லதா ரஜினிகாந்த்தின் ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் கெடு


ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் காலி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

லதா ரஜினிகாந்த் கிண்டியில் உள்ள வாடகை கட்டடத்தில் பள்ளியை நடத்தி வருகிறார். இதன் உரிமையாளர்களான வெங்கடேஷ் வரலு, பூர்ணச்சந்திரராவ் ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

Also Read  மின்னணு உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலீட்டு தொகையில் 30% வரை மூலதன மானியம் - தமிழக அரசு.

அதில், லதா ரஜினிகாந்த் அவர்கள் பள்ளி கட்டடத்துக்கான வாடகை தொகை ரூ.11 கோடி வரை நிலுவையில் உள்ளதாக கூறினர். 

அந்த வழக்கில், ரூ.11 கோடியை உடனடியாக தரமுடியாததால், உடனடியாக ரூ. 2 கோடி கொடுக்கும்படியும், மாதம் ரூ. 10 லட்சம் தரும்படியும் நீதிமன்றம் தெரிவித்தது. 

Also Read  "ரயில்களை வழக்கம் போல் இயக்க ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட முடியாது" - சென்னை உயர்நீதிமன்றம்

இதற்கான ஒப்பந்தத்தில் வெங்கடேஷ்வரலு கையெழுத்திட்ட நிலையில் லதா ரஜினிகாந்த் ஆவணத்தில் கையெழுத்து போடாமலும், பணத்தை தராமலும் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த வழக்கை மீண்டும் விசாரித்த நீதிமன்றம் இடத்தை காலி செய்ய அறிவுறுத்தியுள்ளது. கொரோனா காலம் என்பதால் லதா தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இந்நிலையில் ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலி செய்ய ஏப்ரல் 30ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Also Read  பாஜக 60 சீட் கேட்டு தொடர் பிடிவாதம் எதிரொலி: அதிமுக இன்று அவசர ஆலோசனை

மேலும் 2021-22  கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை, தற்போது அப்பள்ளி இயங்கும் முகவரியில்  நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜெயலலிதா வீடு: தீபக் கிளப்பும் புது பூதம்

Tamil Mint

கமல் தலைமையில் மெகா கூட்டணி அமையுமா?

Lekha Shree

ஊரடங்கு தளர்வுகள்: நகரப் பேருந்துகளுக்கு மட்டும் அனுமதி?

Lekha Shree

கோவை, காஞ்சி மாவட்ட கலெக்டர்களுக்கு வைரஸ்… மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளுக்கு பரிசோதனை நடத்தப்படுமா?

Tamil Mint

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கொலை மிரட்டல்

Tamil Mint

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மலையேறும்போது மூச்சுவிட சிரமம் ஏற்படும் என்பதால் முகக்கவசம் கட்டாயமில்லை- கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

Tamil Mint

தமிழகத்தில் கொரோனாவின் ஏறுமுகம் தொடங்கியது! – விரைவில் ஊரடங்கிற்கு வாய்ப்பு?

Lekha Shree

மயிலாப்பூர்: 3 வது மாடி பால்கனி பெயர்ந்து விழுந்ததால், அச்சத்தில் மக்கள்!

Tamil Mint

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பொழியும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

தமிழகத்தில் வெகுவாக குறைந்தது கொரோனா பாதிப்பு…!

Lekha Shree

நட்சத்திர வேட்பாளர்கள் முன்னிலை நிலவரம்… முழு விவரம் இதோ…!

Devaraj

கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை எப்போது? – அமைச்சர் பொன்முடி விளக்கம்

sathya suganthi