a

ஜெயலலிதா இடத்தை நெருங்கும் கனிமொழி…! திமுகவால் முன்னிறுத்தப்படுவாரா…!


தொட்டில் குழந்தை திட்டம் முதல் தாலிக்கு தங்கம் வரை பல்வேறு பெண்கள் நலத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் மகளிர் வாக்குகளை தன்வசப்படுத்தி வைத்திருந்தார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அவர் மறைவுக்கு பிறகு வலுவான பெண் ஆளுமை என்ற இடம் காலியாக இருந்து வந்தது.

இந்த நிலையில் நடந்து சட்டமன்றத் தேர்தலில் அயராத உழைப்பால் திமுக எம்.பி. கனிமொழி அந்த இடத்தை கைப்பற்றி உள்ளார் என்றே சொல்லலாம்.

ஆண் வாக்காளர்களை விட இந்த தேர்தலில் பெண் வாக்காளர்கள் சற்று அதிகமாக இருந்த நிலையில், கனிமொழியின் அனல் பறக்கும் பிரச்சாரத்தால் திமுகவுக்கு மகளிர் ஓட்டு அதிகரித்து உள்ளது என்பது பொதுவான கருத்து.

கண்ணீர் வழிய முறையிடும் பெண்ணை கட்டி அணைத்து ஆறுதல் படுத்தும் கணிவான, அமைதியான தலைவர் என்பது கனிமொழியின் ஒருமுகம்.

Also Read  ஆயிரம் விளக்கு தொகுதியில் ஜொலிப்பாரா குஷ்பு?

அதே சமயம், கர்நாடக முகத்தை காட்டுவேன் என்ற பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு விடுத்த சவாலில் கனிமொழியின் வேறு முகத்தையும் எதிர்தரப்பினர் பார்க்க நேரிட்டது.

கருணாநிதியின் மகள் என்றால் சும்மாவா என்பது போல இந்த சவாலில் உறுதியும் குலையாவில்லை. கண்ணியத்திற்கும் குறையில்லை.

பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக திமுகவின் முக்கிய தலைவர்கள், பேச்சாளர்கள் மீதே குற்றஞ்சாட்டப்பட்ட போது, பெண்களுக்கு எதிராக கருத்துகள் யாருடையதாக இருப்பினும் கண்டிக்கத்தக்கது என கனிமொழியின் குரல் எழுந்தது.

இது, திராவிட சித்தாந்தத்தின் மீதான தெளிவான நம்பிக்கையும் புரிதலும் கொண்ட அசலான பெரியாரியவாதி என்பதை எடுத்துக்காட்டியது.

Also Read  உறுதியாக வெற்றி பெறுவேன் - காங்கிரஸின் ஒரே பெண் வேட்பாளர் சூளுரை...!

சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய பின், தந்தை கருணாநிதி வழியில் நாள் ஒன்றுக்கு 20 முதல் 25 கூட்டங்களில் பேசி அயராது களப்பணியாற்றினார் கனிமொழி.

இதன் மூலம், மேற்கு அதிமுக வசம் என்ற கருத்தை இந்த தேர்தலில் உடைத்ததில் பெரும் பங்கு கனிமொழிக்கு உண்டு என்கிறது திமுக வட்டாரம்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபோதும், சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாள் அன்று கவச உடையுடன் வந்து தனது ஜனநாயக கடமையாற்ற போது அவரின் உறுதி தன்மை, பலரை வாயடைத்துப் போக செய்தது.

Also Read  திருக்கோவில் எனும் பெயரில் தொலைக்காட்சி-தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மாற்று திறனாளிகள், திருநங்கைகள் என்று விளிம்புநிலை மக்களின் மாண்பு பற்றிய கனிமொழியின் கரிசனம் வெளிப்படையானது.

மக்களுள் ஒருவராகவே தன்னை தொடர்ந்து அடையாளப்படுத்தி வருகிறார் என்பதே கனிமொழியின் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 10 ஆண்டுக்கு பிறகு திமுக ஆட்சி அமைய உள்ள நிலையில், சிறந்த பெண் ஆளுமையாக உருவெடுத்துள்ள கனிமொழி, கட்சியில் முன்னிறுத்தப்படுவாரா என்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணம் திமுக தான்!” – முதல்வர் பழனிசாமி

Lekha Shree

திரிஷாவை திட்டி தீர்க்கும் மீரா மிதுன்: என்ன காரணம்?

Tamil Mint

ஜெயலலிதா நினைவிட அனுமதி மறுப்பு… சபதத்தை நிறைவேற்றுவாரா சசிகலா?

Tamil Mint

மெழுகுவர்த்தி ஏந்தி ஆளுநர் மாளிகையை நோக்கி கனிமொழி பேரணி

Tamil Mint

மருத்துவ கலந்தாய்வு இன்று தொடக்கம்

Tamil Mint

கொரோனா 2ம் அலை தீவிரம்… புதிய பரிமாணத்தில் சித்த மருத்துவமனை!

Lekha Shree

நாகர்கோவில், மும்பை இடையே சிறப்பு ரயில்கள்

Tamil Mint

காந்தியுடன் இணையும் ரஜினி மக்கள் மன்றம்? இது என்ன புது புரளியா இருக்கு?

Tamil Mint

வரும் 23ம் தேதி முதல் பொறியியல் வகுப்புகள் ஆரம்பம்

Tamil Mint

நடிகர் மன்சூர் அலி கானை ஏமாற்றிய தேர்தல் ஆணையம்…… ஏமாற்றத்தில் தமிழக மக்கள்…..

VIGNESH PERUMAL

தை அமாவாசை: ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அலைமோதும் மக்கள் கூட்டம்!

Tamil Mint

தமிழருவி மணியன் அரசியலை விட்டு விலகல்!!

Tamil Mint