“உப்புமா”வை வைத்து கலாய்த்த நெட்டிசன்கள்…! மன்னிப்பு கேட்ட குஷ்பூ…!


தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்தே மத்திய அரசை ஒன்றிய அரசு என்றுதான் அழைத்து வருகிறது.

தமிழ்நாடு அரசின் இந்த உபயோகம் தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினும் சட்டசபையில் விளக்கம் அளித்தார்.

ஒன்றிய அரசு என்று சொல்வதை சிலர் குற்றம் போல பார்க்கிறார்கள் என்றும் அது குற்றம் இல்லை, அரசியலமைப்பு சட்டத்தில் இப்படித்தான் இருக்கிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

இனி எப்போதுமே ஒன்றியம் என்றுதான் குறிப்பிடுவோம் என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சை ஷேர் செய்து பாஜக உறுப்பினர் குஷ்பு கண்டனம் தெரிவித்து இருந்தார்.

Also Read  பெண் காவலர்களுக்கு ஆண் தாயாக விளங்குகிறார் ஸ்டாலின் - முன்னாள் காவலர்

மேலும், இந்தியா என்பது மாநிலங்களில் உருவாக்கப்பட்டது இல்லை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் வரலாற்றை சரியாக படிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்த குஷ்பூ, மாநிலங்கள் தான் இந்தியாவால் உருவாக்கப்பட்டது என்றார்.


இந்த நிலையில் மாநிலங்கள் எல்லாம் இந்தியா மூலம் உருவானது என்ற குஷ்புவின் கருத்துக்கு நெட்டிசன்கள் பலர் விமர்சித்திருந்தனர். மேலும் இது தொடர்பாக பல மீம்ஸ்கள் வெளியானது.

Also Read  ஓய்வூதியர்களின் வங்கி கணக்கை முடக்க வில்லை: அதிகாரி விளக்கம்

ரவை, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தண்ணீர், நல்லெண்ணெய், கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு ஆகியவற்றினால் ஆனதா உப்புமா அல்லது உப்புமாவினால் ஆனதா ரவை, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி,, தண்ணீர், நல்லெண்ணெய், கறிவேப்பிலை, உளுந்தம்பருப்பு எல்லாம் என்றும் நெட்டிசன்கள் கலாய்த்திருந்தனர்.


மாவட்டங்கள் இணைந்தது மாநிலம், மாநிலங்கள் இணைந்ததுதான் இந்தியா. ஆனால் குஷ்பு இதற்கு அப்படியே எதிராக பேசுகிறார் என்றும் குஷ்பு பேசுவது தவறு என்றும் நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் விமர்சனம் வைத்து இருந்தனர்.

Also Read  “முதலில் நான் நலமாக இருக்க வேண்டும்”... கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட குஷ்பு...!

இந்த நிலையில் இது தொடர்பாக செய்த டிவிட்டிற்கு குஷ்பு மன்னிப்பு கேட்டுள்ளார்.

தனது தவறை ஒப்புக்கொள்ளாதவர்களை விட தவறுக்கு மன்னிப்பு கேட்பவர்கள் உயர்ந்தவர்கள் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தன்னுடைய டிவிட்டிற்கு மன்னிப்பு கேட்கிறேன் என்றும் தவறான விஷயத்தை போஸ்ட் செய்துவிட்டேன் என்றும் தன்னுடைய தவறுகளில் இருந்து பாடம் கற்கிறேன் என்றும் குஷ்பு வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளார்.செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பூந்தமல்லி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட அதிகாரிகள்! வைரல் வீடியோ!

Lekha Shree

தமிழக மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் அவர்களுக்கே வழங்குவதுதான் தமிழக அரசியல்: தமிழக பா.ஜ.கவின் துணைத் தலைவர் அண்ணாமலை

Tamil Mint

ஊரடங்கு கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்ட மக்கள்… ரெம்டேசிவர் மருந்து வாங்க தள்ளுமுள்ளு!

Lekha Shree

தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

Lekha Shree

காவல்துறையினரின் காலில் விழுந்து கதறிய ‘பப்ஜி’ மதன்…!

Lekha Shree

‘முதலமைச்சர்’ மு.க.ஸ்டாலின்! வைரலாகும் புகைப்படம்!

Lekha Shree

நீட் தேர்வுக்கு எதிராக குரலெழுப்பும் நடிகர் சூர்யா…!

Lekha Shree

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றம்!

Tamil Mint

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பொழியும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

பெட்ரோல் டீசல் விலை எப்போது குறையும் ? – சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

sathya suganthi

கொரோனா ஊரடங்கு தளர்வு : ரயில்கள் மீண்டும் இயக்கம்

sathya suganthi

“democracy or democrazy?” – நடிகை ஓவியாவின் வைரல் ட்வீட்..!

Lekha Shree