a

சேலை உடுத்தி இளைஞர் பதிவிட்ட புகைப்படத்திற்கு பெருகும் ஆதரவு! – காரணம் தெரியுமா?


கொல்கத்தாவை சேர்ந்த புஷ்பக் என்ற இளைஞர் வங்காள புத்தாண்டான ஏப்ரல் 15ன் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறவினர்களுக்கும் மாநில மக்களுக்கும் புடவை அணிந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதற்கு பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

ஆண், பெண் பாலின வேறுபாட்டை முற்றிலுமாக ஒழிக்கவேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி, அந்த வேறுபாட்டை உடையில் இருந்து களையவேண்டும் என பல பேஷன் நிபுணர்கள் கூறிவருகின்றனர்.

Also Read  வேளாண் சட்டங்களால் மண்டிகள் அழியும்: ராகுல்காந்தி காட்டமான பேச்சு!

அக்கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக இத்தாலியில் வசிக்கும் கொல்கத்தாவை சேர்ந்த புஷ்பக் என்ற இளைஞரின் செயல் அமைந்துள்ளது.

இதற்கு முன் அவர் கடந்த ஆண்டும் லிப்ஸ்டிக் பூசிக்கொண்டு அவர் தாய்க்கு அனுப்பிய புகைப்படம் வைரல் ஆனது. அப்புகைப்படத்திற்கு அக்கம்பக்கத்தினர் மட்டுமல்லாது அவரது தாயும் கண்டனம் தெரிவித்தார்.

அதையடுத்து புஷ்பக் அவரின் அக்கம்பக்கத்தினருக்கு லிப்ஸ்டிக்கை அனுப்பி வைத்து “விரைவில் மீண்டு வாருங்கள்” என கூறியிருந்தார். மேலும், அடுத்த நாளும் லிப்ஸ்டிக் பூசிய புகைப்படத்தை பகிர்ந்தார்.

தற்பொழுதும் லிப்ஸ்டிக் பூசிக்கொண்டு பச்சை நிற சேலை உடுத்தி அவர் பதிவிட்டுள்ள விழிப்புணர்வு புகைப்படத்திற்கு பாராட்டுக்களும் நல்ல வரவேற்புகளும் கிட்டியுள்ளது.

பாலிவுட் நடிகர்கள் ரன்வீர் சிங் , ஆயுஷ்மான் குர்ரானா, ஜிம் சர்ப் ஆகியோரும் இதுபோன்ற பேஷன்களை முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் ரன்வீர் சிங் ஹைஹீல்ஸ் அணிந்து அதற்கு ஏற்றவாறு உடை அணிந்து பதிவிட்ட புகைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

Also Read  மாட்டு சாணம் சிகிச்சை.. இந்த கொடிய தொற்று ஏற்படலாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியா: 2 லட்சத்தை நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..!

Lekha Shree

ஆக்சிஜன் தாருங்கள்…! நன்றியோடு இருப்பேன்…! – அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கமாக கடிதம்

Devaraj

யார் இந்த அர்ஜுன மூர்த்தி ? இவர் திமுகவினர் உடன் தொடர்புகள் கொண்டுள்ளாரா ?

Tamil Mint

பாஜக வேட்பாளர் வாகனத்தில் வாக்குபெட்டி – தேர்தல் அதிகாரிகள் தந்த பலே பதில்…!

Devaraj

விலைவாசி உயர்வா?… அதெல்லாம் பழகிடும்பா…! – சர்ச்சையை கிளப்பிய பீகார் அமைச்சரின் பேச்சு

Lekha Shree

அசாமில் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 50% இட ஒதுக்கீடு – காங்கிரஸ் வாக்குறுதி!

Lekha Shree

கொரோனா பரவல் அதிகரிப்பு – புதுச்சேரியில் முழு ஊரடங்கு!

Lekha Shree

தன் உறவினருக்கு ஆக்சிஜன் கேட்டு ட்விட்டரில் பதிவிட்ட நபர் மீது எப்ஐஆர் பதிவு! – உ.பி.யில் கொடூரம்

Shanmugapriya

இந்தியாவில் 21.5% பேருக்கு கொரோனா பாதிப்பு! ஆதாரத்துடன் தெரிவித்த செரோ சர்வே!

Tamil Mint

இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு தேவை.. எய்ம்ஸ் தலைமை மருத்துவர் கருத்து…

Ramya Tamil

முழு ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வு – இந்தியாவுக்கு அமெரிக்க நிபுணர் அறிவுரை

sathya suganthi

நீட் தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடு

Tamil Mint