a

எடுத்துக்காட்டாக விளங்கும் கேரளா! – கரோனா தடுப்பூசிக்காக ₹800 நிதி உதவி செய்யும் மக்கள்!


கொரோனா தடுப்பூசி காக 800 ரூபாயை நிதி உதவி அளித்து வருகின்றனர் கேரளாவை சேர்ந்த பொதுமக்கள்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. தமிழ்நாடு கேரளா கர்நாடகா மகாராஷ்டிரா டெல்லி பஞ்சாப் போன்ற மாநிலங்களில் தொற்று பரவல் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இந்த மாநிலங்களில் ஒரு நாளிலேயே பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Also Read  இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா உயிரிழப்புகள்! நிலவரம் என்ன?

பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 18 வயதிற்கு மேற்பட்டோர் மே 1ஆம் தேதி முதல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கோவிஷில்டு தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தடுப்பூசியின் விலையை நிர்ணயம் செய்தது. அதன்படி மத்திய அரசுக்கு ரூபாய் 150 க்கும், மாநில அரசுக்கு ரூபாய் 400 க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூபாய் 600 க்கும் கொரோனா தடுப்பூசி விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  "ஊரடங்கு தளர்வுகளை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர்.." ஸ்டாலின் பேச்சு

இது ஒருபுறமிருக்க கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என்று அம்மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்திருந்தார். அதனை அடுத்து மாநில அரசுக்கு உதவி செய்யும் விதமாக அமைச்சர் நிவாரண நிதியின் வங்கி கணக்கிற்கு ஒவ்வொரு கேரள மக்களும் ரூபாய் 800 நிதியாக அளித்து வருகின்றனர். இதன் மூலம் மாநில அரசு கொரோனா தடுப்பூசி பெறுவதற்காக நிதிப் பற்றாக்குறை ஏற்படாது என்று அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

VaccineChallenge என்ற ஹேடேக்கின் கீழ் அவர்கள் அளித்த நிதியின் புகைப்படத்தையும் பதிவிட்டு வருகின்றனர். கேரள மக்களின் இந்த செயல் இணையத்தில் பாராட்டுகளை பெற்று வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னையில் நிரம்பிய மருத்துவமனை படுக்கைகள்! அவதியில் கொரோனா நோயாளிகள்!

Devaraj

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் தடுப்பூசி போட எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும்..?

Ramya Tamil

திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி..!

Lekha Shree

“வீட்டில் ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிப்பது எப்படி? ” – கூகுளில் தேடும் இந்தியர்கள்!

Shanmugapriya

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி!

Lekha Shree

கேரளாவில் கொரோனா பாதிப்பிலும் தடையின்றி நடந்த திருமணம்; குவியும் வாழ்த்துகள்

Jaya Thilagan

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் – ஒரே நாளில் 24,492 பேருக்கு பாதிப்பு

Devaraj

கொரோனா பரவல் எதிரொலி – சென்னை-கொல்கத்தா விமான சேவை ரத்து!

Jaya Thilagan

சென்னையில் 1000% உயர்ந்த கொரோனா பாதிப்பு! இரவு நேர லாக்டவுனுக்கு வாய்ப்பு!

Lekha Shree

Truecaller செயலியில் இனி கோவிட் மருத்துவமனைகளை தேடலாம்..? எப்படி தெரியுமா..?

Ramya Tamil

தமிழகத்தில் 6000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

Lekha Shree

கொரோனா இரண்டாம் அலை…. அடுத்த 3 மாதங்கள் மிகவும் முக்கியமானது…. சுகாதார துறை அமைச்சர் எச்சரிக்கை……..

VIGNESH PERUMAL