முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது கேரள பெண் தொழிலதிபர் பணமோசடி புகார்…!


முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 14 கோடி ரூபாய் மோசடி செய்து கொலை மிரட்டல் விடுப்பதாக கேரளாவை சேர்ந்த பெண் தொழிலதிபர் நெல்லை சரக டிஐஜியிடம் புகார் அளித்துள்ளார்.

கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ஷர்மிளா என்ற தொழிலதிபர் இன்று நெல்லை சரக டிஐஜியிடம் புகார் அளித்துள்ளார். அதில், “எனது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு இல்லை. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரால் தொடர்ந்து மிரட்ட படுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அந்த பெண் தொழிலதிபர், “நாங்களும் விஜயபாஸ்கர் குடும்பத்தினரும் பல இடங்களில் ஒன்றாக கூடியுள்ளோம். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.

மேலும் அவர் என்னுடன் மொபைலில் தகவல் பரிமாற்றம் செய்த ஆவணங்களும் என்னிடம் உள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு தொழில் ரீதியாக எனக்கு ஏற்பட்ட பாதிப்பின் போது என்னுடைய நகைகளை பத்திரமாக வைப்பதாக கூறி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவரது மனைவி ரம்யா விஜயபாஸ்கரும் சேர்ந்து என்னிடமிருந்து 14 கோடி ரூபாய் வரையிலான பணம் மற்றும் நகைகளை பெற்று கொண்டனர்.

Also Read  போகிற போக்கில் சசிகலாவுக்கும் குட்டு வைத்த கமல்...!

தொடர்ச்சியாக பணம் கேட்டுக் கொண்டே இருந்ததால் கடந்த 2019ஆம் ஆண்டு 3 கோடி ரூபாய் பணத்தை மட்டும் என்னிடம் கொடுத்துவிட்டு என்னை மிரட்டி வீடியோவும் எடுத்துக்கொண்டனர்.

இந்த பணத்தையும் அவரது நெருங்கிய பழக்கம் உள்ள மருத்துவர் மூலமாகத்தான் திருப்பித் தந்தனர். இன்னும் எனக்கு தரவேண்டிய பணம் மற்றும் நகையை திருப்பி தரவேண்டும் என்று கேட்டால் என் மீது பொய் வழக்குகள் போட்டு என்னை தமிழகத்திற்குள் வரவிடாமல் செய்கின்றனர்.

Also Read  கள்ளக்குறிச்சி: பள்ளி மாணவன் - மாணவி மர்ம மரணம்…! ஆணவக் கொலையா?

இப்போது எனது வழக்கறிஞர்கள் திருநெல்வேலியில் இருப்பதால் அவர்களை சந்திக்க செங்கோட்டை வழியாக வந்தேன். இதனால், எனக்கு கொலை மிரட்டல்விடுகின்றேன்.

எனவே, எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நெல்லை சரக டிஐஜியிடம் மனு அளித்துள்ளேன். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் என்னுடன் பேசிய ஆவணங்கள் அனைத்தும் தமிழக டிஜிபியிடம் கொடுக்க உள்ளேன்.

Also Read  மயிலாடுதுறை: கூட்ட மிகுதியால் அரசு பேருந்தை நடுரோட்டில் நிறுத்தி சென்ற ஓட்டுநர்..!

மேலும், தமிழக முதல்வரையும் தீபாவளிக்குப் பிறகு சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளன்” என தெரிவித்தார்.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 14 கோடி ரூபாய் மோசடி செய்து கொலை மிரட்டல் விடுப்பதாக கேரளாவை சேர்ந்த பெண் தொழிலதிபர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிமுகவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு

Tamil Mint

ஈபிஎஸ்-ஓபிஎஸ் திடீர் சந்திப்பு! – காரணம் இதுதான்?

Lekha Shree

தாயை குளியல் அறைக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்த மகன்!

Shanmugapriya

11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த சலுகை – தமிழக அரசு உத்தரவு

sathya suganthi

கார்த்தி சிதம்பரம், நயினார் நாகேந்திரனுக்கு என்று உறுதி

Tamil Mint

விமர்சனங்களை வரவேற்கிறேன் – கமல் பளிச்

Devaraj

“ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடு!!” – இஸ்லாமியரை மிரட்டிய இருவர் கைது..!

Lekha Shree

காதல் கணவனின் இறப்பு தாங்க முடியாமல் மனைவி தற்கொலை…..

VIGNESH PERUMAL

ஓயாமல் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது: இனி நடவடிக்கை பாயும்: ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட முதல்வர்.!

mani maran

“புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் அவங்கள!” – திருடன் அளித்த புகாரால் பரபரப்பு…!

Lekha Shree

முன்னாள் அமைச்சர் எஸ். பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை.!

suma lekha

தமிழர் கண்டுபிடித்துள்ள வாட்ஸ் அப்பிற்கான மாற்று செயலி! 50 ஆயிரத்தை கடந்துள்ள பதிவிறக்கம்!

Tamil Mint