ஐபிஎல் 2021: டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா..!


டெல்லி அணிக்கு எதிரான 2வது குவாலிபயர் ஆட்டத்தில் கொல்கத்தா அணி த்ரில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

2வது தகுதி சுற்று போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல் ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

Also Read  தடுப்புகளை மீறி மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர்! - பின்னோக்கி சென்ற கோலி! - வைரலாகும் வீடியோ

கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர்.

பிரித்வி ஷா 18 ரன்னில் அவுட்டாகி வெளியேற அடுத்து வந்த ஸ்டோனிஸும் 18 ரன்னில் வெளியேறினார். ஸ்ரேயாஸுடன் ஜோடி சேர்ந்து தவான் நிதானமாக ஆடினார்.

Also Read  ஐபிஎல் 2021: பெங்களூரு அணி வீரர் வாஷிங்டன் சுந்தர் விலகல்…!

36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷிகர் தவானும் அவுட்டாகி வெளியேற, பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர்.

இதனால் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் எடுத்திருந்தது.

Also Read  கொல்கத்தாவை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ்!

136 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் சுப்மான் கில் மற்றும் வெங்கடேச ஐயர் இருவரும் டெல்லி அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதற விட்டனர்.

55 ரன்கள் விளாசிய நிலையில் வெங்கடேஷ் ஐயர் அவுட்டானார். இவரை தொடர்ந்து கில் 46 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

அதன் பின்னர் வந்த தினேஷ் கார்த்திக், மோர்கன், ஷாகிப் அல் ஹசன், சுனில் நரேன் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர்.

ஆட்டத்தின் கடைசி ஓவரின் 5வது பந்தில் திரிபாதி 6 அடித்து கொல்கத்தாவின் வெற்றியை உறுதி செய்தார். இதனால் நாளை டைபெறவுள்ள இறுதிப் போட்டியில் சென்னை அணி உடன் மோதவுள்ளது கொல்கத்தா அணி.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்!

Lekha Shree

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: 278 ரன்களுக்கு சுருண்டது இந்தியா.!

suma lekha

துப்பாக்கி சுடுதலில் வெண்கலம்: பதக்கங்களை குவிக்கும் இந்தியா.!

mani maran

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை சமன் செய்தது இந்திய அணி!

Tamil Mint

கெத்தா விளையாடிய யுனிவர்சல் பாஸ் – அதிக சிக்சர்களை குவித்து சாதனை!

Devaraj

மாஸ் காட்டிய சச்சின், யுவராஜ் – தென்னாப்பிரிக்காவை பந்தாடிய இந்தியா!

Devaraj

5 ஆண் வீரர்களுடன் நீ எப்படி செல்வாய்.? : தமிழக வீராங்கனைக்கு மறுக்கப்பட்ட வாய்ப்பு.!

mani maran

பயோ பபுளில் கணவர்… கண்ணாடி கேலரிக்குள் மனைவி… கிரிக்கெட் வீரரின் வைரல் புகைப்படம்!

Lekha Shree

ராஜஸ்தான் – பஞ்சாப் இன்று பலப்பரிட்சை!

Jaya Thilagan

வெள்ளி வென்ற ‘தங்கமகன்’ மாரியப்பனை வாழ்த்திய திமுக எம்.பி. கனிமொழி..!

Lekha Shree

ஷ்ரேயாசுக்கு அறுவை சிகிச்சை வெற்றி!

Jaya Thilagan

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் வெல்லுமா இந்தியா?

Lekha Shree