப் பிரதமராக இருக்கிறாரா? – ராகுல் காந்தி

Tamil Mint

நீண்ட இடைவெளிக்கு பிறகு கிருத்திகா உதயநிதி இயக்கும் படம் – இவர் தான் ஹீரோ…!

sathya suganthi

குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு ஒப்புதல்?

Lekha Shree

முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிபொருட்கள் கொண்ட கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு! – உயிருக்கு ஆபத்தா?

Shanmugapriya