வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் ஆவேசமாக பேசிய முன்னாள் முதல்வர்..! பேரவையில் சிரிப்பொலி..!


கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா சட்டப்பேரவையில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் ஆவேசமாக உரையாற்றியது சிரிப்பலையை உண்டாக்கியுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 13ம் தேதி பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத் தொடரின் 8வது நாள் கூட்டம் நேற்று காலை தொடங்கியது. கூட்டத்தின் கேள்வி நேரத்தின் போது கர்நாடக முன்னாள் முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தார்.

ஆளும் பாஜக அரசையும் காவல்துறையினரின் செயல்பாடுகளும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக அவருடைய வேட்டி அவிந்தது.

Also Read  அடுத்தடுத்து பதவி விலகும் மத்திய அமைச்சர்கள்! - ஹர்ஷ்வர்தனும் ராஜினாமா!

இதை கவனிக்காத அவர் தொடர்ந்து ஆவேசமாக விமர்சனம் செய்து வந்தார். இதனை பார்த்த அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் சிவக்குமார், அவரின் காதருகே சென்று விவரத்தை கூறியுள்ளார்.

உடனே அவர், “எனது வேட்டி கீழே விழுந்து விட்டதா என்று மைக்கிலேயே கூறியுள்ளார். இதனால் அவையில் சிரிப்பொலி எழுந்தது.

Also Read  விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் - திருமாவளவன் அதிரடி பேட்டி

மேலும், இதுகுறித்து கூறுகையில், “சமீப நாட்களில் எனது வயிறு சற்று பெரிதாகி விட்டது. கொரோனா வந்து சென்ற பிறகு எனது உடல் எடை 5 கிலோ வரை அதிகரித்துவிட்டது. சில நேரங்களில் இவ்வாறு நடந்து விடுகிறது. வேட்டியை சரி செய்துவிட்டு பேசுகிறேன்” என சித்தராமையா கூறினார்.

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது. இப்படி முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா சட்டப்பேரவையில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் ஆவேசமாக உரையாற்றியது கர்நாடக பேரவையை சிரிப்பொலியால் அதிரவைத்துள்ளது.

Also Read  மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா! அலறும் மாநில அரசுகள்! முழு விவரம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘வாழும் புரட்சி தலைவர்’ – முதல்வரை புகழ்ந்து கட்அவுட்! ரசித்து செல்லும் மக்கள்!

Tamil Mint

ஈரோட்டில் போலி ரயில் ஓட்டுனர்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் செய்தனர்.!

mani maran

மேதாது அணை விவகாரம்: ”பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை” – கர்நாடகவின் புதிய முதல்வர்!

suma lekha

” தேசிய விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!” – மு. க. ஸ்டாலின் ட்வீட்

Shanmugapriya

“உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்” – சசிகலா பரபரப்பு பேட்டி!

Lekha Shree

“குட்டி சிரு வந்துவிட்டார்” – மகன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மேக்னா ராஜ்

Tamil Mint

ராஜ் குந்த்ரா வழக்கில் புதிய திருப்பம் – 119 ஆபாச வீடியோக்கள் பறிமுதல்..!

Lekha Shree

போராட்டம் முடியும்வரை டெல்லியிலே இருப்போம்: தமிழ்நாட்டு விவசாய சங்கத்தினர்

Tamil Mint

ஜனநாயகத்தை மோடி மற்றும் கிரண்பேடி பின்பற்றுவதில்லை: முதல்வர் நாராயணசாமி

Tamil Mint

‘கோவிஷீல்ட்’ தன்னார்வலரின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு: சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா

Tamil Mint

இந்திய விமானப்படையின் புதிய தளபதி நியமனம்..!

suma lekha

கொரோனா அச்சம்: குப்பை வண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட பெண்ணின் உடல்!

Shanmugapriya