“கரூர் தமிழ்நாட்டில் தானே உள்ளது?” – கரூர் எம்.பி. ஜோதிமணி திடீர் போராட்டம்…!


கரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து கரூர் எம்.பி. ஜோதிமணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை துவங்கியுள்ளார்.

கரூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஜோதிமணி. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரான தன்னை மக்கள் பணி செய்ய விடாமல் கரூர் மாவட்ட ஆட்சியர் தடுப்பதாக கூறி அவரை கண்டித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை துவங்கியுள்ளார்.

ஆளும் திமுக அரசில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜோதிமணி எம்.பி. அவரது தொகுதிக்குட்பட்ட மாற்றுத்திறனாளி மக்களுக்கு அலிம்கோ நிறுவனம் மூலம் உபகரணங்கள் வழங்க உடனடியாக முகாம் நடத்த கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Also Read  நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி, இணையதளத்தில் இருந்து நீக்கம்

இதுகுறித்து ஜோதிமணி கூறுகையில், “கரூர் பாராளுமன்ற உறுப்பினரான என்னை மக்கள் பணியாற்றவிடாமல் மாவட்ட ஆட்சியர் தடுக்கிறார். மற்ற மாவட்டங்களிலும் திமுக எம்.பி. கனிமொழியின் தூத்துக்குடி தொகுதியிலும் இந்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டு உள்ளது.

ஆனால் கரூர் மாவட்டத்தில் கமிஷன் நோக்கத்திற்காக மட்டுமே இந்த திட்டம் மூலமாக வரக்கூடிய பொது மக்களுக்கு கிடைக்கக்கூடிய உபகரணங்களை கிடைக்கவிடாமல் மாவட்ட ஆட்சியர் தடுக்கிறார்.

ஒன்றிய அரசின் சமூக நீதி அமைச்சகத்திடம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கமுகாம் நடத்த வேண்டும் என்று கேட்டு பெற்று வந்தேன். திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை ஆட்சியர்கள் முகாம் நடத்தும் போது ஏன் கரூர் மாவட்ட ஆட்சியர் நடத்தவில்லை?

இதே முகாமை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடத்தியுள்ளார். கரூர் தமிழ்நாட்டில் தானே உள்ளது?

Also Read  லாக் டவுன் தொடருமா, பொதுப் போக்குவரத்து தொடங்குமா?

மேலும் இந்த சிறப்பு முகாம் நடத்த கோரி கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியும் அவர் கண்டு கொள்ளவில்லை. மத்திய அரசு மூலமாக மாற்றுதிறனாளிகளுக்கு கொடுக்கப்படும் நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் தடுத்து வருகிறார்.

உடனடியாக சிறப்பு முகாம் எப்போது நடத்தப்படும் என உறுதி அளித்தால் மட்டுமே தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவேன்” என கூறியுள்ளார்.

Also Read  சென்னையில் ஒரே நாளில் 7,564 பேருக்கு கொரோனா பாதிப்பு!

கரூர் மாவட்ட ஆட்சியர் ஜோதிமணியிடம் கைகூப்பி வணங்கி போராட்டத்தை கைவிட கூறினார். ஆனால், முகாம் எப்போது நடக்கும் என உறுதி அளித்தால் மட்டுமே கைவிடுவேன் என கூறினார் ஜோதிமணி.

இதனால, மாவட்ட ஆட்சியர் அங்கிருந்து கிளம்பிவிட்டார். அப்போது, “ஆட்சி மாறினாலும் ஊழல் அதிகாரிகள் மாறவில்லை. ஊழல் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது” என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.. ரயில்வே அறிவிப்பு..

Ramya Tamil

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! – அதிமுக, பாஜக வெளிநடப்பு..!

Lekha Shree

நடிகை மீரா மிதுனுக்கு வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்..!

suma lekha

சூடுபிடிக்கும் தூத்துக்குடி இளைஞர் கொலை வழக்கு

Tamil Mint

காங்கிரஸை கண்டு கொள்ளாத திமுக… கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்?

Bhuvaneshwari Velmurugan

“பாஜகவில் சேர்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்” – புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

Tamil Mint

அரசு விரைவு பேருந்துகள் 6-ந்தேதி இரவு முதல் இயக்கம்: 400 பேருந்துகளுக்கு இன்று முன்பதிவு தொடக்கம்

Tamil Mint

பள்ளிகளை திறக்க முடியாததால் தமிழக அரசின் புது ஐடியா

Tamil Mint

இன்றைய தலைப்புச் செய்திகள் | 23.5.2021

sathya suganthi

ஐபேக்குடன் மம்தா போட்ட புதிய ஒப்பந்தம் – பிரசாந்த் கிஷோரின் வியூகம் தொடர்ந்து கைக்கொடுக்குமா?

sathya suganthi

தமிழகத்தில் கருப்பு பூஞ்சையால் முதல் பலி – மேலும் பலருக்கு சிகிச்சை

sathya suganthi