பழம்பெரும் நடிகர் ‘வெண்ணிற ஆடை’ ஸ்ரீகாந்த் மறைவு..! திரையுலகினர் இரங்கல்..!


1965ஆம் ஆண்டு இயக்குனர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் ஸ்ரீகாந்த்.

ஸ்ரீகாந்தின் திரை வாழ்வில் முக்கிய அத்தியாயமாக அமைந்தது தங்கப்பதக்கம் படம். அந்த படத்தில் சிவாஜி கணேசனுக்கு மகனாக போட்டி போட்டு நடித்து இருந்தார்.

அதைத்தொடர்ந்து சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர் தொடக்கி ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து புகழ் பெற்றவர் ஸ்ரீகாந்த்.

தமிழில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் ஈரோட்டை பூர்வீகமாகக் கொண்டவர்.

Also Read  அண்ணாத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு; உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்!

இந்நிலையில் அவர் வயது முதிர்ச்சி காரணமாக நேற்று காலமானார். அவருடைய மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவருடைய மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் அதில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில், “என்னுடைய அருமை நண்பர் ஸ்ரீகாந்தின் மறைவு எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன், “கதாநாயகன், வில்லன், குணச்சித்திரப் பாத்திரங்கள் என ஆல்ரவுண்ட் நடிப்புக் கலைஞராகத் திகழ்ந்த ஸ்ரீகாந்த், தீவிரமான இலக்கிய வாசகராகவும் ஜெயகாந்தனின் ஆப்த சிநேகிதராகவும் இருந்தார். இன்று தன் இயக்கங்களை நிறுத்திக்கொண்டார். இதய கனத்தோடு வழியனுப்பிவைப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

Also Read  மீண்டும் இணையும் 'டாக்டர்' வெற்றி கூட்டணி? ரசிகர்கள் குதூகலம்..!

முன்னதாக ஸ்ரீகாந்தின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து இருந்தார். அவரைத் தொடர்ந்து நடிகர் சிவகுமார், கார்த்தி உள்ளிட்ட பலர் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பட வாய்ப்புக்காக ஒத்துழைப்பு அளிக்க சொன்ன நபர்… தோளுரித்து காட்டிய அனிதா சம்பத்..!

suma lekha

விரைவில் வெளியாகும் ‘வலிமை’ டீசர்? – ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் #ValimaiTeaser

Lekha Shree

மகனின் ஆசைக்கிணங்க மீண்டும் திருமணம் செய்துக் கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ்..!

suma lekha

சிம்பு அறிக்கைகளில் அடிக்கடி பயன்படுத்தும் ATMAN வார்த்தை எதற்காக தெரியுமா?… தரமான சம்பவத்திற்கான அடித்தளம்…!

Tamil Mint

பாபநாசம் 2 படத்தில் கௌதமிக்கு பதில் இந்த நடிகையா?

Shanmugapriya

“காதலில் விழுந்தேன்”… காதலியின் போட்டோவை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகர்…!

Tamil Mint

‘விக்ரம்’ பட சண்டைக்காட்சிகளை இயக்கும் இரட்டையர்கள்… வெளியான செம்ம அப்டேட்!

Lekha Shree

மண்டேலா திரைப்படம் – நடிகர் யோகி பாபு மீது போலீசில் புகார்…!

Devaraj

நடிகர் சூர்யாவுக்கு எதிராக களமிறங்கும் பாஜக இளைஞரணி?

Lekha Shree

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது ‘பீஸ்ட்’ Second Look…!

Lekha Shree

‘கும்கி’ பட இயக்குனருடன் இணையும் ‘குக் வித் கோமாளி’ அஷ்வின்?

Lekha Shree

ஆக்‌ஷன் நாயகனுக்கு ஜோடியாகும் ப்ரியா பவானி சங்கர்…! வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree