கரூர்: எம்.பி ஜோதிமணியின் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..!


கரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.

மத்திய அரசின் திட்டத்தின் மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம்கள் நடத்தி அவர்களுக்கு உபகரணங்கள் வழங்க வேண்டும் என கரூர் மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் வழங்கப்பட்டு உள்ளது.

Also Read  "என்ன சபதம் எடுப்பாரோ?" - மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு வருகை தரும் சசிகலா…!

ஆனால், கரூரில் முகாம் நடத்தாமல் காலம் தாழ்த்தி ஆட்சியரை கண்டித்து நேற்று காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவரிடம் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டார்.

Also Read  "நீட் தேர்வை வைத்து அரசியல் செய்கிறது திமுக" - அண்ணாமலை குற்றச்சாட்டு..!

தொடர்ந்து 20 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் ஜோதிமணியுடன் வருவாய் அலுவலர் மற்றும் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டார்.

ஆனால், முகாம் நடத்தாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவன் என ஜோதிமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ADIPமுகாம் நடத்தப்படும் என்று உத்திரவாதம் கொடுக்கப்பட்டத்தை அடுத்து எமது உள்ளிருப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

மக்கள் நலனில் அக்கறையுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி” என தெரிவித்துள்ளார்.

Also Read  அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா எழுதிய கடிதம்… அதிமுகவில் நிலவும் பதற்றம்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சிறுநீரகம் பாதித்த சிறுமியை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

Lekha Shree

தமிழகத்தில் 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும் – சீமான்

Devaraj

தமிழகத்தில் ஏப்ரல் 6-ல் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு! ஒரே கட்டமாக தேர்தல்!

Bhuvaneshwari Velmurugan

மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பெற 2 நாட்கள் சிறப்பு முகாம்

Jaya Thilagan

கோவை: கிராம உதவியாளர் காலில் விழுந்த சம்பவத்தில் திடீர் திருப்பம்!

Lekha Shree

”இந்த கிறுக்கன் கிட்ட ஆட்சியை கொடுத்தால் தமிழகத்தின் நிலை” – ட்விட்டரை அலறவிடும் சசிகலா!

Jaya Thilagan

தேர்தல் அறிக்கையை கடைசி வரை கண்ணில் காட்டாத நாம் தமிழர் கட்சி…! கதறும் தமிழர்கள்…!

Devaraj

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு பின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்..!

suma lekha

தமிழக கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை குறையும் – வானிலை மையம் தகவல்…!

Devaraj

“கருத்துக் கணிப்புகள் எல்லாம் எப்போதுமே கருத்து திணிப்புகள் தான்” – அமைச்சர் ஜெயக்குமார்

Shanmugapriya

ஆதாருடன் பான் கார்டை இணைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்?

HariHara Suthan

கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் வெளியே வந்தால் அபராதம் – எச்சரித்த ககன் தீப் சிங்!

Lekha Shree