a

அலுவலகம் கூட இல்லாத நிறுவனம்… இந்தியாவில் ரூ.36 லட்சம் கோடி முதலீடு செய்வதாக விளம்பரம்..!


இந்தியாவில் 36 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக நாளிதழ்களில் முதல் பக்க விளம்பரம் அளித்த நிறுவனத்திற்குச் சொந்தமாகக் அலுவலக கட்டடம் கூட இல்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த மே 24ம் தேதி தி எகனாமிக் டைம்ஸ் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் முதல் பக்கத்தில் ஒரு விளம்பரம் வெளியாகி இருந்தது.

அதில் லாண்டோமஸ் வென்சர்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் இந்தியாவில் 50,000 கோடி அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பு சுமார் 36 லட்சம் கோடி) முதலீடு செய்ய விரும்புவதாக அந்த விளம்பரத்தில் வெளியாகி இருந்தது.

இந்த தொகை என்பது கடந்த ஆண்டு இந்தியாவில் செய்யப்பட்ட மொத்த அமெரிக்க முதலீடுகளின் மதிப்பை விட 71 மடங்கு அதிகம்.

மேலும், அந்த குழுமத்தின் தலைவர் பிரதீப் குமார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மிகப்பெரிய ஒரு தொகையை முதலீடு செய்ய இருப்பதாக நாளிதழில் விளம்பரம் வெளியானது சந்தேகத்தை ஏற்படுத்தியதை அடுத்து இது குறித்து புலனாய்வு மேற்கொள்ளப்பட்டது.

நிறுவனத்தின் இணையதளமான http://landomus.com என்ற இணையதளத்திற்கு சென்று பார்த்தபோது ஒரே ஒரு பக்கம் மட்டுமே இருந்தது. அதில் விளம்பரத்தில் கொடுக்கப்பட்டு இருந்த அதே தகவல் மட்டுமே இடம்பெற்றிருந்தது.

Also Read  3 ஆயிரம் மருத்துவர்கள் ராஜினாமா - காரணம் இது தான்…!

வழக்கமாக இருக்கும் நிறுவனம் குறித்த விவரம் (முகவரி, கிளைகள், செயல்பாடுகள்) தொடர்பான தகவல் தெரிவிக்கும் பக்கம் இந்த இணையதளத்தில் இல்லை.

அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள பிரம்மாண்ட கட்டிடங்களைப் முகப்புப் பக்கங்களாக கொண்ட அந்த இணையதளத்தில் நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் ஆலோசகர்கள் 10 பேர்களின் பெயர் மற்றும் புகைப்படம் மட்டுமே உள்ளது.

அவர்கள் குறித்த விவரங்கள் இல்லை நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் இயக்குனர் பிரதீப்குமார், சத்ய பிரகாஷ் மற்றும் இயக்குனர் மம்தா என அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள ஒரு முகவரி அந்த நிறுவனத்தின் முகவரியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக ஒரு மின்னஞ்சல் முகவரியும் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் நிறுவனத்தின் தொலைபேசி எண் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இதனை தொடர்ந்து நிறுவனத்தின் முகவரி இடம் பெற்று இருக்கும் இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு குடியிருப்புகள் மட்டுமே இருந்தன.

Also Read  கரடி சாலையை கடப்பதற்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து…!

மேலும் அங்கு இந்த நிறுவனம் மட்டுமல்ல எந்த நிறுவனத்தின் அலுவலகமும் இல்லை. இது தொடர்பாக விசாரித்த போது அங்கு இதுவரை எந்த நிறுவனமும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய கேள்விகளுக்கு நிறுவனத்தின் தலைவர் சார்பில் சுருக்கமாக பதிலளிக்கப்பட்டது.

