a

தடுப்பூசி… கொரோனா… மாரடைப்பு..! கே.வி.ஆனந்த் மரணத்துக்கு என்ன காரணம்!


பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் நெஞ்சுவலி காரணமாக இன்று காலை உயிரிழந்த நிலையில், அவரது மரணம் குறித்த அதிர்ச்சியூட்டும் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.

கே.வி.ஆனந்த் கடந்த 20 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், அவருக்கு கடந்த 24 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Also Read  டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேறிய நாடு…! என்ன காரணம் தெரியுமா?

அவரது மனைவி மற்றும் மகள்களுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், குடும்பத்துடன் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வந்தனர்.

இந்த நிலையில், கே.வி.ஆனந்துக்கு நேற்று இரவு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில், தானே காரை ஓட்டிச் சென்று ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆனதாக கூறப்படுகிறது.

Also Read  மாஸ்டர் பட இயக்குநருக்கு கொரோனா…! தனியார் மருத்துவமனையில் அனுமதி…!

இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக கே.வி.ஆனந்த் அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாளே நடிகர் விவேக் உயிரிழந்த நிலையில், தடுப்பூசி போட்டப்பிறகு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கே.வி.ஆனந்த் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் திரைத்துறையினரிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Also Read  இன்றைய தலைப்புச் செய்திகள் | 12.05.2021

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுக்கும் மாற்று வேண்டும் – மயில்சாமி பேட்டி

HariHara Suthan

துபாயில் அந்தரத்தில் சாகசம் செய்த பிக்பாஸ் பிரபலம்…!

Devaraj

விஷாலின் சக்ரா படத்துக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு

Tamil Mint

கொரோனா நோயாளிகளுக்காக “மாஸ்டர்” மாளவிகா பதிவிட்ட வீடியோ…!

sathya suganthi

’பாரதி கண்ணம்மா’ லட்சுமி பாப்பாவா இது? செம கியூட் புகைப்படங்கள்!

Lekha Shree

விக்னேஷ் சிவன், நயன்தாரா நிச்சயதார்த்தம் முடிந்ததா? விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம் வைரல்…

HariHara Suthan

சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

ஜெயம் ரவியை நம்பி அந்தரத்தில் சிக்கி தவிக்கும் இயக்குனர்…..

VIGNESH PERUMAL

பிரபல நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் மரணம்.. சோகத்தில் தமிழ் திரையுலகம்..

Ramya Tamil

ரஜினி படத்தில் கமல்: லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் பிளான்

Tamil Mint

விக்ரமின் சாமுராய் பட கதாநாயகி முதல் முறையாக வெளியிட்ட அவரது குழந்தையின் வீடியோ இதோ..!

HariHara Suthan

விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆட்டம் போடும் 17 மாத குழந்தை..! வைரலாகும் வீடியோ இதோ…

HariHara Suthan