a

வடகொரியாவில் ஜீன்ஸ், வெளிநாட்டு படங்களுக்கு தடை… ஏன் தெரியுமா?


வடகொரியாவில் இயங்கும் கிம் ஜோங் உன் அரசு சமீபத்தில் ஜீன்ஸ் மற்றும் வெளிநாட்டு படங்களுக்கு தடை விதித்தது.

அமெரிக்கா, தென்கொரியா போன்ற வெளிநாடுகளின் அடையாளங்களை முற்றிலுமாக அழித்து ஒழிக்கும் கடுமையான புதிய சட்டமாக இது அறிமுகப்படுத்தபட்டிருக்கிறது.

வெளிநாட்டு படங்களை பார்த்து அவற்றின் மொழி வழக்கை பயன்படுத்தினாலும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என அந்த சட்டம் சொல்கிறது.

அதாவது தென் கொரியாவில் இருந்து திரைப்படங்களை சட்டவிரோதமாக கொண்டு வந்தால் அதற்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்பதை அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு ஏற்பாடு என சிலர் கூறுகின்றனர்.

அதிபர் கிம் ஜோங் உன் பிற்போக்கு சிந்தனை என்று அரசு கூறும் வெளிநாட்டு அடையாளங்களை முற்றாக அழிக்கும் வகையிலான கடுமையான சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

தென்கொரியா அமெரிக்கா போன்ற நாடுகளின் திரைப்படங்கள், நாடகங்கள் போன்றவற்றை யாராவது அதிக அளவில் வைத்திருந்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

Also Read  கொரோனாவால் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 நாடுகளின் பட்டியல் இதோ..!

அத்தகைய படங்களை பார்த்துக் கொண்டிருக்கும் போது பிடிபட்டால் 15 ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டும்.

அரசு ஊடகத்துக்கு அதிபர் கிம் அண்மையில் கடிதம் ஒன்றை எழுதினார். அதில் இளைஞர்கள் மத்தியில் நிலவும் விரும்பத்தகாத, தனித்து செயல்படுகிற, சோசலிச, எதிர்ப்பு வழக்கங்களை ஒழிக்கும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

கே-பாப் இசைக்குழுவினரை போல முடி வெட்டிக் கொண்டு, குட்டையாக உடை அணிந்திருந்த 3 இளம்வயதினரை சீர்திருத்த பள்ளிக்கு அரசு அனுப்பி விட்டதாக தென் கொரியாவில் இருந்து செயல்படும் டெய்லி என்கே என்ற ஆன்லைன் இதழ் கூறுகிறது.

நாட்டில் மக்கள் வேதனைகளை அனுபவித்து வருவதால் அவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து எந்த தகவலும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் கிம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Also Read  ஒரே ஒரு டுவீட்டுதான்…! பிட் காயின் மொத்த மவுசும் காலி…!

வடகொரியாவில் லட்சக்கணக்கான மக்கள் பசியால் வாடுவதாக கருதப்படுகிறது. அத்தகைய சூழலிலும் அவர்கள் அரசின் தீவிர பரப்புரைக்கு ஆதரவாக இருக்க வேண்டுமே தவிர நல்ல வாழ்க்கைக்கு சென்றுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக தென் கொரியாவில் இருந்து செயல்படும் நாடக குழு தனது நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தி இருக்கிறது.

Also Read  அலுவலகம் கூட இல்லாத நிறுவனம்… இந்தியாவில் ரூ.36 லட்சம் கோடி முதலீடு செய்வதாக விளம்பரம்..!

இப்போது வெளியுலகத் தொடர்பு முற்றிலுமாக அறுந்து போன நிலையில் இருக்கிறது வடகொரியா. சீனாவிலிருந்து அத்தியாவசிய பொருள்கள் வருவது நின்றுவிட்டது.

சில பொருள்கள் வந்து கொண்டிருந்தாலும் இறக்குமதியின் அளவு மிக மிகக் குறைந்துவிட்டது. நிதி எல்லாம் அணு ஆயுத திட்டங்களுக்கு அதிகமாக செலவிடபடுகிறது.

மக்கள் முன்னெப்போதும் இல்லாத மோசமான சூழலை சந்திக்கிறார்கள் என கிம் கடந்த ஆண்டில் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

தென்கொரியாவுக்கு செல்ல வேண்டும் என்பது பற்றிய எந்த கனவும் இளைஞர்களிடம் வந்துவிடக் கூடாது என்பதே இதன் நோக்கம் என்கிறார் டெய்லி என்கே இதழின் தலைமை ஆசிரியர் லீ சாங் யோங்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எரிமலை வெடிப்பு 5 கி.லோ மீட்டர் தூர பொதுமக்களுக்கு எச்சரிக்கை…..

VIGNESH PERUMAL

ஐ.நா. சபையில் சீர்திருத்தங்கள் தேவை: மோடி வலியுறுத்தல்

Tamil Mint

இதுவரை இல்லாத அளவில் கொரோனா தொற்று எண்ணிக்கை: 6 லட்சத்துக்கும் மேலாக உயர்வு

Tamil Mint

ஈரானில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனையை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது.

Tamil Mint

டிரம்ப்புக்கு முதல் தோல்வி

Tamil Mint

விண்வெளிக்கு செல்ல உள்ளார் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்…!

sathya suganthi

‘கடல் சளி’ – காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள ஆபத்து..! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..!

Lekha Shree

மியான்மரில் போராட்டம் நடத்தினால் 20 ஆண்டு சிறை – கிடுக்கு பிடியை இறுக்கும் ராணுவம்

Tamil Mint

ஹோலி வாழ்த்து சொன்ன அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்…!

Devaraj

“இந்தியாவின் நிலை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்” – உலக சுகாதார அமைப்பு

Shanmugapriya

ரகசிய திருமணம் புரிந்தார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்…!

sathya suganthi

ஏன் திருமணம் செய்துகொள்ள வேண்டும்? – மலாலா

Shanmugapriya