a

தமிழகத்தில் 1 வாரத்துக்கு தளர்வுகள் அற்ற ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு திட்டம்!


தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 10ம் தேதி முதல் 2 வாரங்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. வரும் 24ம் தேதி ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அந்த ஆலோசனையில், இந்த மாத இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் கொரோனா பரவல் உச்சக்கட்டத்தை எட்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்தனர்.

Also Read  ஊரடங்கு விதிகளை மீறியவருக்கு ரோஜாப்பூ! - டெல்லி போலீஸ் விழிப்புணர்வு

மேலும், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரைத்தனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக்கட்சி குழு கூட்டம் தொடங்கியது.

Also Read  ஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 கொரோனா நோயாளிகள் பலி - அரசு மருத்துவமனையில் அவலம்

அதில் முதல்வர் ஸ்டாலின், “முழு ஊரடங்கை விடுமுறைகாலம் என்று பொதுமக்கள் நினைக்கின்றனர்; இது கொரோனா காலம் என்பதை மக்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை; தளர்வுகளை பயன்படுத்தி அவசியமில்லாமல் வெளியில் சுற்றுவது அதிகரித்துள்ளது.

Also Read  சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஓராண்டு சிறை…! வழக்கின் முழு விவரம்...!

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது” என கூறினார்.

இந்நிலையில் தமிழகத்தில் ஒரு வார காலத்துக்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை…. மக்கள் வாழ தகுதி இழந்த நகராக மாறி வருகிறது…..

Devaraj

சாத்தான்குளம் ஜெயராஜ் மகளுக்கு அரசு வேலை: ஆணை வழங்கப்பட்டது

Tamil Mint

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம்

Tamil Mint

மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி – சசிகலாவின் 2வது ஆடியோ ரிலீஸ்…!

sathya suganthi

‘மின்கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும்’-மு.க.ஸ்டாலின்

Tamil Mint

அரசு ஆஸ்பத்திரி டாய்லெட்டை சுத்தம் செய்த அமைச்சர்!

Tamil Mint

தமிழகம் வெற்றிநடை போட்டிருந்தால், அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன்: கோவையில் கமல்ஹாசன் பேட்டி

Tamil Mint

நவம்பர் மாதத்திற்குள் ரஜினி கட்சி ஆரம்பம்

Tamil Mint

“ஊரடங்கு காலத்தில் மதுபானக் கடைகளை மூட தயங்குவது ஏன்?” – சீமான்

Lekha Shree

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடைவிதித்த தமிழக அரசு, அடம்பிடிக்கும் இந்து அமைப்புகள்

Tamil Mint

விசாரிக்க தனிவீடு… பணம் கேட்டு மடக்கப்படும் லாரிகள்… தொடரும் படாளம் இன்ஸ்பெக்டரின் கட்டப் பஞ்சாயத்து!

Tamil Mint

சென்னை உள்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

Tamil Mint