a

செவிலியர்கள் பாதங்களில் மலர் தூவி நன்றி கூறிய வழக்கறிஞர் – அரசு மருத்துவமனையில் நெகிழ்ச்சி சம்பவம்…!


நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்தும் பணியில் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வழக்கறிஞர் ஒருவர் கொரோனாவிலிருந்து மீண்டதையடுத்து, தனக்குச் சிகிச்சை அளித்த செவிலியர்களின் பாதங்களில் பூக்களைத் தூவி நன்றி தெரிவித்த நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வு அரங்கேறி உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அறந்தாங்கி அரசு மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்ட வழக்கறிஞர் மணிமாறன், இருமல், மூச்சுத்திணறலுடன் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளார்.

அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் சீரான கவனிப்பால், மணிமாறன் 5 நாட்களில் குணம் பெற்றார்.

Also Read  சென்னையில் 43 போலீஸ் நிலையங்களில் சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டனர்.

மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குச் செல்லத் தயாரான மணிமாறன், அருகிலேயே இருந்த பூக்கடையில் பூக்களை வாங்கி, தனக்குச் சிகிச்சை அளித்த இரண்டு செவிலியர்களையும் வரவழைத்து, அவர்களின் கால்களில் பூக்களைத் தூவி வணங்கி தனது நன்றியைத் தெரிவித்தார்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத செவிலியர்கள் நெகிழ்ந்துபோயினர்.

Also Read  தமிழகத்தில் தீவிரமாகும் கொரோனா பாதிப்பு: சென்னையில் மீண்டும் லாக்டவுன்?

இது குறித்து வழக்கறிஞர் மணிமாறன் பேசுகையில், அரசு மருத்துவமனையில எப்படிப் பார்க்கப் போறாங்களோன்னு மொதல்ல பயத்தோடதான் போனேன். ஆனா, நடந்ததே வேற. அங்க பணியிலிருந்த செவிலியர்கள் அடிக்கடி உடல் நிலையை விசாரிச்சு மருந்து, மாத்திரை கொடுத்தாங்க. அன்னைக்கு ஒரு நாள் ஆக்சிஜன் லெவலைப் பார்ப்பதற்குள் தூங்கிட்டேன். இரவு வந்த அந்த செவிலியர் பொறுமையா என்னை எழுப்பி, ஆக்சிஜன் லெவலைப் பார்த்துக் குறிச்சுக்கிட்டு, `ஆபத்தில்ல, நல்லா இருக்கீங்க’னு நம்பிக்கை கொடுத்துட்டுப் போனாங்க. என்று கூறினார்.

இந்தக் கொரோனா சூழல்ல தங்களோட உயிரை பணயம் வெச்சு நமக்காக வேலைபார்க்கிறவங்களுக்கு தன்னால் பணம், பொருள் எல்லாம் கொடுக்க முடியாத நிலை என்றும் தனது நன்றியை எப்படியாவது அவங்களுக்கு வெளிப்படுத்தணும்னு நெனச்சுதான், அவங்க பாதங்களில் மலர்களைத் தூவினேன் என்றும் மணிமாறன் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  தமிழகத்தில் மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா பாதிப்பு...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன்

Tamil Mint

“ மே 31 வரை ஷூட்டிங் ரத்து..” ஆர்.கே. செல்வமணி அறிவிப்பு..

Ramya Tamil

இரவில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம் : அரசுக்கு இவ்வளவு கோடி ரூபாய் இழப்பா…!

Devaraj

ஜூன் 14ல் ஆன்லைன் மூலம் பொறியியல் தேர்வு: அமைச்சர் பொன்முடி

Lekha Shree

தமிழகத்தின் புதிய அமைச்சரவை…! வைரலாகும் குரூப் போட்டோ

sathya suganthi

விழுப்புரம்: கடன் சுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தற்கொலை

Tamil Mint

ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் வாழ்த்து !!

Tamil Mint

குடிமகன்கள் அலப்பறை – போதையில் போலீஸ் ஜீப் அடித்து உடைப்பு!

Lekha Shree

வங்கிக் கணக்கில் இருந்து ஆறு மாதங்கள் பணம் எடுக்காதவர்களின் ஓய்வூதியத்தை நிறுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tamil Mint

அமைச்சர் விஜயபாஸ்கர் மீது உதயநிதி தாக்கு

Tamil Mint

சென்னை-மதுரை சிறப்பு ரயில் ரத்து

Tamil Mint

“2021ம் ஆண்டு தேர்தலில் மக்கள் நிராக்கரிக்கப்படும் கட்சியாக திமுக இருக்கும்” – அமைச்சர் ஜெயக்குமார்

Tamil Mint