a

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைவருக்கும் தடுப்பூசி – அசத்தும் கனிமொழி எம்பி!


கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதின் அவசியத்தையும், பொதுமக்களுக்கு தடுப்பூசி குறித்த அச்சத்தையும் பொதுமக்களை நேரில் சென்று சந்தித்து போக்கி வருகிறார் கனிமொழி எம்.பி.

தடுப்பூசி குறித்து பொதுமக்களுக்கு ஒருபுறம் விழிப்புணர்வு ஏற்படுத்த, மறுபுறம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கில், நடமாடும் தடுப்பூசி மையம் அமைத்து நகரம் முதல் கிராமங்கள் வரை அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார் கனிமொழி.

தடுப்பூசி திட்டம் சிறப்பாக செயல்பட ஊராட்சி தலைவர்களின் பங்கு அவசியம் என கருதி ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கும் நேரில் சென்று ஊராட்சி தலைவர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 403 கிராம ஊராட்சிகளில், 1,745 குக்கிராமங்கள் உள்ளன.

Also Read  மீண்டும் சட்டமன்றத்துக்குள் அடி வைக்குமா கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக கட்சிகள்…!

ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 3 நடமாடும் தடுப்பூசி குழு என மொத்தம் 36 நடமாடும் தடுப்பூசி குழு உருவாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குழுவிலும் இரண்டு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் அடங்கிய நடமாடும் தடுப்பூசி குழு காலை 9 மணி முதல் 12 மணி வரை ஒரு கிராமத்திலும் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு கிராமத்திலும் என இரண்டு வேளையாக சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறது.

Also Read  இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மே மாதத்தில் 38 - 48 லட்சத்தை தொடும்..!

தடுப்பூசி குழு வருகை தொடர்பாக முதல் நாளே அங்குள்ள பொதுமக்கள் அனைவருக்கும் ஆட்டோ விளம்பரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

மேலும் அந்தப் பகுதி ஊராட்சி தலைவர்களும் அலுவலர்களும் பொதுமக்களுக்கு நேரில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

ஆரம்பத்தில் 21 நாட்களுக்குள் இந்த நடமாடும் தடுப்பூசி மையத்தை முடிக்க திட்டமிட்ட நிலையில், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என்பதால் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

Also Read  தமிழகத்தில் 2 வாரங்களில் கொரோனா உச்சம் தொடும் - வெளியான பகீர் தகவல்!

நடமாடும் தடுப்பூசி மையம் அமைத்து, அனைத்து குக்கிராமங்களுக்கும் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம் தமிழகத்திலேயே முதல் முறையாக தூத்துக்குடி மாவட்டத்தில் தான் தொடங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திமுக எம்பிக்கு கொரோனா !!

Tamil Mint

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பா? செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை

Tamil Mint

விருப்பப் படமாக மட்டும் தமிழ் இருக்கும் என்பதை ஏற்க முடியாது: உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை

Tamil Mint

அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரானா

Tamil Mint

நிதி மோசடியில் ஈடுபட்ட அமைப்புகளுக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி

Tamil Mint

இந்த நம்பர் இருந்தா போதும்… தேர்தல் பற்றிய புகார்கள் தெரிவிக்க…

Jaya Thilagan

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடைவிதித்த தமிழக அரசு, அடம்பிடிக்கும் இந்து அமைப்புகள்

Tamil Mint

தமிழக அமைச்சர் துரைக்கண்ணு சற்று முன் காலமானார் – காவேரி மருத்துவமனை

Tamil Mint

அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியில் தொடரும் இழுபறி.. இதுதான் காரணம்..

Ramya Tamil

நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி, இணையதளத்தில் இருந்து நீக்கம்

Tamil Mint

ராமநாதபுரத்தில் நெசவாளர்கள் மற்றும் சிறுவணிகர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி கலந்துரையாடல்

Tamil Mint

அரபிக்கடலில் உருவாகும் டவ்-தே புயல் – தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

Lekha Shree