உதவி கேட்ட மாணவர்: துடைப்பத்தால் அடிக்கனும்னு சொன்ன எம்எல்ஏ.!


கேரளாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அக்கட்சியை சேர்ந்த கொல்லம் தொகுதி எம்எல்ஏ முகேஷ் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். முக்கேஷ் மலையாளத்தில் மிகப் பிரபலமான நடிகர். மேலும், தமிழ் படங்களான ஐந்தாம்படை, ஜாதி மல்லி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். எம்எல்ஏ முகேஷ் செல்போன் எண்ணிற்கு மாணவர் ஒருவர் உதவி கேட்டு அழைத்திருக்கிறார். அழைப்பை எடுத்த முகேஷ், “இந்த எண்ணை உனக்கு தந்தது யார்” என அந்த மாணவரிடம் காட்டமாக கேட்கின்றார். அந்த மாணவர், “எனது நண்பர் கொடுத்தார்” என கூறியதும், “உன் நண்பனை அடிக்க வேண்டும். உன் தொகுதி எம்.எல்.ஏ யார்.?” என்று ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார். அதற்கு அந்த மாணவன் தெரியாது எனக் கூறியதும் கோபத்தின் உச்சிக்கு சென்ற முகேஷ், “எம்எல்ஏ பெயர் தெரியாத உன்னை எல்லாம் துடைப்பத்தால் அடிக்க வேண்டும்” என கூறுகிறார். இந்தியா ஆடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்தில் அடுத்தடுத்து கேள்விகளால் ஆளுங்கட்சியை துளைத்து எடுத்தனர். பிரச்சனையின் வீரியம் உணர்ந்த மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் அந்த மாணவரை சி.ஐ.டி.யு. அலுவலகத்திற்கு அழைத்து சமாதானம் செய்தனர்.

Also Read  சாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தலைமை ஆசிரியர் மீட்பு... உறவினர்களின் வியூகம் வெளிச்சத்திற்கு வந்தது.....

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உடல் எடையை குறைக்க உதவும் சியா விதைகள்! எப்படி பயன்படுத்துவது?

Tamil Mint

மனைவியிடம் முன்னாள் காதலியின் புகழ்… மனைவி செய்த செயல்… அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது….

VIGNESH PERUMAL

குங்குமம் கொடுத்ததில் வந்த பிரச்சனை…. கல்யாணத்தை நிறுத்திய மணமகன் வீட்டின் மீது பெண் வீட்டார் புகார்…

VIGNESH PERUMAL

முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு உள்ளதா? – நிர்மலா சீதாராமன் விளக்கம்!

Shanmugapriya

காதலி செய்த விபரீத செயல் காதலனின் வீட்டை சூறையாடிய பெற்றோர்….

VIGNESH PERUMAL

ஏம்மா இதுக்கெல்லாமா தற்கொலை செய்வீங்க…. பட்டதாரி பெண் தவறான முடிவு…

VIGNESH PERUMAL

விராட் கோலி, அனுஷ்கா சர்மா குறித்து வெளியான சுவாரஸ்ய தகவல்! – ஆச்சரியத்தில் மூழ்கிய இணையவாசிகள்!

Shanmugapriya

திருமண நிகழ்வில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது தாய்…

VIGNESH PERUMAL

பிரபாஸ் நடிக்கும் ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸ் தேதிஅறிவிப்பு.!

mani maran

கலெக்டரை சற்று பதறவைக்கும் செயல்… “எதார்த்த சண்டைக்கே தீக்குளிக்க முயற்சியா”….!

VIGNESH PERUMAL

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் – ஒரே நாளில் ஒரு கோடிப் பேர் முன்பதிவு

Jaya Thilagan

நடிகர் கமலின், மக்கள் நீதி மையம் கட்சிக்கு, பேட்டரி டார்ச் லைட்’ சின்னம் ஒதுக்க கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Tamil Mint