உலகம் சுற்றிய டீக்கடைக்காரர் காலமானார்!!!


மனைவியுடன் பல நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்த கேரள டீக்கடைக்காரர் மாரடைப்பால் காலமானார்.

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் கேஆர் விஜயன் . அவரது மனைவி மோகனா. இவர்கள் கொச்சியில் ‘ஸ்ரீ பாலாஜி காபி ஹவுஸ்’ என்ற பெயரில் சிறிய ‘டீக்கடை’ ஒன்றை நடத்தி வந்தனர். பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்பது மோகனாவின் விருப்பம். இதை தனது கணவர் விஜயனிடம் விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தங்கள் டீக்கடையில் கிடைக்கும் வருமானத்தின் சிறு பகுதியை அதாவது தினமும் 300 ரூபாய் என சேமித்து வைத்துள்ளனர்.

Also Read  பாலியல் வன்கொடுமை வழக்கில் ராக்கி கட்டினால் ஜாமீன்… விநோத வழக்கில் கடுப்பான உச்சநீதிமன்றம்!

அதன்படி 2007-ம் ஆண்டு விஜயன் தனது மனைவியுடன் முதல் முறையாக வெளிநாட்டு பயணம் செய்தார். அவர் முதலில் இஸ்ரேல் நாட்டிற்கு சுற்றுலா சென்றார். அதன் பின்னர் தங்கள் சேமிப்பு மற்றும் சிறு கடன்களின் உதவிகளுடன் கடந்த 14 ஆண்டுகளில் விஜயன் – மோகனா தம்பதி இதுவரை 26 நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். 

இந்தநிலையில், டீக்கடை நடத்தி உலகின் பல நாடுகளுக்கு சுற்றுலா சென்று பிரபலமான விஜயன் கொச்சியில் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். மரணமடைந்த விஜயன் தனது மனைவி மோகனாவுடன் கடைசியாக கடந்த மாதம் ரஷியாவுக்கு சுற்றுலா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read  கலால் வரி அதிகரிப்பால் பன்மடங்கு உயர்ந்துள்ள மத்திய அரசின் வருவாய்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரஜினிகாந்துக்கு இந்திய திரைப்படத்துறையின் உயரிய விருது அறிவிப்பு

Devaraj

ராமர் கோயில் கட்ட குவியும் நிதி – ரூ.2,100 கோடி வசூல்!

Lekha Shree

டெல்லி மயானங்களில் இடமில்லை: பூங்காக்களில் தகனமேடைகள் அமைக்கப்படும் அவலநிலை…!

Devaraj

ஆட்டோவில் வைத்து 6 முறை…. மகாராஷ்டிராவில் நடந்த கொடுமை

Lekha Shree

ஹீலியம் பலூனில் நாயை கட்டி பறக்கவிட்ட நபர் கைது!

Shanmugapriya

“இது வேற லெவலா இருக்கே!” – ‘Money Heist’ வெளியீட்டு நாளில் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த நிறுவனம்!

Lekha Shree

ஜெகன்மோகன் அரசு நிர்வாகம் குறித்து ஆந்திர உயர்நீதிமன்றத்தின் விசாரணை உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

Tamil Mint

அசாமிலேயே இந்த குழந்தை தான் அதிக எடையுடன் பிறந்து உள்ளதாம்!

Shanmugapriya

பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி குஜராத் செல்கின்றார்.

Tamil Mint

“பெகாசஸ் நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை” – மத்திய அரசு

Lekha Shree

பீகார் சட்டமன்ற தேர்தலில் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

Tamil Mint

சிங்கத்துக்கே கொரோனா : செல்லப்பிராணிகளிடம் இருந்து தள்ளி இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

sathya suganthi