கேரளா: டிக்கெட் எடுக்காத பயணியை எட்டி உதைத்த காவலர் சஸ்பெண்ட்…!


கேரளாவில் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணித்த நபரை எட்டி உதைத்த ரயில்வே உதவி துணை ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் மாவேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஞாயிற்றுக்கிழமை அன்று டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்திருக்கிறார் ஒருவர்.

இந்நிலையில் கண்ணூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் உடன் இணைந்து ரயில்வே போலீஸ் மற்றும் கேரள போலீஸ் அதிகாரிகள் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்ட போது ஒருவர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தது தெரியவந்துள்ளது.

மேலும் அவர் மதுபோதையில் பயணித்ததாக சந்தேகங்கள் எழுந்ததால் ஆத்திரமடைந்த உதவி துணை ஆய்வாளர் அவரை எட்டி உதைத்து தள்ளியிருக்கிறார்.

Also Read  நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவு செய்தியறிந்த 3 ரசிகர்கள் மாரடைப்பால் மரணம்..!

ரயிலில் பயணித்த ஒருவர் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதை பார்த்தவர்கள் அந்த காவலரை வெகுவாக சாடினர். இதனையடுத்து அத்துமீறிய காவல் அதிகாரியை அரசு பணி இடைநீக்கம் செய்தது.

இதையடுத்து அந்த பயணி மது அருந்திவிட்டு பயணம் செய்ததாகவும் அவரை இரயிலில் இருந்து வெளியேற்ற தான் தான் அப்படி செய்ததாகவும் அந்த காவலர் விளக்கமளித்துள்ளார்.

Also Read  டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை

அனலை, அந்த பயணி யாரையும் தொந்தரவு செய்யவில்லை எனவும் அவர் மது போதையில் இருந்ததாக தெரியவில்லை எனவும் சக பயணிகள் தகவல் அளித்துள்ளனர்.

மேலும், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்டவர் குடிபோதையில் இருந்தார் என்பதை அறிய மருத்துவ பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

Also Read  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயாவுக்கு மாற்றம்…!

இந்நிலையில், கேரள பாஜக தலைவர் எஸ். சுரேஷ் , “பினராயி விஜயன் ஆடியில் இருக்கும் போலீஸ்காரர்கள் குற்றவாளிகளை விட்டு விட்டு சாமானியர்களிடம் தங்களின் பலத்தை காட்டுவது சரியா? பிரச்சினையை சட்டரீதியாக எதிர் கொள்வதற்கு பதிலாக சாமானியர்கள் மீது ஆதிக்கத்தை காட்டுவது காவல்துறையின் வாடிக்கையாகிவிட்டது” என கடுமையாக விமர்சித்துள்ளார்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா 2 அலை எப்போது முடிவுக்கு வரும்…! – நிபுணர் விளக்கம்

sathya suganthi

மத ரீதியான சர்ச்சை கருத்து..! மன்னிப்பு கோரிய பாகிஸ்தான் வீரர்..!

Lekha Shree

இந்தியர்களை எப்படி மீட்பது.? : பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை.!

mani maran

பெகாசஸ் விவகாரம்: விசாரணை ஆணையம் அமைக்க மேற்கு வங்க அரசு உத்தரவு..!

suma lekha

TikTok Ban | டிக்டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்கு மத்திய அரசு தடை

Tamil Mint

பாஜக வேட்பாளர் வாகனத்தில் வாக்குபெட்டி – தேர்தல் அதிகாரிகள் தந்த பலே பதில்…!

Devaraj

கார் விலையை உயர்த்திய முன்னணி கார் நிறுவனம்… எவ்வளவு தெரியுமா?

Lekha Shree

ஏன் தாமதமாக வந்தாய் என கேட்ட தாயை கொலை செய்த மகன்! – அதிர்ச்சி சம்பவம்

Tamil Mint

புலியிடம் சிக்காமல் லாவகமாக தப்பிக்கும் வாத்து… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

கல்லை எடுப்பதற்கு பதிலாக கிட்னியையே எடுத்த மருத்துவர்கள்! பல ஆண்டுகளுக்கு பிறகு வந்த அதிரடி தீர்ப்பு

suma lekha

திருப்பதியில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு

Devaraj

மிரட்டும் கொரோனா; பிரசாரத்தை ரத்து செய்த மம்தா…!

Lekha Shree