a

கோலிக்கு பந்துவீச மறுத்த ஆர்.சி.பி. வீரர்! – என்ன காரணம்?


நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 5ல் வெற்றியும் ஒரு தோல்வியும் கண்டுள்ளது.

டெல்லியில் தற்போது விளையாடி வரும் பெங்களூரு அணியில் விராட் கோலிக்கு பயிற்சியின்போது பந்துவீச நியூசிலாந்து வீரர் கைல் ஜேமிசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டிற்குப் பயன்படுத்தப்படும் டியுக்ஸ் பந்தில் தனக்கு பௌலிங் போடுமாறு விராட் கோலி, கோரிக்கை விடுத்ததாகவும் அதற்கு ஜேமிசன் மறுத்து விட்டதாகவும் ஆர்சிபி ஆல்-ரவுண்டர் டேன் கிறிஸ்டியன் கூறியுள்ளார்.

Also Read  ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் நடராஜன்!

இருவரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் எதிர் எதிரே களமிறங்குகின்றனர். ஜேமிசனின் பந்துவீச்சு நுணுக்கங்களை தெரிந்து கொண்டால் விராட் கோலி அவரை பிரித்து மேய்ந்து விடுவார்.

இதனால் தனது நுணுக்கங்களை உலகின் ஆபத்தான பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி அறிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே ஜேமிசன் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Also Read  குணத்திலகாவின் சர்ச்சை அவுட் - ஹோப்பின் அதிரடி சதத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் கைல் ஜேமிசனை ஆர்சிபி அணி 15 கோடிக்கு ஏலம் எடுத்தது.

ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்தியா – நியூசிலாந்து இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷப் தொடருக்கான இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read  சென்னையில் பயிற்சியை தொடங்கும் சிஎஸ்கே! விரைவில் ‘தல’ தரிசனம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரன் மழை பொழிந்த பிரித்வி ஷா – டெல்லி அணி அபார வெற்றி!

Jaya Thilagan

கே.எல். ராகுலின் பொறுப்பான ஆட்டம் – பெங்களூரை வென்ற பஞ்சாப் கிங்ஸ்!

Devaraj

ஐபிஎல் 2021: ராஜஸ்தான் அணிக்கு முதல் வெற்றி!

Lekha Shree

‘வாத்தி கம்மிங்’ ஆட்டம் போட்ட டெல்லி கேபிடல்ஸ் அணி! வைரலாகும் வீடியோ…

HariHara Suthan

மும்பை அணிக்கு எதிரான வெற்றியை கோட்டை விட்டுவிட்டு ரசல் கூறிய விளக்கம்!

Lekha Shree

குருவை வீழ்த்த புது டெக்னிக் – சொல்கிறார் ரிஷப் பண்ட்!

Jaya Thilagan

மகாராஷ்டிராவில் இரவு நேர ஊரடங்கு – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தளர்வு!

Jaya Thilagan

PM cares மீது நம்பகத்தன்மை இல்லை! – கொரோனா நிதியை வேறுவிதமாக இந்தியாவுக்கு அனுப்பிய பேட் கம்மின்ஸ்!

Lekha Shree

ஐபிஎல் திருவிழா இன்று முதல் தொடக்கம்!

Jaya Thilagan

சிஎஸ்கே வின் மெர்சல் ஆட்டம் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மீண்டும் ஒரு தோல்வி!

Jaya Thilagan

“நான் வந்துட்டேன்னு சொல்லு” மீண்டும் இணைகிறாரா ஆர்.ஜே. பாலாஜி?

Jaya Thilagan

ஐபிஎல்லில் இளம் வயதில் அரை சதம் விளாசிய வீரர்கள்!

Jaya Thilagan