கேரளா: 28 ஆண்டுகளுக்கு பிறகு கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு


28 வருடங்கள் காத்திருப்புக்குப் பிறகு, கேரளாவில் நடந்த கன்னியாஸ்திரி அபயாவின் மர்மமான மரணம் குறித்த தீர்ப்பு இன்று (டிசம்பர் 22) அறிவிக்கப்பட்டது. 

திருவனந்தபுரத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றம் 1992 இல் கன்னியாஸ்திரிகளை கொலை செய்த குற்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட தந்தை தாமஸ் கோட்டூர் மற்றும் சகோதரி செஃபி ஆகியோரை தண்டித்துள்ளது.

ஆனால் தண்டனையின் அளவு வியாழக்கிழமை அன்று முடிவு செய்யப்படும் என சிபிஐ நீதிமன்றம் கூறியுள்ளது.

1992 ஆம் ஆண்டு, கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பியஸ் Xth கான்வென்ட்டின் கிணற்றில் 19 வயது கன்னியாஸ்திரியான அபயா இறந்து சடலம் கண்டெடுக்கப்பட்டது. 

Also Read  வெளிநாடுகளில் முறைகேடாக சொத்து சேர்த்தாரா சச்சின் டெண்டுல்கர்?

மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) குழு, சகோதரி அபயா, தாமஸ் கோட்டூர் மற்றும் ஜோஸ் பூத்ரிக்காயில் ஆகிய இரண்டு பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரி செஃபியை கொலை செய்துள்ளனர் என தெரிவித்தது. ஆனால் ஜோஸ் பூத்ரிக்காயில் மட்டும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்.

சிபிஐ-யின் கண்டுபிடிப்புகளின்படி, குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார் மற்றும் கன்னியாஸ்திரியான  செஃபியின்  தவறான உறவை கொலை செய்யப்பட்ட கன்னியாஸ்திரி அபயா வெளியில் கூறிவிடுவார் என்ற பயத்தில் இருவரும் அவரை கொலை செய்துள்ளனர் என தெரிவித்தது. 

Also Read  இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு… 40 பேர் மண்ணுக்குள் சிக்கியிருக்க வாய்ப்பு..!

இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2008 ஆம் ஆண்டில் பாதிரியாரையும் கன்னியாஸ்திரியையும் கைது செய்தனர். 

பிறகு ஆகஸ்ட் 2019 இல் நடைபெற்ற விசாரணையின் போது, எட்டு சாட்சிகள் விரோதமாக மாறினர். அபயாவின் செருப்புகள், திறந்த குளிர்சாதன பெட்டி கதவு, ஒரு தண்ணீர் பாட்டில், அவரகளது முக்காடு போன்ற பொருட்களை ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டது.

Also Read  கொரோனா தடுப்பு - மோடிக்கு மன்மோகன் சிங் சொன்ன 5 யோசனைகள்...!

மேலும் பாதிக்கப்பட்டவர் தரப்பில் வாதிட்டவர், அபயா தற்கொலை செய்திருந்தால் அவர்களது செருப்புக்கள் கிணற்றின் அருகே இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் சமையலறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது என கூறினார்.

சாட்சிகள் விரோதமாக மாறிபோதும், ஆதாரங்கள் அனைத்தும் அபயா போராடி இருந்துள்ளதை நிரூபித்தமையால் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் தண்டிக்கப்பட்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டிஜிட்டல் கட்டண பரிவர்த்தனையில் இந்தியா முதலிடம்…!

Lekha Shree

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஒரு குட்நியூஸ்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..

Ramya Tamil

எப்போதில் இருந்து வழக்கமாக ரயில் சேவை – ரயில்வே அதிகாரி தந்த அப்டேட்…!

Devaraj

இது கூட சாத்தியமா? – ஒரு வீட்டையே அப்படியே தூக்கிச்சென்ற நாகாலாந்து மக்கள்! | வைரல் வீடியோ

Tamil Mint

ஒரே அமர்வில் 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டம்: மத்திய சுகாதாரத்துறை

Tamil Mint

100 கோடி தடுப்பூசி டோஸ் செலுத்தி இந்தியா சாதனை..!

Lekha Shree

அலெக்ஸாவிடம் I Love You சொன்ன சிங்கிள்ஸ்…. ஒரு நாளைக்கு எத்தனை முறை தெரியுமா?

Tamil Mint

#JusticeForChaitra… பாலியல் வன்கொடுமைக்கு ஆளக்கப்பட்டு 6 வயது சிறுமி கொலை.. ஹைதராபாத்தில் கொடூரம்..!

suma lekha

பாரிஸ் ஒப்பந்தத்தை பின்பற்றி வரும் இந்தியா சிறப்பாக செயலாற்றுகிறது – ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

Tamil Mint

’எய்ம்ஸ் மாடல்’.. உதயநிதிக்கே டஃப் கொடுக்கும் பீகார் இளைஞர்கள்..!

suma lekha

சுற்றுலா தளமாக மாறும் சட்டப்பேரவை சுரங்கப் பாதை.. 2022 இல் திறப்பு!

suma lekha

அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை 2 கி.மீ தூரம் தோளில் சுமந்து சென்ற பெண் எஸ்.ஐ! – குவியும் பாராட்டுகள்!

Tamil Mint