வரதட்சணை கேட்டு ஆணியால் குத்தி கொடுமை! நாட்டையே உலுக்கிய விஸ்மயா மரணம்…!


கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் விஸ்மயா வி நாயர்.

24 வயதான விஸ்மயா, ஆயுர்வேத மருத்துவத்தில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு கொல்லம் உள்ள சாஸ்தம்நாடு பகுதியை சேர்ந்த மோட்டார் வாகனத் துறையில் அதிகாரி கிரண் குமார் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

மேட்டர்மோனியில் தானே மணமகளை தேர்வு செய்து, பெற்றோர் ஆசியுடன் பல்வேறு கனவுகளுடன் விஸ்மயா ஏற்றுக்கொண்ட இந்த திருமண வாழ்க்கை அவரது உயிரையே பறித்துள்ளது.

இந்த திருமணத்திற்கு விஸ்மயா குடும்பத்தினர் 100 பவுன் நகை, 1 ஏக்கர் நிலம், 1 டொயோட்டா கார் ஆகியவற்றை வரதட்சணையாக கிரண் குமாருக்கு கொடுத்துள்ளனர்.

ஆரம்பத்தில் விஸ்மயா – கிரண் தம்பதியினர் சந்தோஷமாகவே இருந்துள்ளனர். ஆனால் போக போக கிரண், விஸ்மயாவை அடிப்பதும் உதைப்பதுமாக கொடுமைப்படுத்தி உள்ளார்.

10 லட்சம் வேண்டும், 20 லட்சம் வேண்டும் என்று தினமும் வரதட்சணை கேட்டு விஸ்மயாவை கிரண் மோசமாக தாக்கி கொடுமைப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

வெறும் 24 வயதே நிரம்பிய விஸ்மயா தொடக்கத்தில் கொடுமைகளை சகித்துக் கொண்டு இருந்திருக்கிறார்.

Also Read  ஜோதிடத்தை நம்பி 5 வயது மகனை‌ மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த தந்தை.....

ஆனால் நாள் போக போக கிரண் கொடூரமாக கட்டைகளை கொண்டு தாக்கியும் ஆணிகளை வைத்து முகத்தில் குத்தியும் கொடுமை செய்து உள்ளதாக சொல்லப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் விஸ்மயா கிரண் இருவரும் விஸ்மயாவின் வீட்டிற்கு சென்ற போதும், பெற்றோர் முன்னிலையில், குடித்துவிட்டு விஸ்மயாவை கிரண் அடித்தாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து அப்போதே போலீசில் புகார் அளிக்கப்பட்டு, கிரண் கைது செய்யப்பட்டார். இதையடுத்து பின் இரண்டு குடும்பமும் சுமுகமாக பேசி, சமரசம் செய்த பின் கிரண் விடுதலை செய்யப்பட்டார்.

ஆனால் கணவனுடன் வாழ விருப்பம் இன்றி விஸ்மயா பிறந்த வீட்டிலேயே தங்கிவிட்ட நிலையில்தான் இரண்டு மாதங்களுக்கு முன் விஸ்மயா தேர்வு எழுத கல்லூரி சென்ற போது, கிரண் நேராக கல்லூரிக்கு சென்று விஸ்மயாவை பிக் அப் செய்து தன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

முதல் ஒரு வாரம் அமைதியாக இருந்த கிரண் மீண்டும் குடித்துவிட்டு விஸ்மயாவை மோசமாக தாக்கி, அடித்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால் திருமண உறவு முறிய கூடாது என்ற அச்சத்திலும் பெற்றோரின் குடும்ப கவுரவத்தை எண்ணியும் அப்பா, தம்பியிடம் சொல்லாமல் விஸ்மயா அமைதியாக இருந்துள்ளார்.

Also Read  தலைவிரித்தாடும் வரதட்சணை கொடுமை..! கதறி அழும் வழக்கறிஞர்..!

