மாணவியின் தற்கொலையால் தவறாக நினைக்கும் மாணவர்கள்…அவமானத்தில் பள்ளி ஆசிரியர் தற்கொலை..!


கரூர் மாவட்டம், வெண்ணமலை பகுதியில் தனியார் பள்ளியில் படித்துவந்த 12ஆம் வகுப்பு மாணவி கடந்த 19 ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பாலியல் தொல்லையால் தற்கொலை செய்வதாக கூறி கடிதம் எழுதி வைத்து விட்டு இறந்த மாணவியின் தற்கொலை தொடர்பாக வெங்கமேடு காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அதே பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்த சரவணன் என்பவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read  கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் - மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கரூர் மாவட்டம் காமராஜர் நகரில் வசித்து வந்தவர் 42 வயதான சரவணன். இவர் கரூரில் உள்ள தனியார் பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டியில் உள்ள தனது மாமனார் நடராஜன் என்பவரது வீட்டில் சரவணன் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Also Read  இருசக்கர வாகனம் மீது மோதிய சொகுசு கார்! - ஆயுதப்படைக் காவலர் பரிதாப பலி!

இது குறித்து தகவலறிந்து வந்த இன்ஸ்பெக்டர ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆசிரியரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சரவணன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆசிரியர் சரவணன் எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியுள்ளது. அந்த கடிதத்தில், தனது குடும்பத்தில் உள்ளவர்களிடம் மன்னிப்பு கேட்டு எழுதியுள்ளார். “எனக்கும் மாணவியின் தற்கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் மாணவர்கள் என்னை தவறாக நினைக்கிறார்கள், நான் எந்த தவறும் செய்யவில்லை, ஏன் இப்படி கூறுகிறார்கள். மாணவர்கள் என்னை தவறாக நினைப்பதால் அவமானமாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

image

மாணவியின் தற்கொலை குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியர் சரவணனின் தற்கொலையும், அவரது உருக்கமான தற்கொலை கடிதமும் இந்த வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read  2 ஓட்டு வாங்கிய அந்த 3 பேர்…! வரலாற்று சாதனை படைத்த கரூர் வேட்பாளர்கள்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னையில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் திடுக் சம்பவம்

Tamil Mint

டாஸ்மாக் கடைகள் திறப்பு – பாஜக போராட்டம்

sathya suganthi

கோவையில் கடைகள் இயங்க நேரக் கட்டுப்பாடு : மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு

suma lekha

சென்னை: லீலா பேலஸ் ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

Tamil Mint

மு.க. ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்கிறார்: தலைவர் விஜயகாந்த் உடல்நிலை நலமாக உள்ளது: விஜயபிரபாகரன் பேட்டி.!

mani maran

பட்ஜெட் உரையை தொடங்கினார் ஓபிஎஸ் – வெளிநடப்பு செய்த திமுக

Devaraj

எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! – அவர் கொடுத்த செக்-கில் இதை கவனித்தீர்களா?

Lekha Shree

சென்னையில் கொரோனா செலவு எவ்வளவு தெரியுமா? தலை சுற்றும் கணக்கு

Tamil Mint

கல்லூரி மாணாக்கர் இணையவழிக் கல்வி கற்க நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா இலவசம்! – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Tamil Mint

“ஏப்ரல் 6ம் தேதி ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு” – தொழிலாளர் ஆணையம்

Lekha Shree

கங்கை நதியில் மிதந்த 150 சடலங்கள் – மக்கள் அச்சம்!

Shanmugapriya

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இனி எந்த உற்சவமும் நடைபெறாது – கோவில் நிர்வாகம்

Tamil Mint