காதல் தோல்வி தந்த வைராக்கியம் : எலுமிச்சை ஜூஸ் விற்ற ஊரில் எஸ்.ஐ.யான ஆனி சிவா…!


கேரள மாநிலம் திருவனந்தபுரம் கஞ்சிராம்குளத்தை சேர்ந்த ஆனி சிவா, கல்லூரி முதலாமாண்டு பயிலும்போதே காதல் வயப்பட்டு, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி 18 வயதிலேயே காதல் திருமணம் செய்துள்ளார்.

ஒரு குழந்தைக்கு தாயான பிறகு கணவரால் கைவிடப்பட்டு நிர்க்கதியானார் ஆனி சிவா.

மனமுடைந்து போயிருந்த ஆனி சிவாவுக்கு பெற்றோர் ஆதரவும் கிடைக்கவில்லை.

கையில் 6 மாத ஆண் குழந்தையுடன் வறுமையின் வாடியவருக்கு அவரது பாட்டி ஆதரவளித்தார்.

Also Read  “கேரளாவில் பாஜக வளராததற்கான காரணம் இதுதான்” - ஒப்புதல் அளித்த பாஜக எம்.எல்.ஏ!

வறுமையால் வாடியபோது, வர்கலா கடற்கரையோரம் எலுமிச்சை ஜூஸ் விற்க ஆனி சிவா தொடங்கினார்.

வீடு வீடாக சென்று சோப்பு உள்ளிட்டவை விற்பது, திருவிழாக்களில் ஜூஸ், ஐஸ்கிரீம் கடைகள் போடுவது என அத்தனை வேலைகளையும் செய்தார்.

இந்த நிலையில் தான், 2014ம் ஆண்டு நண்பரின் உதவியால் தேர்வெழுதி பெண் காவலராக பணியில் சேர்ந்துள்ளார் ஆனி சிவா.

அதை தொடர்ந்து, விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் தேர்வில் வெற்றிப்பெற்று காவல் உதவி ஆய்வாளராக ஆனி சிவா கடந்த 25ம் தேதி பொறுப்பேற்றார்.

Also Read  கொரோனா தொற்றால் சீதாராம் யெச்சூரி மகன் மரணம்...!

எந்த ஊரில் வயிற்றுப்பிழைப்புக்காக எலுமிச்சை ஜூஸ் விற்றாரோ, அதே ஊரில் இப்போது காவல் உதவி ஆய்வாளர். ஆனி சிவா வலம் வருகிறார்.

மன உறுதிக்கும் நம்பிக்கைக்கும் அடையாளம் என ஆனி சிவாவை கேரள காவல்துறை புகழ, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், ஆனியின் வெற்றி, பலரது கனவுகளுக்கு ஊக்கமளிக்கும் என பாராட்டினார்.

Also Read  கேரளா: குழந்தை உட்பட 18 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி..!

தோல்விகளால் துவண்டு கிடக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆனி சிவாயின் சாதனை, ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றால் மிகையில்லை.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை 2 கி.மீ தூரம் தோளில் சுமந்து சென்ற பெண் எஸ்.ஐ! – குவியும் பாராட்டுகள்!

Tamil Mint

இந்தியாவில் மேலும் 76,472 பேருக்கு தொற்று, ஒரே நாளில் 65 ஆயிரம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

Tamil Mint

ஸ்கூட்டரில் நாயை கட்டி இழுத்து சென்ற கொடூரம்…! வைரலாகும் வீடியோ…!

Devaraj

மருத்துவ படிப்புகளில் OBC இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம்தான் அனுமதி அளிக்க வேண்டும்: இந்திய மருத்துவ கவுன்சில்

Tamil Mint

மூன்றாவது மாடியில் இருந்த குடும்பத்தை காப்பாற்ற தன் உயிரைப் பணயம் வைத்த காவலர்!

Shanmugapriya

மே, ஜூன் மாதங்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படும் – மத்திய அரசு

Lekha Shree

கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா…!

suma lekha

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனாவால் உயிரிழப்பு…!

sathya suganthi

யூபிஎஸ்சி தலைவராக பேராசிரியர் பிரதீப் குமார் ஜோஷி நியமனம்:

Tamil Mint

கொரோனா பரவல் எதிரொலி – 1 வாரத்திற்கு முழு ஊரடங்கு…!

Lekha Shree

மக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ள உலக அதிசயத்தின் கதவுகள்…!

Lekha Shree

கணவர் வீரமரணம் – ராணுவத்தில் இணைந்த மனைவி!

Lekha Shree