a

மகனுக்காக தந்தை 300 கி.மீ., பயணம்… ஊரடங்கு காலத்தில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்..!


கர்நாடகாவில் ஒரு தந்தை மகனுக்கு மருந்து வாங்க 300 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூர் அருகே கொப்புலு என்ற கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ஆனந்த (45), நரம்பு சம்பந்தமான நோயால் அவதிப்பட்டு வரும் தனது 10 வயது மகனுக்காக 300 கி.மீ., வரை பயணம் செய்துள்ளார்.

மகனுக்கு மைசூருவில் சிகிச்சை அளித்தும் குணமாகாத நிலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார்.

இரு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவமனைக்கு மகனை அழைத்து வரவேண்டும் என்றும் ஒரு நாள் கூட தவற விடாமல் மாத்திரை சாப்பிட வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

Also Read  ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்க சீரம் நிறுவனத்திற்கு அனுமதி..!

இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனா பரவலால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மகனை பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாமல் தவித்த ஆனந்த் மருந்தும் தீர்ந்ததால் வேறு வழியின்றி பெங்களூருவுக்கு சைக்கிளில் செல்ல முடிவெடுத்தார்.

கனகபுரா பாதை வழியாக இரு நாட்கள் பயணம் செய்து பெங்களூரு சென்றடைந்தார். கிராமத்திலிருந்து சைக்கிளிலேயே வந்திருப்பதை அறிந்த மருத்துவர்கள் அவரது முயற்சியை எண்ணி நெகிழ்ந்தார்.

Also Read  இன்றிரவு 10 மணிக்கு தொடங்குது இரவு நேர ஊரடங்கு

அவரது மகனுக்கு தேவையான மருந்து மற்றும் செலவுக்காக ஆயிரம் ரூபாய் பணமும் கொடுத்து அனுப்பினர்.

அதை பெற்றுக்கொண்டு ஆனந்த அடுத்த இரு நாட்களில் வீடு வந்து சேர்ந்தார். இதுகுறித்து ஆனந்த் கூறுகையில், “எனது மகனுக்கு தேவையான மருந்து வாங்குவதற்காக மைசூரு சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் அலைந்து பார்த்து விட்டேன். ஆனால், தேவையான மருந்து கிடைக்கவில்லை.

Also Read  தேசிய சித்தா தினம் இன்று கொண்டாடப்படுகிறது

ஆனால் ஒரு நாள் கூட மறந்து சாப்பிடாமல் இருக்கக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். இதனால் பெங்களூரு சென்றேன். கஷ்டப்பட்டாலும் எனது மகனின் உடல் நலத்தை எண்ணி பயணம் செய்தேன்” என கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நாய்களையும் விட்டு வைக்காத காம கொடூரர்கள் – ஊரடங்கிற்கு பின் பாலியல் கொடுமைகள் அதிகரிப்பு; அதிர்ச்சி தகவல்கள்

Devaraj

யாருக்கும் தலை வணங்க மாட்டேன்: ராகுல்காந்தி ஆவேசம்

Tamil Mint

வாட்ஸ்அப் பேமென்ட் வசதிக்கு இந்திய அரசு அனுமதி

Tamil Mint

மகாராஷ்டிராவில் இன்று அதிகாலை கட்டடம் இடிந்து விழுந்து 5 பேர் பலி

Tamil Mint

நாம் சாதித்து விட்டோம்: ஜோ பைடனுடன் கமலா ஹாரிஸ் உரையாடல்

Tamil Mint

கொரோனா பரவல் அதிகரிப்பு – மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு!

Lekha Shree

மத்திய பட்ஜெட் 2021…. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா?

Tamil Mint

கொரோனா பாதித்தவர்களை கண்டறியும் ராணுவ நாய்கள்! இந்திய ராணுவம் நடத்திய சோதனையில் வெற்றி!

Tamil Mint

கொரோனா 2ம் அலை – இந்தியாவில் 513 மருத்துவர்கள் பலி…!

Lekha Shree

சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வுகள் ரத்து: தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடப்படும் முறை…!

sathya suganthi

கங்குலி நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்

Tamil Mint

நவம்பர் 28 அன்று ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை ஆய்வு செய்கிறார் பிரதமர் மோடி

Tamil Mint