a

லேசான கொரோனா பாதிப்பு இருந்தா நல்லதுதான் – அமெரிக்க ஆய்வில் தகவல்


கொரோனா வைரஸ் தொற்றால் உடலில் நோய் எதிர்ப்பு பொருட்கள் விரைவாக மறைவதாக சில ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.

இந்த நிலையில், அமெரிக்கா செயின்ட் லூயிசில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள், கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வு முடிவில், லேசான கொரோனா பாதிப்பு, உடலில் நோய் எதிர்ப்பு பொருள் உற்பத்தியை தூண்டுகிறது என்றும் அதன்மூலம், நீடித்த பாதுகாப்புக்கு வழிவகுக்கிறது என்றும் தெரியவந்துள்ளது.

கொரோனா அறிகுறி தென்பட்ட 11 மாதங்களுக்கு பிறகு, அந்த பாதிப்புக்கு உள்ளானவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு பொருளை உற்பத்தி செய்யும் செல்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Also Read  டெல்லியில் மேலும் ஒருவாரத்துக்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு

அந்த செல்கள், லேசான கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எஞ்சிய காலம் முழுவதும் உடலில் நோய் எதிர்ப்பு பொருளை உற்பத்தி செய்துகொண்டே இருக்கின்றன என்றும் நீடித்த பாதுகாப்பை வழங்குகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அவற்றில் சில நீண்டகாலம் வாழும் பிளாஸ்மா செல்கள், எலும்பு மஜ்ஜைக்கு இடம்பெயர்ந்து, ரத்த ஓட்டத்தில் தொடர்ந்து எதிர்ப்பு பொருட்களை சுரந்துகொண்டே இருக்கின்றன என்றும் தெரிவிக்கின்றனர்.

Also Read  வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் ட்ரம்பின் அடுத்த திட்டம் இதுதான்!

கொரோனா தொற்றுக்கு பின் உடலில் நோய் எதிர்ப்பு பொருள் அளவு குறைகிறது என்றும் ஆனால் அது முற்றிலும் இல்லாமல் போவதில்லை என்றும் ஆய்வு மேற்கொண்ட மருத்துவ கல்லூரி இணை பேராசிரியரும், ஆய்வுக்குழு உறுப்பினர்களில் ஒருவருமான அலி எல்லிபெடி தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கடல் தாண்டி காரியம் சாதித்த வைகோ; பஹ்ரைனில் JEE தேர்வு மையம் அமைப்பு

Jaya Thilagan

பல பாம்புகள் தன் மீது விழுந்தபோதிலும் கேஷுவலாக பேசிக்கொண்டிருந்த நபர்! – சிலிர்க்க வைக்கும் வீடியோ!

Tamil Mint

“சிகிச்சையை நிறுத்திவைத்திருந்த நேரத்தில் கரம் கோர்த்தோம்” – கொரோனா வார்டில் நடந்த திருமணம்!

Tamil Mint

குழந்தையை பெற்றெடுத்த ஆண்! வைரலாகும் வாட்டர் பர்த் புகைப்படங்கள்!

Devaraj

தீப்பிழம்பாக காட்சியளிக்கும் ஐஸ்லாந்து நாட்டின் தலைநகர்…! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

குப்பையோடு போக இருந்த ரூ.7.5 கோடி லாட்டரி பணம் – கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த இந்தியர்!

sathya suganthi

“எங்கள் காதலின் வயது 20” – 20ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் ஓரினச் சேர்க்கை தம்பதிகள்…!

Lekha Shree

கொரோனா தொற்றை வென்று 117வது பிறந்தநாளை கொண்டாடிய கன்னியஸ்திரி!

Tamil Mint

இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு… உலக சுகாதார அமைப்பு தகவல்!

Lekha Shree

ஃபேஸ்புக் நிறுவனம் மீது அமெரிக்க அரசு வக்கீல்கள் வழக்கு!

Tamil Mint

ரிஹானாவை புகழும் பதிவுகளை லைக் செய்யும் ட்விட்டர் நிறுவனத் தலைவர்!

Tamil Mint

வாட்சப்பில் புது வசதி

Tamil Mint