‘சபாஷ் மாப்பிள்ளை!’ – கட்டிய தாலியுடன் மணமகளை அழைத்து சென்ற மணமகன்..!


கேரளாவில் மணமகன் ஒருவர் கட்டிய தாலியுடன் மணமகளை அழைத்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த மணமகனுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த சுதீஷ் மற்றும் சுருதிக்கு திருமணம் நடைபெற்றது.

Also Read  கொரோனா எதிரொலி: மீண்டும் ஊரடங்கு..! எங்கு தெரியுமா?

திருமணம் முடிந்தவுடன் மணமகள் சுருதி அணிந்திருந்த 50 பவுன் நகைகளை கழற்றி அவரின் பெற்றோரிடத்தில் ஒப்படைத்துவிட்டு கட்டிய தாலியுடன் மணமகளை அழைத்து சென்றுள்ளார் சுதீஷ்.

இந்த சம்பவம் வைரல் ஆனதை அடுத்து சுதீஷுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Also Read  கேரளாவில் காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலை திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

முன்னதாக கேரளாவில் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட விஸ்மயா விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து பல பெண்கள் வரதட்சணை கொடுக்கமாட்டோம் என கூறினர்.

அதைத்தொடர்ந்து சில ஆண்களும் நாங்கள் வரதட்சணை கேட்கமாட்டோம் என இணையத்தில் பல கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

Also Read  நாடு தழுவிய விவசாயிகள் போராட்டம் - போலீஸ், துணை ராணுவப் படைகள் குவிப்பு!

ஆனால், அந்த கருத்துக்களையெல்லாம் இன்று மெய்யாக்கியுள்ளார் சுதீஷ். இப்படி ஒவ்வொரு ஆண்மகனும் முடிவெடுத்தால் நாட்டில் வரதட்சணை மரணங்கள் ஒன்றுகூட இருக்காது என பலபேர் சுதீஷை முன்னுதாரணமாக மேற்கோள்காட்டுகின்றனர்!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இது அது இல்லையே! – திருடிய செல்போனை மீண்டும் உரிமையாளரிடம் ஒப்படைத்த திருடன்!

Shanmugapriya

அதிரடி ஆஃபர்களுடன் களமிறங்கியுள்ள சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள்!!!

Lekha Shree

வங்கிகளின் வேலை நேரம் குறைப்பு…!

Lekha Shree

கொரோனா பரவல் அதிகரிப்பு – முழு ஊரடங்கு அறிவிப்பு!

Lekha Shree

ஆற்று நீரில் கலந்த கொரோனா வைரஸ்… மக்கள் கலக்கம்!

Lekha Shree

சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கு ரூ.1.18 லட்சம் கோடி

Tamil Mint

கேரளாவில் ஒருவருக்கு சிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு

sathya suganthi

கைக்குழந்தையுடன் போக்குவரத்தை சீர்செய்த சிங்கப்பெண் – குவியும் பாராட்டு

HariHara Suthan

இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு… உலக சுகாதார அமைப்பு தகவல்!

Lekha Shree

உ.பி. வீதிகளில் கொரோனா பேய் – யோகி அரசை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்…!

Devaraj

பண்டிகை காலமான நவம்பர் மாதத்தில் இந்திய ஆட்டோமொபைல் துறையில் வளர்ச்சி

Tamil Mint

“எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்” – ஒரே நாளில் சோனியா, கெஜ்ரிவாலை சந்தித்த மம்தா பானர்ஜி..!

Lekha Shree