a

கொடைக்கானலுல சட்டவிரோதமா சொத்து – வரிமானவரித்துறையை சரிகட்ட PSBBல சீட்டு – குட்டிபத்மினி புகார்


சென்னையில் டிசிப்பிளினுக்கு பெயர் போன கேகேநகர் பத்ம சேஷாத்ரி பள்ளியில், மாணவிகளுக்கு ஆசிரியரே பாலியல் தொல்லை கொடுத்த செய்தி அந்த பள்ளியை மேலும் பிரபலமடைய வைத்துள்ளது.

பாஜகவுக்கு ஆதரவாக பேசுவதாக அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் மதுவந்தியும் அவரது தந்தை ஒய்ஜி மகேந்திரனும் இப்பள்ளியில் ஜஸ்ட்டு டிரஸ்டி தான் என பிரச்சனையில் இருந்து ஒதுங்கிவிட்டனர்.

ஆனாலும் தனது பாட்டி ஒய்ஜி ராஜலட்சுமி ரத்தமும் வியர்வையும் சிந்தி உருவாக்கிய இந்த பள்ளிக்கு கலங்கம் ஏற்படுத்துவோரை சும்மா விடமாட்டேன் என்று மதுவந்தி சூளுரைத்துள்ளார்.

ஆனால், பிஎஸ்பிபி பள்ளி மீதான புகார்கள் அடுக்கடுக்காக வந்தமயமாக தான் உள்ளன. பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை மட்டுமின்றி மதம் மற்றும் சாதி ரீதியிலான தாக்குதல்களுக்கு உள்ளாகி உள்ளனர் என்ற தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளது.

Also Read  PSBBயில் "கோயில் தீர்த்தம்" கொடுத்து அத்துமீறல் - அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்

அதற்கு ஆதாரமாக 2 ஆஸ்கார் விருதுகளை வென்ற இசை புயல் ஏ.ஆர்.ரகுமான், பிஎஸ்பிபி பள்ளியில் படிக்கும் போது எதிர்கொண்ட தாக்குதல்களை தெரிவிக்கும் வீடியோக்கள் வைரலாகி உள்ளது.

பிஎஸ்பிபி பள்ளி உள்ள இடம் ஏமாற்றி பறிக்கப்பட்டது என்றும் பள்ளிக்கு சொந்தமான கட்டிடங்கள் அனுமதியின்றி இன்றி கட்டப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டுகளும் மற்றொரு பக்கம் வலம் வந்துக்கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், கொடைக்கானலில் சட்டவிரோதமாக ஒய்ஜி ராஜலட்சுமி வாங்கிய சொத்திற்கு வரிமானவரித்துறையை சரிகட்டுவதற்கான பிஎஸ்பிபி பள்ளியில் தனது மகளுக்கு சீட்டு வழங்கப்பட்டதாக குட்டி பத்மினி பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், பத்ம சேஷாத்திரி பள்ளியில் சீட் வாங்குவதற்காக கியூவில் நின்று கொண்டிருந்தேன் என்றும் அப்போது ஒய்ஜி ராஜலட்சுமி அழைத்ததால் அவங்க அறைக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

Also Read  தமிழகம்: இன்றைய கொரோனா நிலவரம்

அங்கே சென்றபோது, ஏம்மா… நீ எல்லாம் கியூவில் நிற்கலாமா.. இந்த ஸ்கூலுக்கு முதன்முதலில் பெரியவங்க எல்லாம் அடிக்கல் நாட்டும் போது, நீ அந்த டைம்ல வந்திருக்கிற…உன் கையால அடிக்கல் நாட்டியிருக்கிற.. எனக்கு ரொம்ப நல்லா தெரியும் என்று ஒய்ஜிராஜலட்சுமி கூறி சீட்டு வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது மகள் பிஎஸ்பிபியில் படிச்சிகிட்டு இருக்கும்போது, தன்னை கூப்பிட்டு அனுப்பியதாகவும் தனது மகள் குறித்து எதோ பேச அழைப்பதாக எண்ணி பள்ளிக்கு சென்றதாகவும் குட்டி பத்மினி தெரிவித்துள்ளார்.

Also Read  ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

அங்கே, நீ வருமானவரித்துறைக்கு சீரியல் பண்ணிக்கிட்டு இருக்கியே, ரொம்ப நல்லா இருக்கு. தொடர்ந்து நான் பார்த்துக்கிட்டு இருக்கேன்னு ஒய்ஜிராஜலட்சுமி கூறியதாகவும் கொடைக்கானலில் ஒரு சொத்து வாங்கியிருக்கிறோம். ஸ்கூல் அக்கவுண்ட்ல வாங்கியிருக்க வேண்டுமாம். ஆனால் வேறு ஒரு அக்கவுண்ட்ல வாங்கிட்டாங்களாம். சட்டப்படி அது தப்பு போல இருக்கும். அதனால வருமான வரித்துறை பெரிய அளவில் வரி போட்டுட்டாங்க போல இருக்கு. அதனால அவரை பார்த்து பேசி எப்படியாவது அதை கரெக்ட் பண்ணி கொடுக்கணும்னு கேட்டதாகவும் குட்டிபத்மினி தெரிவித்துள்ளார்.

அப்ப தான் தனக்கு புரிந்தது. இவங்க இதுக்காக தான் தனக்கு சீட் கொடுத்திருக்காங்க என்று குட்டி பத்மினி கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“ஊரடங்கு காலத்தில் மதுபானக் கடைகளை மூட தயங்குவது ஏன்?” – சீமான்

Lekha Shree

அதிகரிக்கும் கொரோனா; மீண்டும் சிகிச்சை வார்டுகளாக மாறும் கல்லூரிகள்

Devaraj

முக்கிய ஆய்வை மேற்கொள்ளும் முதல்வர்

Tamil Mint

கொரோனாவால் இறந்தவர்கள் உடலை ஒப்படைக்க லஞ்சம்… 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்..!

Lekha Shree

தமிழகத்தில் கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி

Tamil Mint

“அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்”: சீமான்

Tamil Mint

முழு ஊரடங்கு மேலும் நீட்டிப்பா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

sathya suganthi

கோவையில் மற்றுமொரு காவல் உதவி ஆய்வாளரின் அடாவடி…!

Devaraj

இன்று முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி

Tamil Mint

தடகள பயிற்சியாளர் மீது குவிந்த பாலியல் புகார்கள் – நாகராஜனை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி!

Lekha Shree

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள்

Tamil Mint

டிசம்பருக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் – அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தல்

Tamil Mint