கேரள தொழில்நுட்ப மையத்திற்கு ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பெயரை சூட்ட முடிவு: முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்பு


கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது ராஜிவ் காந்தி உயிர் தொழில்நுட்ப மையம். அம்மையத்திற்கு மறைந்த ஆர்.எஸ்.எஸ்., தலைவர் கோல்வால்கர் பெயரை சூட்டுவதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்., எம்.பி., சசி தரூர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருவனந்தபுரத்தில், 1990-ம் ஆண்டு, கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் தொடங்கப்பட்டது. 1991-ல் ராஜிவ் காந்தியின் நினைவாக அவரது பெயரில் உயிர் தொழில்நுட்பத்திற்கான பிரத்யேக ஆய்வு மையமாக மாற்றப்பட்டது. தற்போது இதன் இரண்டாவது வளாகம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. அதற்கு மறைந்த ஆர்.எஸ்.எஸ்., தலைவர் கோல்வால்கர் பெயர் வைக்கப்படும் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்தார்.

Also Read  அளவுக்கு அதிகமாக குடித்ததால் மயக்கமடைந்த தாய்! - பசியால் மயக்கமடைந்து உயிரிழந்த பச்சிளம் குழந்தை!

அதைத்தொடர்ந்து, கம்யூ., மற்றும் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அரசியலுக்கு அப்பாற்றப்பட்ட ஆராய்ச்சி நிறுவனம் இது என கூறியுள்ளார். 

மேலும், “இந்த முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்தால் மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். புதிய வளாகத்திற்கு ஒரு இந்திய விஞ்ஞானியின் பெயரை வைக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை பரிசீலிப்பீர்கள் என நம்புகிறேன். இது நிறுவனத்தின் நற்பெயரைத் தக்க வைக்கவும், பொதுத் தளத்தில் சர்ச்சைகளைத் தவிர்க்க உதவும்” என திரு. விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Also Read  மருந்து எடுக்காமல் ஊசியை மற்றும் குத்திய செவிலியர்! - வைரலாகும் வீடியோ

“மதவாத நோயை ஊக்குவித்தைத் தவிர விஞ்ஞானத்திற்கு கோல்வால்கரின் பங்களிப்பு என்ன? ராஜிவ், விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளித்தார். அதற்காக நிதி ஒதுக்கீடு செய்தார். பா.ஜ.க., தலைவர்கள் யாராவது இதை செய்துள்ளார்களா. 1966-ல் வி.எச்.பி., கூட்டத்தில் விஞ்ஞானத்தினை மதம் மேலாதிக்கம் செய்ய வேண்டும் என பேசியவரை மத்திய அரசு நினைவு கூறுகிறது.

நான் ஒரு உள்ளூர் ஹீரோவை பரிந்துரைக்கிறேன். அவர் புகழ்பெற்ற பாக்டீரியாலஜிஸ்ட்டும் சமூக சீர்திருத்தவாதியுமான டாக்டர் பி.பல்பு. 1863-ல் திருவனந்தபுரத்தில் பிறந்தார். கேம்பிரிட்ஜில் பயின்றார். சீரம் சிகிச்சை மற்றும் வெப்பமண்டல மருத்துவத்தில் நிபுணர். விஞ்ஞானத்திற்கோ, பொது சுகாதாரத்திற்கோ பங்களிப்பு செய்யாத ஒருவரை விட இவர் பொருத்தமாக இருப்பார்” என காங்கிரஸ் எம்.பி., உறுப்பினர், சசி தரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Also Read  மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா...! ஊரடங்கு புதிய அறிவுப்புகளுக்கு வாய்ப்பு...!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு – முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை…!

Devaraj

தொடரும் மிருக வதைகள் – நாயை கட்டிவைத்து கட்டையால் அடித்து கொலை!

Lekha Shree

செல்போன் பேட்டரி வெடித்து சிறுவன் உயிரிழப்பு! – யாருக்கும் சொல்லாமல் அடக்கம் செய்த உறவினர்கள்!

Shanmugapriya

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 10 குறைப்பு! – தேர்தல் யுத்தியா?

Shanmugapriya

டிரைவிங் லைசன்ஸ் காலக்கெடு நீட்டிப்பு

Tamil Mint

“விடா முயற்சி விஸ்வரூப வெற்றி” – 62 வயதிலும் மாடலாக அசத்தும் முதியவர்!

Shanmugapriya

பொறியியல் பாடங்களை இனி தமிழில் படிக்கலாம் – அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி

sathya suganthi

10-ம் வகுப்பை முடித்த ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை

Tamil Mint

கிரிக்கெட் போட்டியின் போது காதலை வெளிப்படுத்திய ரசிகர்!!

Tamil Mint

ஆபாச பட வழக்கு – ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு ஜாமின்…!

Lekha Shree

பாராலிம்பிக்ஸ்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்… இந்திய வீரர் சுமித் அண்டில் உலக சாதனை..!

Lekha Shree

அமிதாப் பச்சன் மீது புகார்

Tamil Mint