சூர்யாவின் ‘ஜெய் பீம்’ பட விவகாரம்: ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு வன்னியர் சங்க மாநில தலைவர் நோட்டீஸ்!


‘ஜெய் பீம்’ பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும் இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்த திரைப்படம் ஜெய் பீம். இது அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் வாழ்த்து மழை பொழிந்தனர்.

Also Read  விஷாலின் 'சக்ரா' திரைப்படம் ஒடிடியில் வெளியீடு!

அதைத்தொடர்ந்து ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை இழிவுபடுத்தியுள்ளதாக சர்ச்சை எழுந்தது.

சர்ச்சைக்கு காரணமான காலண்டர் காட்சியில் சிறு திருத்தும் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும், இந்த சர்ச்சை முற்றிலும் முடியவில்லை.

ராஜாகண்ணுவை கடுமையாக தாக்கும் காவல்துறை ஆய்வாளரின் பெயர் ஏன் மாற்றப்பட்டது? என கேள்வியெழுந்தது. இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் எழுதிய கடிதமும் பதிலுக்கு சூர்யா எழுதிய கடிதமும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே மயிலாடுதுறையில் நடிகர் சூர்யா நடித்த வேல் திரைப்படம் திரையிடப்பட்டது. திரை அரங்கிற்கு வந்த பாமகவினர் திரைப்படக் காட்சியை நிறுத்த சொன்னதால் அத்திரைப்படத்தின் திரைப்படம் காட்சி நிறுத்தப்பட்டது.

Also Read  தியேட்டர்கள் இந்த தினங்கள் இயங்க தடை வழங்கவேண்டும் என வழக்கு.!

நடிகர் சூர்யாவிற்கு எதிராக பாமகவினர் முழக்கமிட்டனர். சூர்யாவின் போஸ்டரை கிழித்தனர். நடிகர் சூர்யா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் அவரை தாக்கும் இளைஞர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட பாமக சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதனை கண்டிக்கும் விதமாக ட்விட்டரில் #WeStandwithSuriya என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டானது.

இந்நிலையில், நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும் இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு வன்னியர் சங்க மாநில தலைவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோர வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Also Read  பொங்கலுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு..! - தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு..!

மேலும், 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோராவிட்டால் அனைவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் எனவும் மனுதாரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இது தேவையா? – போதைக்காக தின்னரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து குடித்து இறப்பு!

Shanmugapriya

பண்டிகை கால சிறப்பு ரயில் பட்டியல்

Tamil Mint

ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீது பாய்ந்தது மேலும் ஒரு வழக்கு…!

sathya suganthi

காவிரி கரையாம் தஞ்சை மண்ணின்…! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மு.க.ஸ்டாலின்

sathya suganthi

தமிழகம்: படிப்படியாக குறையும் கொரோனா பாதிப்பு..!

Lekha Shree

“இந்த மாதம் எங்களுக்கு 2 கோடி தடுப்பூசி கொடுங்க” : மத்திய அரசிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்.

mani maran

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை குறித்து ஐகோர்ட் கருத்து

Tamil Mint

90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் “சூப்பர்மேன்” பட இயக்குனர் மரணம்

sathya suganthi

CBSE பாடப்புத்தகத்தில் திருவள்ளுவர் புரோஹிதர் போல் சித்தரிப்பு! – மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

Shanmugapriya

கவினின் ’லிஃப்ட்’ திரை விமர்சனம்..!

suma lekha

அரசியல்வாதியை மணக்கும் தனுஷ் பட நடிகை… க்யூட் ஜோடியின் போட்டோ இதோ…!

Tamil Mint

எம்.எஸ் தோனி பட நடிகர் தற்கொலை! அதிர்ச்சியில் பாலிவுட்!

Tamil Mint