2400 மைல்கள் மிதந்து வந்த கடிதம்… என்ன எழுதியிருந்தது தெரியுமா?


போர்ச்சுகீஸை சேர்ந்த 17 வயதான இளைஞர் கிறிஸ்டியன் சாண்டோஸ் என்பவர் தனது உறவினருடன் மீன் பிடிப்பதற்காக கடற்கரைக்கு சென்றுள்ளார்.

அப்போது பாட்டில் ஒன்று அவருக்கு கிடைத்துள்ளது. அதில் ஒரு பேப்பர் இருந்தது. அதில் ஆரஞ்சு வண்ண பேனாவினால் குறிப்பு ஒன்று எழுதப்பட்டு இருந்தது.

Also Read  கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு - பேக்கரியின் பலே ஐடியா...!

இது அந்த இளைஞரின் ஆர்வத்தை தூண்ட, பாட்டிலை சரி செய்து அதில் உள்ள பேப்பரை வெளியே எடுத்து படித்துள்ளார்.

அந்த குறிப்பு கடந்த 2018ம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ரோட் இஸ்லேண்டைசேர்ந்த சிறுவன் எழுதியுள்ளான்.

அதில், “நான் வேர்மொண்டை சேர்ந்தவன். எனக்கு 13 வயது ஆகிறது. இந்த குறிப்பை கண்டு பிடித்தீர்கள் என்றால் messageinabottle2018@gmail.com என்ற மெயில் ஐடிக்கு தகவல் அனுப்புங்கள்” என எழுதியிருந்தது.

இந்த சம்பவம் குறித்து கிறிஸ்டியனின் அம்மா தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அந்த பேப்பரின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

Also Read  மழை நீர் மட்டுமே உணவு…! அமேசான் காட்டில் சிக்கி தவித்த பைலட்டின் திக் திக் 38 நாட்கள் …!

குறிப்பிடப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் தெரிவித்தும் எந்த தகவலும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பாட்டில் சுமார் 2400 மைல்கள் கடந்து கிறிஸ்டியன் இடம் வந்து சேர்ந்துள்ளது. சினிமா பாணியில் நடந்துள்ள இந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read  பத்திரிகையாளர் கசோகி படுகொலை - சவுதி இளவரசர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

யூடியூப் நிறுவனத்தின் அதிரடி முடிவு – அரசியல், மது, புகையிலை விளம்பரங்களுக்கு தடை!

Lekha Shree

29 நாடுகளுக்கு பரவிய ‘லாம்ப்டா’ வேரியண்ட்! எந்தளவிற்கு ஆபத்து?

Lekha Shree

“எவர் கிவன் கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்க நான் காரணமா?” – அதிர்ந்த பெண் மாலுமி!

Lekha Shree

கொரோனா நோயாளிகளை கண்டுபிடிக்க உதவும் நாய்கள்…!

sathya suganthi

எல்லா வகை கொரோனாவையும் சமாளிக்கும் “சூப்பர் வாக்சின்” – எலி மீது பரிசோதனை…!

sathya suganthi

கிரண் பேடிக்கு எதிராக களமிறங்கியுள்ள முதல்வர் மற்றும் பலர்

Tamil Mint

85 நாடுகளுக்கு பரவிய டெல்டா வைரஸ் – வெளியான அதிர்ச்சி தகவல்..!

Lekha Shree

தெற்காசிய நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் 3 மடங்கு உயர வாய்ப்பு! – அமெரிக்க ஆய்வறிக்கையில் தகவல்!

Lekha Shree

பயணிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை…. இது அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை பாடம்…

VIGNESH PERUMAL

கண்ணுக்கு தெரியாத சிற்பம்… இவ்வளவு லட்சத்திற்கு விற்பனையா?

Lekha Shree

மிதக்கும் சீனா – அழிவை ஏற்படுத்திய ஒரு மணிநேர மழை…!

Lekha Shree

“Work From Home” லேப்டாப்பில் சார்ஜ் போட்டுக்கொண்டே பணி செய்யலாமா?

sathya suganthi