a

கலைஞர் கருணாநிதி பிறந்தநாள்…! முதலமைச்சர் தொடங்கி வைக்கும் திட்டங்களின் முழு விவரம்…!


திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு முதன்முறையாக திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளது. அவரது மகன் மு.க.ஸ்டாலின், முதலமைச்சராக முதன்முறையாக பதவியேற்றுள்ளார்.

இத்தகைய சிறப்புகளுடன் கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

முதலாவதாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து மாவட்டம் தோறும் 1,000 மரக்கன்றுகள் வீதம் 38,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Also Read  திமுக வெற்றிக்கு உழைக்காவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் - தொண்டர்களை எச்சரித்த ஸ்டாலின்!

அதன்பின்னர் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதையடுத்து தலைமைச் செயலகத்தில் அரிசி கார்டுதாரர்களுக்கு, கொரோனா நிவாரணத் தொகை, இரண்டாவது தவணை, 2,000 ரூபாய் வழங்கும் திட்டம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

Also Read  தலைமைச் செயலகத்தில் உள்ள அறைகளை காலி செய்யும் அமைச்சர்கள்…!

பின்னர் இந்து சமய அறநிலையத் துறை சார்பில், கோவில்களில் மாத சம்பளமின்றி பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு, 4,000 ரூபாய் உதவித்தொகை, 10 கிலோ அரிசி, 13 வகை மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம் துவக்கி வைக்கிறார்.

கொரோனா நோய் தொற்றால் இறந்த, பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய், மருத்துவர், மருத்துவப் பணியாளர்கள், காவலர், நீதிபதிகள்குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க உள்ளார்.

Also Read  தமிழர் கண்டுபிடித்துள்ள வாட்ஸ் அப்பிற்கான மாற்று செயலி! 50 ஆயிரத்தை கடந்துள்ள பதிவிறக்கம்!

மேலும், உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்ட பயனாளிகள், 10 பேருக்கு, அரசு பயன்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்த அனுமதி: சென்னை உயர்நீதிமன்றம்

Tamil Mint

குப்பைகளை கொட்ட ஜனவரி 1 முதல் கட்டணம்!

Tamil Mint

HOD கிட்டயே ஃபண்ட் வாங்குன Class Leader ஸ்டாலின்! இணையத்தை கலக்கும் மீம்ஸ்!

sathya suganthi

வைகோல் போருக்குள் பதுக்கப்பட்ட ரூ.ஒரு கோடி – வருமானவரித்துறை சோதனையில் சிக்கிய எம்எல்ஏவின் ஓட்டுநர் …!

Devaraj

நீட் தேர்வுக்கு எதிராக குரலெழுப்பும் நடிகர் சூர்யா…!

Lekha Shree

ரகுராம் ராஜன்…! நோபல் பரிசு பெற்ற எக்ஸ்பர்ட்…!மு.க.ஸ்டாலினுக்காக சூப்பர் நிபுணர் குழு…!

sathya suganthi

தடையை மீறி சென்னையில் ஸ்டாலின் உண்ணாவிரதம் !!

Tamil Mint

தமிழகத்தில் 236 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு!

Lekha Shree

குழந்தைகள் கடத்தல் வழக்குகளை முறையாக விசாரிக்காத தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்.

Tamil Mint

அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பிளேபாய் – உதயநிதி கமெண்ட்

Tamil Mint

வன்னியருக்கு 10.5% இடஒதுக்கீடு; பாதி கிணறு தாண்டிய பாமக

Bhuvaneshwari Velmurugan

அரசியலில் ரீ என்ட்ரீ – சசிகலா நடராஜனின் வைரலாகும் ஆடியோ…!

sathya suganthi