தனது சித்தப்பா மகனிடம் மட்டும் விஸ்மயா தனக்கு நடக்கும் கொடூரங்களை சொல்லி இருக்கிறார். எண்டே மொகத்தில் சவட்டி.. ஒத்திரி அடிச்சு (என் முகத்தில் உதைக்கிறார்.. அதிகமாக அடிச்சிட்டார்) என்று சித்தப்பா மகனிடம் மெசேஜ் அனுப்பி விஸ்மயா வருந்தி இருக்கிறார். தன்னை மோசமாக தாக்கிய புகைப்படங்களையும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் விஸ்மயா வாட்ஸ் ஆப்பில் அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில்தான் நேற்று அதிகாலை விஸ்மயா மர்மமான முறையில் கிரண் வீட்டில் இறந்து கிடந்தார்.

இது குறித்து விஸ்மயாவின் அப்பா திரிவிக்ரமன் போலீசில் புகார் அளித்துள்ளார். விஸ்மயாவை கிரண்தான் கொடுமைப்படுத்தி கொன்றதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

உடலில் மோசமான காயங்களுக்கான அடையாளங்கள் இருப்பதால் கண்டிப்பாக இது கொலைதான் என்று போலீசும் சந்தேகிக்கிறது.

அதோடு இதை வரதட்சணை கொடுமை கொலையாக பதிவு செய்து உள்ளனர்.
ஆனால் விஸ்மயாவின் பிரேத பரிசோதனையில் தூக்கில் தொங்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கிரண் கைது செய்யப்பட்டுள்ளார்.

Also Read  பிரதமருக்கு கட்டப்படவிருக்கும் பிரம்மாண்ட இல்லம்

இந்த நிலையில், விஸ்மயாவின் வாட்ஸ் ஆப் மெசேஜ்கள் வெளியாகி நாட்டையே உலுக்கி உள்ளது. கிரண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கண்டன குரல்கள் வலுத்து வருகிறது.

தனக்கு வரதட்சணையாக தரப்பட்ட காரின் மைலேஜ் சரியில்லை என்று சொல்லி, அதற்கு பதிலாக பணம் கேட்டதாகவும், அதனாலேயே மனைவியிடம் தகராறு வந்ததாகவும் கிரண் குமார் போலீசில் சொல்லி உள்ளார்.

2 நாட்களுக்கு முன்பாக தங்கள் 2 பேருக்கும் சண்டை நடந்தது உண்மை தான் என்றும் அதனால் இரவெல்லாம் அழுது கொண்டிருந்தாள், ஆனால் தற்போது அவரை அடித்தது போல் காயங்களுடன் வரும் போட்டோக்கள் எதுவும் உண்மையில்லை, எல்லாம் போலியானவை, விஸ்மயா உறவினர்கள் சொல்வதும் பச்சை பொய் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கிரண்குமார் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர் படுத்திய நிலையில், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். கிரண் குமார் மீது குடும்ப வன்முறை மற்றும் வரதட்சனை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திரைப்படமாகிறது பிசிசிஐ தலைவர் கங்குலியின் வாழ்க்கை வரலாறு… யார் ஹீரோ தெரியுமா?

Lekha Shree

நீட் தேர்வு தேதியை அறிவித்த தேசிய தேர்வு முகமை!

Jaya Thilagan

காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவன்…!

Devaraj

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 18,522 பேருக்கு கொரோனா-418 பேர் பலி- தமிழகம் மீண்டும் 2-வது இடம்

Tamil Mint

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு, அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

Tamil Mint

18+ அனைவருக்கும் தடுப்பூசி போட முடியாது…! தட்டுப்பாட்டால் திணறும் மாநிலங்கள்…!

Devaraj

தமிழகத்தில் தேர்தலுக்குப் பிறகு முழு ஊரடங்கா? – சுகாதாரத்துறை கூறுவது என்ன?

Shanmugapriya

ஐபேக்குடன் மம்தா போட்ட புதிய ஒப்பந்தம் – பிரசாந்த் கிஷோரின் வியூகம் தொடர்ந்து கைக்கொடுக்குமா?

sathya suganthi

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான உ.பி. எம்எல்ஏவுக்கு பாஜக தந்த வாய்ப்பு…! அதிர்ச்சியில் மக்கள்…!

Devaraj

ரியல் ஹீரோவுக்கு அங்கீகாரம்: குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு பரிசு தொகை அறிவிப்பு!

Shanmugapriya

மலையாளக் கரையோரம் ஸ்வப்னா செய்த பலே வேலைகள்

Tamil Mint