“வரி குறைப்பு கேட்போரை நடிகர் என பார்ப்பது தவறு” – கார்த்தி சிதம்பரம் எம்.பி.


கார்த்தி சிதம்பரம் எம்.பி. நடிகர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்திய குடிமக்கள் யாராக இருந்தாலும் வரி குறைப்பு கேட்டு முறையிடுவது அவர்களது உரிமை. அவர்களை நடிகன் என பார்ப்பது தவறு” என தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் கடந்த 2012ல் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

Also Read  'பிகில்' படத்தை பார்த்து சிகிச்சை பெற்ற சிறுவனை நேரில் சந்திக்கும் நடிகர் விஜய்..!

இதை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம் அவரது மனுவை தள்ளுபடி செய்ததோடு விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்தார்.

மேலும், “நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்கவேண்டும். சினிமா ஹீரோக்கள் நிஜ வாழ்வில் ரீல் ஹீரோக்களாக இருக்கக்கூடாது.

Also Read  'சீயான் 60'ல் இணையும் விஜய் சேதுபதி? துருவ் விக்ரம் வெளியிட்ட வைரல் புகைப்படம் இதோ!

சமூக நீதிக்காகப் பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது. வரி செலுத்துவது என்பது நன்கொடை கொடுப்பது போன்றது அல்ல. நாட்டிற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு” என கருத்து தெரிவித்தார்.

இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆக வரி கட்டுங்க விஜய் மற்றும் வரி ஏய்ப்பு விஜய் போன்ற ஹேஷ்டேக்குகள் வைரலாகி ட்ரெண்ட் ஆனது. இதனிடையே விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்களும் WeSupportThalapathyVijay என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.

Also Read  நடிகர் விஷாலின் புகார் - கூலாக பதில் சொன்ன ஆர்.பி. சவுத்ரி..!

இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. விஜய்க்கு ஆதரவாக குரல்கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“காவல்துறை மரியாதையுடன் நடிகர் விவேக் உடல் தகனம்” – தமிழக அரசு

Lekha Shree

தமன்னாவின் முதல் தமிழ் வெப்சீரிஸ் இன்று ரிலீஸ்…!

Lekha Shree

தடுப்பூசி… கொரோனா… மாரடைப்பு..! கே.வி.ஆனந்த் மரணத்துக்கு என்ன காரணம்!

Devaraj

ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது: ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணன்

Tamil Mint

வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? கனிமொழியிடம் முறையிட்ட சின்மயி

sathya suganthi

தேர்தலில் வெற்றி பெற மக்களை கொல்கிறீர்கள்: நடிகர் சித்தார்த் விளாசல்

Devaraj

பூம்பூம் மாட்டுக்காரரை வலை வீசி தேடும் ஜிவி பிரகாஷ்…! காரணம் இதுதான்…!

sathya suganthi

அமைச்சரவைக்குள் பூசல்? சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வர தாமதம்: பாதியில் வெளியேறிய சட்ட அமைச்சர்

sathya suganthi

மீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி – ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்கும் மோகன் லால்!

Lekha Shree

ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை இறக்குமதி செய்யும் நடிகர் சோனு சூட்!

Lekha Shree

‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் புகழ் கோமகன் கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree