பசுவை கொன்றால் 5 ஆண்டுகள் சிறைவாசம்: கர்நாடகா அரசின் புதிய சட்டம்


பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் கர்நாடகாவில் பசு வதை தடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம்,  அம்மாநில சட்டமன்றத்தில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி கர்நாடகாவில் இனி பசுக்களை சட்டவிரோதமாக விற்பதோ, வேறு இடத்துக்கு கொண்டு செல்வதோ, கொலை செய்வதோ தண்டனைக்குரிய குற்றமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒருவேளை ஒரு பசுவுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு அது மற்ற பசுக்களுக்கு பரவும் என தெரிய வந்தால், அந்த கட்டத்தில் மட்டுமே அது கொல்லப்படலாம் என்ற புதிய சட்டம் கர்நாடகாவில் அமலுக்கு வந்தது. 

இந்த சட்டத்தின்கீழ் பசுவதை அல்லது பசு கொல்லப்படுவதாக தெரிய வந்தால், உதவி ஆய்வாளர் அல்லது அதற்கு மேல் பதவியில் உள்ள அதிகாரி எந்தவொரு இடத்திலும் சோதனை நடத்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

Also Read  ஐ.சி.சி. கிரிக்கெட் தர வரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்த மிதாலிராஜ்..!

மேலும் குற்றம் செய்யும் நபருக்கு 3 முதல் 5 ஆண்டுகளுக்கு தண்டனை விதிக்கப்படும். சிறைக்காவலுடன் 50 ஆயிரம் முதல் 5 லட்சம்வரை அபராதம் விதிக்கப்படும்.

அம்மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பிரபு செளஹான், “புதிய சட்டத்தில் கால்நடை இறைச்சி என்பது மாட்டிறைச்சி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது எருமை மாட்டை வெட்டி இறைச்சித் தேவைக்கு பயன்படுத்த சட்ட தடங்கல் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.

Also Read  சீனாவுடனான உறவு பழைய நிலைக்கு திரும்புவது கடினம்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

இந்த புதிய சட்டத்தின் நகல்கள் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா கர்நாடகா சட்டமன்றத்தில் குரல் எழுப்பினார். இதைத்தொடர்ந்து பேரவையில் அமளி  ஏற்பட்டது. ஆனால் அந்த பலத்த கூச்சல் மற்றும்  குழப்பத்துக்கு இடையே இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

பழைய சட்டப்படி பசுவதை குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக ஆறு மாத சிறையும் அபராதமாக ரூ. 1000 மட்டுமே இருந்தது. பழைய சட்டப்படி குற்றம் செய்வோருக்கு தண்டனை, அபராதம் உள்ளிட்டவை போதுமானதாக இல்லை என்ற காரணத்தால் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 

Also Read  வெள்ளக்காடான மகாராஷ்டிரா…! உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக உயர்வு..!

மேலும் இந்த புதிய சட்டம் எருது, காளைகள், எருமை மாடு ஆகியவற்றை கொல்ல புதிய சட்டம் தடை விதிக்காதபோதும், 12 வயதுக்கு மேற்பட்ட எருமைகள் அல்லது இனப்பெருக்கத்துக்கோ பால் சுரக்கவோ தகுதியற்றதாக கால்நடை மருத்துவரால் சான்றளிக்கப்பட்ட எருமைகள் மட்டுமே வெட்டப்படலாம் என்று தெளிவுபடுத்தியுள்ளது.

இந்தியாவில் 24 மாநிலங்களில் பசுவதைக்கு சட்ட ரீதியாகவும் கால்நடை பராமரிப்பு விதிகள் மூலமாகவும் தடை உள்ளது. 

அருணாசல பிரதேசம், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில் பசுவதைக்கு என தனி சட்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தனித்து களம் காணும் மாயாவதி – உ.பி., உத்தர்காண்ட்டில் தனித்து போட்டி…!

sathya suganthi

வாய் மற்றும் உதடு வறண்டால் கொரோனா அறிகுறி – புதிய ஆய்வில் தகவல்

Devaraj

விருப்பப் படமாக மட்டும் தமிழ் இருக்கும் என்பதை ஏற்க முடியாது: உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை

Tamil Mint

சிரியாவுக்கு 2,000 டன் அரிசி-இந்தியா வழங்கிய பரிசு

Tamil Mint

2 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் கால்.. அதுவும் வெறும் 75 ரூபாயில்.. ஜியோவின் மலிவான ரீசார்ஜ் திட்டம்..

Ramya Tamil

தமிழகத்தில் மொத்தம் 92 ஆயிரம் இலங்கை தமிழ் அகதிகள் – உள்துறை அமைச்சகம்

Tamil Mint

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் 43 மொபைல் செயலிகள் தடை

Tamil Mint

பன்றிமூக்கு தவளை – கேரளாவில் காணப்படும் அபூர்வ இனம்..!

Lekha Shree

‘Pegasus Project’ – கண்காணிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், அமைச்சர்கள்! வெளியான திடுக்கிடும் தகவல்!

Lekha Shree

5ஜி வழக்கு: நடிகை ஜூஹி சாவ்லா மனு தள்ளுபடி!

Lekha Shree

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.60 லட்சமாக உயர்வு..!

Lekha Shree

ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – பாஜகவுக்கு எதிராக காங்., திமுகவுக்கு மம்தா அழைப்பு

Devaraj