ஆன்லைன் ஷாப்பிங் பரிதாபங்கள்! – ஆர்டர் செய்தது பாஸ்போர்ட் கவர்… கிடைத்தது ஒரிஜினல் பாஸ்போர்ட்..!


ஆன்லைனில் பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்த நபருக்கு பாஸ்போர்ட் கவருடன் ஒரிஜினல் பாஸ்போர்ட்டும் கிடைத்துள்ள வேடிக்கையான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உலகமெங்கிலும் ஆன்லைன் வர்த்தகம் பெருகி வரும் நிலையில், இதுபோன்ற சில வேடிக்கையான சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.

அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் டீலர்கள் மூலம் மக்கள் வீட்டிலிருந்து ஷாப்பிங் செய்ய உதவியாக இருக்கின்றன.

ஆனால், சில நேரங்களில் ஆர்டர் செய்த பொருளுக்கு பதில் வேறொரு பொருள் கிடைப்பது போன்ற செய்திகளை அடிக்கடி பார்க்கமுடிகிறது.

Also Read  "கொரோனா நிலை குறித்து பேசினால், எனக்கும் தேசத்துரோகி பட்டம் தான்!" - பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!

அப்படிதான் பாஸ்போர்ட் கவருக்கு ஆர்டர் செய்தவருக்கு ஒரிஜினல் பாஸ்போர்ட் கிடைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்த மிதுன்பாபு என்ற நபர் கடந்த 30ஆம் தேதி ஒரு பிரபல இணைய தளத்தில் பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்துள்ளார்.

Also Read  புதிய கல்விக் கொள்கையின் தமிழ் மொழிபெயர்ப்பை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

ஆர்டர் செய்த இரு நாட்களில் பொருள் வீட்டுக்கு வந்துள்ளது. அதை பிரித்து பார்த்தவருக்கு அதிர்ச்சி. காரணம் அவருக்கு பாஸ்போர்ட் கவருடன் ஒரிஜினல் பாஸ்போர்டும் அந்த ஆர்டரில் வந்துள்ளது.

இந்த பாஸ்போர்ட் திருச்சூரை சேர்ந்த பஷீர் என்ற 10 வயது சிறுவனின் ஒரிஜினல் பாஸ்போர்ட் என தெரியவந்து உள்ளது. அதனபின், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு இ-மெயில் மூலம் தகவல் தெரிவித்த போது இதுபோன்ற தவறு இனிமேல் நடக்காது என பதில் அளித்துள்ளனர்.

Also Read  மத்திய அரசு ஊழியர்கள் பணி ஓய்வு வயது: புது உத்தரவு

தனக்கு வந்த பாஸ்போர்ட்டில் போன் நம்பர் கிடைக்காத காரணத்தினால் பாஸ்போர்டிலிருந்த முகவரிக்கு அந்த பாஸ்போர்ட்-ஐ அனுப்பி வைத்துள்ளார் மிதுன்பாபு.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இணைய வழி வங்கிச் சேவை நாளை தடை

Tamil Mint

மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது – ஜார்கண்ட் முதல்வர்

Shanmugapriya

உலகின் மிக குள்ளமான குட்டிப்பசு… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

கொரோனா 3ம் அலை தொடங்கியதா.? 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு .!

suma lekha

கொரோனா ஊரடங்கு எதிரொலி – களையிழந்த மணாலி…!

Lekha Shree

திருப்பதியில் 11-ம் தேதி முதல் இலவச தரிசனம் ரத்து!

Shanmugapriya

அடுத்த 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு தொடரும்…. பிரதமர் அறிவிப்பு…. மக்கள் கவலை…

VIGNESH PERUMAL

இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்வு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!

Devaraj

“கோழிகள் முட்டையிடவில்லை” – போலீஸிடம் புகாரளித்த நபர்!

Shanmugapriya

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்…!

Lekha Shree

பண்டிகை நாளில் தாக்குதல் நடத்த திட்டமா? பாகிஸ்தான் பயங்கரவாதி டெல்லியில் கைது…!

Lekha Shree

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பிய ஐஸ்வர்யா ராய், நிம்மதி பெருமூச்சுவிடும் ரசிகர்கள்

Tamil Mint