மூச்சுத்திணறல் பிரச்சனையால் அவதிபட்ட இளைஞர்… காரணம் அறிந்து ஷாக் ஆன மருத்துவர்கள்..!


இளைஞர் ஒருவர் சில ஆண்டுகளாகவே மூச்சுத்திணறல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதனால், அவரது நுரையீரலை ஸ்கேன் செய்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கேரளாவின் கொச்சி பகுதியில் உள்ள ஆலுவா என்னும் இடத்தில் வசித்து வருபவர் சூரஜ் (32). இவர் சில ஆண்டுகளாகவே மூச்சுத்திணறல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும், அவருக்கு அடிக்கடி இருமல் தொல்லையும் இருந்துள்ளது.

இதற்கு பல மருத்துவர்களை பார்த்து பரிசோதனை செய்துள்ளார். ஆனால், இந்த பிரச்சனையில் இருந்து சூரஜிற்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.

இந்நிலையில் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கே அவரது நுரையீரலை ஸ்கேன் செய்துள்ளனர். அப்போது அவரது நுரையீரலில் சிறிய பொருள் ஒன்று சிக்கி இருப்பது தெரியவந்துள்ளது.

Also Read  மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

அதனால், அறுவை சிகிச்சை செய்து அப்பொருளை நீக்க முடிவுசெய்து சூரஜிற்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அப்போது சிக்கியிருந்த அந்த சிறிய பொருள் பேனா மூடி என்பது தெரியவந்துள்ளது.

அப்பொருளை மருத்துவர்கள் நீக்கி விட்டனர். தற்போது சூரஜ் நலமுடன் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் கூறுகையில், “சூரஜிற்கு பள்ளி பருவத்தில் பேனா மூடி கொண்டு விசிலடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

அப்படி அவர் 9ம் வகுப்பு படிக்கும் போது ஒருமுறை விசிலடிக்கையில் பேனா மூடியை விழுங்கியுள்ளார். அப்போது உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

Also Read  இதுவரை யாருக்குமே கொரொனா பாதிப்பு ஏற்படாத ஒரே கிராமம்.. எங்குள்ளது தெரியுமா..?

அதன்பின்னர் அவருக்கு சில நாட்கள் கழித்து மூச்சுத்திணறல் மற்றும் இருமல் அடிக்கடி ஏற்பட துவங்கியுள்ளது. அதற்கு இந்த பேனா மூடி அவரது நுரையீரலில் சிக்கியதே காரணம். சூரஜ் சுமார் 18 ஆண்டுகள் இதனால் அவதிப்பட்டு வந்துள்ளார்” என தெரியவித்தனர்.

இப்படி சுமார் 18 ஆண்டுகளாக பேனா மூடி சிக்கியதை கூட அறியாமல் அலட்சியமாக விட்டதால் அவதிப்பட்டு வந்த இளைஞர் குறித்த தகவல் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Also Read  பாஜக எம்பிக்கு சொந்தமான இடத்தில் 30 ஆம்புலன்ஸ்கள்; அதிர்ச்சி சம்பவம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விவசாயிகளின் உயிரிழப்புக்கு மத்திய அரசின் புறக்கணிப்பே காரணம்: சோனியா காந்தி

Tamil Mint

“பொய் சொன்னால் முகத்தில் ஓங்கி அறைவேன்!” – நடிகர் சித்தார்த் ட்வீட்

Lekha Shree

முன்னாள் நடிகைக்கு கொரானா

Tamil Mint

கவுதம் கம்பீரின் தொண்டு நிறுவனம் மீது நடவடிக்கை! – நடந்தது என்ன?

Lekha Shree

கொரோனா நோயாளிகளுக்கு அடுத்தடுத்து நிகழும் சோக முடிவு – சிகிச்சை மையத்தில் தீவிபத்து

Devaraj

ராஜ் குந்த்ரா வழக்கில் புதிய திருப்பம் – 119 ஆபாச வீடியோக்கள் பறிமுதல்..!

Lekha Shree

குழந்தையை அடித்து உதைத்த சைக்கோ தாய்: இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு.!

mani maran

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வுச் சுமையை குறைக்கும் தெலங்கானா அரசு!

Tamil Mint

அச்சுறுத்த தயாராகும் “டெல்டா பிளஸ்” கொரோனா – புதிதாக கண்டுபிடிப்பு…!

sathya suganthi

பிரசாந்த் கிஷோர் பெயரில் மோசடி : காங்கிரஸ் தலைவர்களுக்கு விபூதியடித்த மர்மநபர்கள்…!

sathya suganthi

இங்கிலாந்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! – 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரிப்பு!

Shanmugapriya

மின்னல் தாக்கி பலர் உயிரிழப்பு… பிரதமர் மோடி இரங்கல்..!

Lekha Shree