a

கவிப்பேரரசுக்கு கேரளாவின் ஓஎன்வி விருது… கடும் எதிர்ப்பு தெரிவித்த ‘மரியான்’ நடிகை!


தமிழ் கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து கேரளாவின் உயரிய விருதான ஓஎன்வி இலக்கிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த விருது கேரளாவின் பிரபல கவிஞர் ஓஎன்வி குருப் அவர்களின் நினைவாக வழங்கப்படுகிறது. இவர் 2016ம் ஆண்டு காலமானார்.

வைரமுத்துவுக்கு இந்த விருதை பரிந்துரைத்தவர்கள் குழுவில் மலையாளம் பல்கலைக்கழகத்தின் Vice Chancellor அனில் வல்லதோல், கவிஞர்கள் பிரபா வர்மா மற்றும் ஆலங்கோடு லீலகிருஷ்ணன் ஆகியோர் இருந்தனர்.

இந்த விருதுக்கு முதல்முறையாக கேரளத்தை சாராத ஒருவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஆனால், இதற்கு பல பிரபலங்கள் தங்களின் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

Also Read  வைரலாகும் அஜித்-சிவகார்த்திகேயனின் அரிய புகைப்படம்…!

அந்தவகையில் பூ, மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை பார்வதி, பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஒருவருக்கு இந்த உயரிய விருதை வழங்குவது நாம் மறைந்த ஓஎன்வி அவர்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய அவமரியாதை என கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவில், “ஓஎன்வி அவர்கள் நம் மாநிலத்தின் பெருமை. அவர் இலக்கியத்திற்கு ஆற்றியிருக்கும் பணி ஒப்பற்றது. அப்படிப்பட்ட ஒருவரது நினைவாக வழங்கப்படும் விருதை 17 பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள ஒருவருக்கு அளிப்பது ஓஎன்வி அவர்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய அவமரியாதை” என தெரிவித்துள்ளார்.

Also Read  சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

கீது மோகன்தாஸ் என்பவர், “இலக்கியத்திற்கு பெயர் போன ஒருவரது பெயரில் வழங்கப்படும் விருந்தானது 17 பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள ஒருவருக்கு வழங்ககூடாது” என தெரிவித்துள்ளார்.

வைரமுத்து மீது எழுந்த 17 பாலியல் குற்றச்சாட்டுகளில் பாடகி சின்மயி கடந்த 2018ம் ஆண்டு அளித்த புகாரும் அடங்கும்.

Also Read  "டாக்டர்" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு - ரசிகர்கள் கொண்டாட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஓடிடியில் ‘ஜகமே தந்திரம்’: ஏமாற்றத்தை வெளிப்படுத்திய தனுஷ்… விளக்கமளித்த தயாரிப்பாளர்..!

Lekha Shree

‘லிப்ட்’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடிய பாடல் வெளியானது…!

Lekha Shree

சர்ச்சையில் சிக்கிய வைரமுத்துவின் புதிய பாடல் – வயது மீறிய உறவுக்கு ஊக்குவிப்பதாக புகார்

sathya suganthi

திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவிய நடிகர் அஜித்…!

Lekha Shree

பிக்பாஸ் ஷிவானி – பாலா மாலத்தீவு பயணம்..? வைரலாகும் புகைப்படங்கள்…

HariHara Suthan

தனுஷ் பேச்சுக்கு மதிப்பே இல்லையா? தயாரிப்பாளர் எடுத்த அதிரடி முடிவு!

Bhuvaneshwari Velmurugan

பிரமாண்ட வசூல் சாதனை செய்த காங் vs காட்சில்லா..எவ்வளவு வசூல் தெரியுமா??

HariHara Suthan

பட வாய்ப்பு இல்லை..அதிக கடன் – சொந்த வீட்டை விற்கும் பிரபல காமெடி நடிகர்..!

HariHara Suthan

அயலான் படப்பிடிப்பு நிறைவு… கொண்டாட்டத்தில் படக்குழு!

Tamil Mint

ஓடிடியில் வெளியாகும் முன்னணி நடிகரின் சூப்பர் ஹிட் இரண்டாம் பாகம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

Tamil Mint

‘விடுதலை’ படத்திற்காக வெற்றிமாறனுடன் முதல்முறையாக இணையும் பிரபல இயக்குனர்…!

Lekha Shree

“ரஜினி மற்றும் விஜய்க்கு என்னிடம் கதைகள் உள்ளன” – மனம் திறந்த கவுதம் மேனன்

Shanmugapriya