‘அடேங்கப்பா..!’ – 90 ஆண்டுகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ள மறைந்த இளவரசர் பிலிப்பின் உயில்! என்ன காரணம்..!


மறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் உயிலை 90 ஆண்டுகளுக்கு திறக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயில் பிரச்சனை என்பது அடித்தட்டு மக்கள் முதல் அரச குடும்பம் வரை பெரும் பிரச்சினையாகவே இருக்கிறது. உலகில் உள்ள அரசு குடும்பங்களிலேயே மிகவும் செல்வாக்குமிக்க குடும்பம் இங்கிலாந்து அரசு குடும்பம் தான்.

இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்திற்கு உலக அளவில் பெரும் மதிப்பும் செல்வாக்கும் இருந்து வருகிறது. இங்கிலாந்து மக்களுக்கு அரச குடும்பத்தின் மீது உள்ள அன்பு விவரிக்க முடியாதது.

இதனால் அரச குடும்பத்தில் நடக்கும் ஒரு சிறு நிகழ்வும் அங்கு தலைப்பு செய்தியாகிவிடும். இளவரசர் பிலிப் கடந்த ஏப்ரல் மாதம் அவரது 99 வயதில் மரணமடைந்தார்.

Also Read  கொரோனாவை அடுத்து அமெரிக்காவை அச்சுறுத்தும் இயற்கை சீற்றம்!

இந்த நிலையில் இளவரசர் பிலிப் எழுதியுள்ள உயில் தொடர்பாக லண்டன் உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதில், இளவரசர் பிலிப் எழுதி வைத்துள்ள உயிலில் உள்ள விவரங்களை வெளியிடாமல் அந்த உயில் 90 ஆண்டுகளுக்கு சீல் வைத்து பாதுகாக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Also Read  டயானாவின் 60வது பிறந்தநாள்…! முரண்பாடுகளை மறந்து இணைந்த வில்லியம்ஸ்-ஹாரி…!

மேலும், மறைந்த இளவரசர் பிலிப் அவரது மனைவி 2ம் எலிசபெத்தின் கௌரவத்திற்காக ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. அப்படி அந்த உயிலில் என்னதான் உள்ளது என்பது தற்போது மக்களிடையே பேசு பொருளாகி உள்ளது இளவரசர் பிலிப்பின் சொத்து மதிப்பு சுமார் 30 மில்லியன் பவுண்டுகள் என கணக்கிடப்பட்டு உள்ளது. ஆனால், இதில் பெரும்பாலான சொத்துக்கள் அவரது மனைவி மகாராணி 2ம் எலிசபெத்துக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read  குழந்தையின் வாயில் ஓட்டை இருப்பதாக நினைத்து மருத்துவமனைக்கு சென்ற பெற்றோர்! - பிறகு என்ன நடந்தது தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

காசாவில் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா அழைப்பு…!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி போட மறுப்பவர்களின் செல்போன் இணைப்பு துண்டிப்பு…!

sathya suganthi

இங்கிலாந்தில் சிக்கிய சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரன் – இந்தியாவுக்கு நாடு கடத்தல்

Devaraj

உலக பணக்காரர்கள் பட்டியல்: அமேசான் நிறுவனரை பின்னுக்கு தள்ளிய Louis Vuitton ஓனர்

sathya suganthi

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை… வலுக்கும் எதிர்ப்புகள்!

Lekha Shree

முகக்கவசம் அணியாமல் சர்ச்சையில் சிக்கிய அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன்

Tamil Mint

சீனாவில் ட்ரெண்டாகும் ‘சிக்கன் பேரண்டிங்’…! அப்படியென்றால் என்ன?

Lekha Shree

அதிபர் டிரம்பின் கொரோனா குறித்த சிறப்பு ஆலோசகர் ராஜினாமா

Tamil Mint

ஓட்டுனர் இல்லாமல் தானாக நகரத் தொடங்கிய ட்ரக்! – வைரல் வீடியோ

Shanmugapriya

கேன்சரால் பாதிப்படைந்த மூதாட்டியின் விருப்ப உணவை சமைத்துக் கொடுக்க 850 கி.மீ பயணம் செய்த குழு!

Shanmugapriya

அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு பேச்சு.!

Tamil Mint

மெக்சிகோவில் கால்பந்து போட்டியின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி

Tamil Mint