“யார் உண்ணாவிரதம் இருந்தாலும் கவலை இல்லை” – கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை


“யார் உண்ணாவிரதம் இருந்தாலும் சாப்பிட்டாலும் அதைப்பற்றி கவலை இல்லை” என கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பாஜக உண்ணாவிரதம் அறிவித்துள்ள நிலையில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இவ்வாறு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறுகையில், “காவிரியில் கர்நாடகாவிற்கு உரிமை உள்ளது. அணையின் திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேகதாது அணையை கட்டியே தீருவோம்” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

காவிரி அருகே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

Also Read  அடுத்த கல்வி ஆண்டில் ஜே.இ.இ. தேர்வு 4 முறை நடத்தப்படும் - மத்திய கல்வி அமைச்சர்

இந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்பதால் தமிழக அரசு இந்த அணையை கட்டக்கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால், கர்நாடக முதல்வராக புதிதாக பதவியேற்றுக்கொண்ட பசவராஜ் பொம்மை மேகதாது அணை குறித்து பேசுகையில், “மேகதாதுவில் அணை காட்டுவதால் தமிழகத்திற்கு தான் அதிக பலன் கிடைக்கும்” என தெரிவித்திருந்தார்.

Also Read  நடிகர் விவேக்கின் கனவுக்கு கைக்கொடுப்போம்… வாருங்கள்…! தமிழ் மின்ட்டின் புது முயற்சி…!

அதைத்தொடர்ந்து தமிழக பாஜக சார்பில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து கேள்வியெழுப்பியதற்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, “யார் உண்ணாவிரதம் இருந்தாலும் சாப்பிட்டாலும் அதைப்பற்றி கவலை இல்லை” என கூறியுள்ளார்.

Also Read  தெற்காசிய நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் 3 மடங்கு உயர வாய்ப்பு! - அமெரிக்க ஆய்வறிக்கையில் தகவல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வேகமாக பரவும் கொரோனா – கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அறிவிப்பு!

Lekha Shree

அடுத்த டார்கெட் விஜயபாஸ்கர்? கொங்கு மண்டலத்துக்கு “மாஸ்டர் ஸ்கெட்ச்” போடும் உதயநிதி…!

sathya suganthi

தங்கப்புதையலுக்கு ஆசைப்பட்டு பலியான உயிர்கள்…! மூடநம்பிக்கையால் நேர்ந்த துயரம்..!

Lekha Shree

தமிழகத்தில் மூத்த காவல்துறை அதிகாரிகள் மாற்றம்

Tamil Mint

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்கள் காலி: பிரியங்கா காந்தி

Tamil Mint

சென்னையில் ஒரே நிறுவனத்தில் 40 பேருக்கு கொரோனா…!

Devaraj

விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரம் இதோ!

Lekha Shree

கொரோனாவால் மரணத்தின் இறுதி நொடிகளை எண்ணிக்கொண்டிருந்த தாய்… உருக்கமாக பாடல் பாடிய மகன்..!

Lekha Shree

போலி ரெம்டெஸிவிர் மருந்துகளால் கொரோனாவில் இருந்து மீண்ட 90% நோயாளிகள்…!

Lekha Shree

மாறுவேடத்தில் தப்ப பிளான் போட்ட சிவசங்கர் பாபா…! சென்னைக்கு பிடித்து வந்த போலீஸ்…!

sathya suganthi

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 18,522 பேருக்கு கொரோனா-418 பேர் பலி- தமிழகம் மீண்டும் 2-வது இடம்

Tamil Mint

வாட்ஸ்அப் பேமென்ட் வசதிக்கு இந்திய அரசு அனுமதி

Tamil Mint