அதில், “இந்திய ஒன்றிய அரசுக்கு எங்களைப் பற்றி தகவல்களை அனுப்பியுள்ளோம். பதிலுக்காக காத்திருக்கிறோம். பதில் கிடைத்தவுடன் அனைத்து விவரங்களையும் உங்களுக்கு அனுப்புகிறோம். பொதுவெளியில் வெளியிடுகிறோம்” என தெரிவித்திருந்தார்.

நிறுவனத்தின் முகவரி தொடர்பான கேள்விக்கு அமெரிக்காவின் நியூஜெர்சியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

நாளிதழில் வெளியான விளம்பரம் தொடர்பாக இந்திய அரசிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. அதிகாரபூர்வமாக அறிவிப்பும் இல்லை.

இந்நிலையில் நிறுவனம் குறித்து மேலும் ஆய்வு செய்தபோது நிறுவனத்தின் இணையதளம் 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பெங்களூருவில் லேண்ட் பேங்க் என்ற பெயரில் உருவாக்கப்பட்டு உள்ளது தெரியவந்தது.

லாண்டோமஸ் ரியாலிட்டி வென்சர்ஸ் என்ற பெயரில் கம்பெனி விவகாரத்துறை அமைச்சகத்தில் 2015ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read  கேரளா அருகே கடலுக்கடியில் தீவு? வியப்பூட்டும் தகவல்கள்…!

அதன் மூலதனம் ஒரு லட்ச ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

நிறுவனத்தின் கடைசி ஆய்வுக்குழு கூட்டம் 2018 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற இருப்பதாக கம்பெனி விவகாரத்துறை அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிறுவனத்தின் முகவரிக்கு சென்று பார்த்தபோது அங்கு வேறொரு நிறுவனம் இயங்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதன் மூலம் நிறுவனத்தின் அலுவலகம் என்று ஒன்று இல்லை என தெரிய வந்துள்ளது.

நிறுவனத்தின் ஆலோசகர்கள் பட்டியலில் ஒரு வெளிநாட்டு பெண்மணி புகைப்படம் இடம் பெற்றுள்ளது. ஆனால், அவரைப்பற்றிய விவரத்தை லிக்கட் இன்-ல் தேடியபோது பெயருக்கும் புகைப்படத்திற்கு வித்தியாசங்கள் இருந்தது.

மற்றவர்களின் பெயரிலும் லிங்கட் இன் கணக்குகள் நீண்ட காலமாக செயல்பாட்டில் இல்லாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு அலுவலக கட்டடம் கூட இல்லாத ஒரு நிறுவனம் ரூ.36 லட்சம் கோடி இந்தியாவில் முதலீடு செய்வதாக அறிவித்திருப்பது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“இந்தியாவில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை” – உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் வெளியீடு…!

Devaraj

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்

Tamil Mint

கூகுள் சார்பாக இந்தியாவுக்கு ரூ.135 கோடி மதிப்பிலான உதவிகள்! – சுந்தர் பிச்சை

Lekha Shree

ஆர் கே சுரேஷுக்கு ரகசிய திருமணம்

Tamil Mint

மத்தியப் பிரதேசத்தில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு…!

sathya suganthi

”மம்தாவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன்” – சுவேந்து அதிகாரி!

Tamil Mint

முடங்கிய யூடியூப்…! மீம்ஸ் போட்டு கலாய்த்த நெட்டிசன்கள்…!

sathya suganthi

உலக சுகாதார நிறுவனத்தால் சீனாவிற்கு ஏற்படும் அழுத்தம் !!!

Tamil Mint

மஹாத்மா காந்தி சிலை அவமதிப்பு: அமெரிக்கா கண்டனம்

Tamil Mint

சாம்பல் நிற நீர் நாய் கடலில் விடப்படும் வீடியோ…!

Devaraj

2 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி இலவசம்; அசத்திய இந்தியா!

Lekha Shree

அமெரிக்க சுகாதாரத்துறை பதவியில் திருநங்கை மருத்துவர்; குவியும் பாராட்டு

Devaraj