கேராளா உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3 கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலில் இடது சாரிகள் வெற்றி


கேரளாவில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த 8-ந் தேதி திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி மாவட்டங்களிலும், 10-ந் தேதி கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு ஆகிய மாவட்டங்களிலும், 14-ந் தேதி கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். அதன்படி 8-ந் தேதி நடந்த முதற்கட்ட தேர்தலில் 73.1 சதவீதமும், 10-ந் தேதி நடந்த 2-ம் கட்ட தேர்தலில் 76.78 சதவீதமும், 14-ந் தேதி நடந்த 3-வது கட்ட தேர்தலில் 76.4 சதவீத வாக்குகளும் பதிவானது.

Also Read  இந்தியாவில் ஒரே நாளில் 4,187 பேர் கொரோனாவால் உயிரிழப்பு…!

941 கிராமப் பஞ்சாயத்துகள், 152 மண்டலப் பஞ்சாயத்துகள், 14 மாவட்டப் பஞ்சாயத்துகள், 86 நகராட்சிகள், 6 மாநகராட்சிகளுக்குப் பிரதிநிதிகளை 2.76 கோடிக்கும் மேலான வாக்காளர்கள் தேர்ந்தெடுத்தனர்.

இந்தத் தேர்தலில் சமீபத்திய முடிவுகளின்படி, ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 941 கிராமப் பஞ்சாயத்துகளில் 516-ல் முன்னணியில் இருந்து வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 375 இடங்களில் முன்னணியில் இருக்கிறது. பாஜக 23 இடங்களில் முன்னணியில் இருக்கிறது.

Also Read  யூ டியூப்-பில் எனக்கு மாசம் ரூ.4 லட்சம் வருது: அமைச்சர் நிதின் கட்கரி

இது பற்றி பேசிய முதல்வர் பினராயி விஜயன் ” இந்த வெற்றி கேரள மக்களுடையது. கேரளத்தையும், அரசின் சாதனைகளையும் அழிக்க முயன்றவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளார்கள். மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் ஆளும் அரசைச் சிதைக்க முயன்றவர்களின் முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும், அதன் சந்தர்ப்பவாத அரசியலுக்கும் கேரளத்தில் இடமில்லை என்பதை முடிவுகள் தெரிவித்துவிட்டன. பாஜகவுடன் சேர்ந்துகொண்டு காங்கிரஸ் கட்சி தவறான பிரச்சாரங்களை முன்னெடுத்து, இடதுசாரி அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த முயன்றது. அது தோல்வி அடைந்தது.

Also Read  “வெண்ணெய் கலந்த டீ” – இணையத்தில் வைரலாகும் வித்தியாசமான காம்போ!

இடதுசாரி அரசு தொடர வேண்டும் என்பதை மக்கள் விரும்புகிறார்கள். அதைத்தான் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இடதுசாரிக் கூட்டணி அரசு கடந்த 4 ஆண்டுகளாகச் செய்த வளர்ச்சிப் பணிகளை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

ஆட்சியில் இருந்த எந்த மாநில அரசும் நாங்கள் சந்தித்தது போன்ற இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்திருக்க முடியாது. ஒக்கி புயல், வெள்ளம், நிபா வைரஸ், கரோனா எனப் பல சவால்களைச் சந்தித்தோம். கேரள அரசு செய்த பணிகள், முயற்சிகளை மக்கள் புரிந்துகொண்டு தேர்தலில் வாக்களித்துள்ளனர்” என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பெங்களூரு-ஜோலார்பேட்டை இடையே மீண்டும் மெமு ரெயில் சேவை தொடக்கம்: தென்மேற்கு ரெயில்வே அறிவிப்பு

Tamil Mint

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.60 லட்சமாக உயர்வு..!

Lekha Shree

பழைய வாகனங்களை கொடுத்து புதிய வாகனங்களை வாங்கினால் தள்ளுபடி! – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

Lekha Shree

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கபில் தேவ்

Tamil Mint

பெற்ற மகளை ஐந்து ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தை!

Shanmugapriya

போலி ரெம்டெஸிவிர் மருந்துகளால் கொரோனாவில் இருந்து மீண்ட 90% நோயாளிகள்…!

Lekha Shree

காதலுக்கு பரிசளிக்க ஐபோன் கேட்ட நபர்! – நடிகர் சோனு சூட் சொன்ன பதில் என்ன தெரியுமா?

Shanmugapriya

கோவா பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜ.க வெற்றி

Tamil Mint

முழு ஊரடங்கை அமல்படுத்த முதல்வர் திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..?

Ramya Tamil

நீட் தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடு

Tamil Mint

“50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மார்ச் மாதத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்” – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

Tamil Mint

டெங்கு பாதித்தவர்களை அதிகம் தாக்கும் கொரோனா – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Lekha Shree